கோடி கோடியாய் சொத்து இருந்தும் கம்மி விலையில் மஹிந்திரா காரை வாங்கியவர்... லம்போர்கினி கார் வீட்டில் நிற்குது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கோடி ரூபாய்கள் அளவிற்கு இல்லாமல், சில இலட்ச ரூபாய்களில் விலைகளை கொண்ட இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பெரும் பணக்காரர்கள் கூட ஆர்வத்துடன் போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர். அதாவது, ஏற்கனவே வீட்டில் ஒன்றுக்கு 2,3 சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது.

பல கோடி ரூபாய் விலை கொண்ட கார்களை பயன்படுத்தியவர்கள் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை ஓட்டி பார்த்து அவற்றின் திறன்களை பாராட்டியுள்ளனர். அந்த வரிசையில், விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari), மெக்லாரன் (McLaren) உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் செல்வந்தர் ஒருவர் மஹிந்திராவின் விலை குறைவான எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார்.

kolkata businessman buys mahindra be6

இந்த செல்வந்தரின் பெயர், பர்வீன் அகர்வால் (Parveen Agarwal) ஆகும். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராஜ்வாடா (Rajwada) குழுமத்தின் உரிமையாளரான பர்வீன் அகர்வாலிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், விலையுயர்ந்த கார்களை அவ்வப்போது வாங்கக் கூடியவராகவே பலருக்கு பர்வீன் அகர்வாலை தெரிந்துள்ளது.

லம்போர்கினி அவெண்டடார் (Aventador), ஃபெராரி 296 ஜிடிஎஸ் (296 GTS), மெக்லாரன் 720எஸ் (720S) உள்ளிட்ட அல்ட்ரா-லக்சரி ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்திருக்கும் இந்த கொல்கத்தா தொழிலதிபர் தற்போது புதியதாக பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். மேலே குறிப்பிடப்பட்ட விலையுயர்ந்த கார்கள் உடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா பிஇ 6 மிகவும் விலை குறைவானது ஆகும்.

kolkata businessman buys mahindra be6

தன்னுடைய ரேஞ்ச்சிற்கு இல்லை என்றாலும், தொழிலதிபர் பர்வீன் அகர்வால் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை வாங்கி, ஓட்டிப் பார்த்து அதன் செயல்படுதிறனை கண்டு ஆச்சிரியத்தில் வாயடைத்து போய் உள்ளார். இது அவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவின் மூலமாக நமக்கு தெரிய வருகிறது.

இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்திய ஆட்டோமொபைல் துறை நிச்சயமாக புதிய உச்சங்களை எட்டுகிறது... பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ உடன் மஹிந்திரா ஒரு புதிய அளவுகோலை உருவாக்கி உள்ளது...!! இந்த அழகான காரை நேற்று (ஏப்ரல் 11) மாலை டெலிவிரி செய்தேன். இது சிறந்த தோற்றம், சிறப்பான ஹேண்ட்லிங், அற்புதமான உட்புறங்கள் மற்றும் உயர்மட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

மஹிந்திரா வீட்டிற்கு வரவேற்கிறோம்!! காரை இவ்வளவு விரைவாக வழங்கிய எனது நண்பருக்கு நன்றி" என பர்வீன் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இவர் புதிய மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் விலைமிக்க பேக் 3 வேரியண்ட்டை பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தில் வாங்கி உள்ளார். இந்த ஆரஞ்சை 'ஃபையர்ஸ்டோர்ம் ஆரஞ்ச்' (Firestorm Orange) என மஹிந்திரா அழைக்கிறது.

இது இல்லாமல், ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரஸ்ட், டெசர்ட் மிஸ்ட் சாடின், டெசர்ட் மிஸ்ட், டாங்கோ சிவப்பு மற்றும் எவரெஸ்ட் வெள்ளை நிற பெயிண்ட் ஆப்ஷன்களிலும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், டெலிவிரிகள் கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும், அளவில் பெரிய மற்றும் விலை அதிகமான எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. பிஇ 6 காரை காட்டிலும், விலை அதிகமாக இருப்பினும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் பலரும் வாங்கி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருந்தும் பிஇ 6 எலக்ட்ரிக் காரில் எதோ ஒன்று தொழிலதிபர் பர்வீன் அகர்வாலை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 15, 2025, 15:50 [IST]
English summary
Kolkata businessman parveen agarwal buys mahindra be6 electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+