நம்ம ஊர் ஆட்டோ காரங்க மேல கை வைக்க முடியுமா... கொல்கத்தாவின் அடையாளம் மொத்தமா மறைய போகுது!!

கொல்கத்தா (Kolkata) என்றவுடனே நம் நினைவிற்கு முதலாவதாக வரும் விஷயங்களுள் ஒன்று, அங்கு இயங்கும் டாக்ஸி (Taxi)-கள் ஆகும். நம்ம சென்னைக்கு மஞ்சள் நிறத்திலான 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷா (Auto Rickshaw)-கள் எப்படியோ அதுபோன்று கொல்கத்தாவின் பொது போக்குவரத்தின் அடையாளமாக மஞ்சள் நிற டாக்ஸிகள் விளங்குகின்றன. ஆனால், அது எல்லாம் இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு தான். என்ன நடக்க போகிறது? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹவ்ரா பாலத்தை போல், கொல்கத்தாவின் பெயர் கல்குத்தா என அழைக்கப்பட்ட காலத்தில் இருந்தே கார் டாக்ஸி சேவை அங்கு உள்ளது. நம்ம ஊரிலும் தான் டாக்ஸி சேவை உள்ளது. ஆனால், கொல்கத்தாவில் மட்டும் பெரிய அளவில் விரிவடைந்து இருப்பதற்கு காரணம், அங்கு விதிக்கப்படும் குறைந்த பயண கட்டணம் ஆகும்.

kolkata ambassador car taxi service

1960களில் கொல்கத்தாவில் துவங்கப்பட்ட இந்த டாக்ஸி சேவை ஆரம்பத்தில் பழமையான கார்களில் செயல்பட்டாலும், 1990களுக்கு பின் முழுவதுமாக அம்பாசிடார் (Ambassador) கார்களுக்கு மாறியது. ஆரம்பத்தில் அம்பாசிடார் கார் டாக்ஸிகளில் எல்லாரும் பயணம் செய்ய ஆரம்பித்தாலும், 2000ஆம் காலக்கட்டத்திற்கு பின் பழைய அம்பாசிடார் கார்களில் பயணம் செய்ய பணக்காரர்கள் விரும்பவில்லை. தங்களது வசதிக்கு ஏற்றப்படி விலையுயர்ந்த கார் டாக்ஸியை தேர்வு செய்ய ஆரம்பித்தனர்.

இருப்பினும், பாமர மக்களிடம் இருந்து கணிசமான வருவாய் கிடைத்ததால், நாடு முழுவதிலும் இருந்து அம்பாசிடார் கார்கள் கொல்கத்தாவை நோக்கி வர ஆரம்பித்தன. நம்ம ஊர் ஆட்டோவை போன்று டாக்ஸி தொழிலை நம்பி நிறைய பேர் இறங்க ஆரம்பித்தனர். எல்லா அம்பாசிடார் கார் டாக்ஸிகளுக்கும் ஒரே மாதிரியாக மஞ்சள் மற்றும் நீல நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டது.

kolkata ambassador car taxi service

இதற்கிடையில் தான், இது எல்லாவற்றிற்கும் முடிவு கட்டுவதுபோல் 2009ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு ஆணையை வெளியிட்டது. அம்பாசிடார் கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு நீண்ட வருடங்களாகி விட்டதால், இனியும் பழைய அம்பாசிடார் கார்களை பயன்படுத்த முடியாது என்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் அந்த ஆணை இருந்தது. ஆணை அப்போதே வெளியிடப்பட்டாலும், அதன் எஃபெக்ட் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளிவர துவங்கியுள்ளது.

நீதிமன்ற ஆணையின்படி, 2025 மார்ச்சில் இருந்து கொல்கத்தா டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்படும் சுமார் 7,000க்கும் அதிகமான அம்பாசிடார் கார்கள் டாக்ஸி பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட உள்ளன. அம்பாசிடார் ஆனது அடிப்படையில் இங்கிலாந்தில் விற்பனையில் இருந்த 1956 மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ்-3 (Morris Oxford Series-3) கார் ஆகும். அதாவது, அந்த பிரிட்டிஷ் காரை காப்பியடித்துதான் அம்பாசிடார் கார் வடிவமைக்கப்பட்டது.

kolkata ambassador car taxi service

இந்தியா சாலைகளுக்கும், மக்களுக்கும் ஏற்ப சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்தனர். கொல்கத்தாவில் அம்பாசிடார் கார்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு இன்னொரு காரணம், கொல்கத்தாவில் இருந்து வெறும் 20கிமீ தொலைவில் ஹிண்ட்மோட்டார் என்கிற பகுதியில்தான் அம்பாசிடார் கார்கள் உற்பத்தி தொழிற்சாலை இருந்தது. 1958ஆம் ஆண்டில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 7,000 என்பது கொல்கத்தாவில் டாக்ஸி சேவையில் உள்ள மொத்த அம்பாசிடார் கார்களின் எண்ணிக்கை கிடையாது. ஆனால், மொத்த எண்ணிக்கையில் முக்கால்வாசிக்கும் மேல் ஆகும். மேலும், 7,000 அம்பாசிடார் கார்கள் 2025 மார்ச் மாதத்தில் இருந்து அகற்றப்படுவதை போல் அடுத்தடுத்த வருடங்களிலும் மீதம் இருக்கும் அம்பாசிடார் கார்களும் படிப்படியாக நிறுத்திக் கொள்ளப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 19:07 [IST]
English summary
Kolkata ambassador car taxi service will be stopped by march 2025
மேலும்... #ambassador car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X