கண்முன்னே விபத்தில் சிக்கிய லம்போர்கினி கார்... சில மாதங்களில் ஓனர் எடுத்த அதிரடியான முடிவு!

உலகிலேயே வேகமாக அதிகரித்து வரும் மில்லியனர் மக்கள் தொகையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பல கோடிகள் மதிப்புள்ள சூப்பர்கார்களை தொழிலதிபர்கள் வாங்கும் செய்திகளையும், காட்சிகளையும் நாம் அடிக்கடி காண்கிறோம். இருப்பினும், ஒருவர் நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று லம்போர்கினி கார்களை இந்தியாவில் வாங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாததாகத் தோன்றினாலும், இது கொல்கத்தாவில் நிஜமாகவே நடந்துள்ளது!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தனியார் வர்த்தகம் & முதலீடு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்யன் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் புதிய லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரைப் பெற்றுக்கொண்ட காட்சிகளைக் காண முடிகிறது.

kolkata businessman bought lamborghini car

கடந்த நான்கு ஆண்டுகளில் இது தனது மூன்றாவது லம்போர்கினி கார் என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஹூராகேன் டெக்னிகா ரக கார்களின் உற்பத்தி 2024ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், ஹூராகேன் காரின் விற்பனையும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டெமராரியோ கார் மூலமாக மாற்றப்பட்டது.

இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்படுவதற்கு முன் டெக்னிகா காரின் கடைசி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.04 கோடியாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த இளம் மில்லியனரின் முதல் லம்போர்கினி, மஞ்சள் நிறத்திலான ஒரு ஸ்டாண்டர்ட் ஹூராகேன் கார் ஆகும். இந்த காரின் படங்கள் மற்றும் வீடியோக்களை ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kolkata businessman bought lamborghini car

பின்னர், அவர் தனது முதல் காரை ஒரு ஹூராகேன் டெக்னிகா காராக மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதாவது, ஆர்யன் இரண்டாவதாக வாங்கிய லம்போர்கினி காரும் ஹூராகேன் டெக்னிகா ஆகும். இந்தக் கார் பின்னர் ஒரு விபத்தில் சேதமடைந்தது. ஆனால், அதுகுறித்த விவரங்கள் இணையத்தில் இல்லை. பின்னர் அந்த கார் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, விபத்து நடந்த சமயத்தில் ஆர்யனின் 2வது லம்போர்கினி கார் வாங்கி ஒரு வருடம் மட்டுமே ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா 2022இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கூபே வடிவத்தில் மட்டுமே கிடைத்தது. போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் இதன் முக்கியமான போட்டி மாடலாக இருந்தது. மெக்லாரன் 720எஸ் மற்றும் ஃபெராரி எஃப்8 ட்ரிப்யூட்டோ போன்ற கார்களுடனும் இது போட்டியிட்டது.

லம்போர்கினி ஹூராகேன் கார்கள் வரிசையில் எவோ மற்றும் எஸ்டிஓ வேரியண்ட்களுக்கு இடையில் டெக்னிகா நிலைநிறுத்தப்பட்டது. எவோ சாலை பயன்பாட்டிற்கு உகந்ததாக இருந்தது, எஸ்டிஓ டிராக்கிற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பான செயல்திறனைக் கொண்டிருந்தது. டெக்னிகா இந்த இரண்டு அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு சமநிலையான காராக இருந்தது.

kolkata businessman bought lamborghini car

எஸ்டிஓ வேரியண்ட்டின் என்ஜினைப் பயன்படுத்தியதுடன், சாலைக்கு உகந்த சேஸிஸையும் டெக்னிகா கொண்டிருந்தது. மேலும், ஹுராகன் டெக்னிகா காரில் ஏரோடைனமிக்ஸ் அம்சங்களும் கணிசமாக மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்பட்டன. காரின் முன்புறம் மற்றும் பின்புறம் கோண வடிவமைப்புடன், தனித்துவமான 'Y' வடிவ பேனல்களைக் கொண்டிருந்தது.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புற ஸ்ப்ளிட்டர் அதிக டவுன்ஃபோர்ஸ் மற்றும் சிறந்த குளிரூட்டலை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது. இந்தக் கார் கார்பன் ஃபைபர் பொனெட், மேம்படுத்தப்பட்ட பின்புற டிஃப்யூசர் மற்றும் 35% அதிக டவுன்ஃபோர்ஸை வழங்கும் நிலையான பின்புற ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் வந்தது. டெக்னிகா எவோவை விட டெக்னிகா 61மிமீ கூடுதல் நீளமாக இருந்தது, இது அதன் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி கார் ஒன்றை நேரில் பார்ப்பது என்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் நிலையில், ஒருவர் நான்கே ஆண்டுகளில் மூன்று லம்போர்கினி கார்களை வாங்கியுள்ளார் என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஹூராகேன் டெக்னிகா காரை வாங்கியுள்ளார் என்பதில் இருந்து இந்த கார் மீதான ஆர்யனின் ஆர்வத்தை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2025, 15:22 [IST]
English summary
Kolkata businessman bought third lamborghini car in just 4 years check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X