சென்னைல இருந்து கொல்கத்தா போக 600 ரூபா மட்டும்தானா! அதுவும் 3 மணி நேரத்துல போகலாமா! கதையல்ல நிஜம்..

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல ரூ. 600 மட்டுமே செலவாகும். மேலும், 3 மணி நேரத்திலேயே அங்கு சென்று விட முடியும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்படி சாத்தியம் ஆகும் என நீங்கள் கேட்கலாம். ஐஐடி மெட்ராஸ் தத்தெடுத்துக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமே இது சாத்தியம் என தெரிவித்திருக்கின்றது. அது ஓர் புதுமுக வாகனத்தைத் தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அந்த வாகனம் அதீத வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது, அதேவேளையில், குறைவான செலவீணத்தில் இயங்கும் என்றும் அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

எனவே இந்த தகவல் பலரின் கவனத்தை கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, எப்போது இது பயன்பாட்டிற்கு வரும் என்பதே பலரின் கேள்வியாக தற்போது மாறியிருக்கின்றது. நிறுவனம் இதை சீக்கிரமே பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியிலேயே தற்போது தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்த தகவலைக் கேட்டு தொழிலதிபர் ஆனந்த மஹிந்திராவும் பெருத்த ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றார்.

Sea car to connect kolkata and chennai in 3 hours

மேலும், பெங்களூருவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ் மிக அதிக அளவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தரையில் இவ்ளவு வேகத்தில் பயணிப்பது சாத்தியமற்றது. ஆகையால், புதுவகை பறக்கும் விமானாக இருக்குமோ என நீங்கள் கேட்கலாம்.

ஆனால், அதுவும் கிடையாது. புதிய வகை தண்ணீர் வழி பயணிக்கும் வாகனத்தையே ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. வாட்டர் ஃப்ளை டெக்னாலஜி (Waterfly Technologies) எனும் தொழில்நுட்பத்தையே ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் கிளைடர் (Electric Sea Glider) வகை வாகனம் ஆகும்.

இதை கடல் கார் என்றும் சொல்லலாம். ஆமாங்க, சறுக்கிச் செல்லக் கூடிய வகை வாகனம் ஆகும். நான்கு றெக்கைகளை இதுக் கொண்டிருக்கும். இது கடலின் நீர் பரப்பில் இருந்து சுமார் 4 மீட்டர் உயரச் செய்து இயங்கச் செய்யும். அப்போது நம்ப முடியாத அதிக வேகத்தில் அது பயணிக்கும்.

துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் 1600 கிமீ தூரம் பயணிக்க வெறும் 3 மணி நேரங்களே ஆகுமாம். இதேபோல், இதில் பயணிக்க ஒரு ஆளுக்கு ரூ. 600 மட்டுமே செலவாகும். இது ரயில் பயணத்தை விட மிக மிக குறைவான கட்டணம் ஆகும்.

எனவே ஏழை மற்றும் எளிய மக்களும் பயன்படுத்தக் கூடிய புதிய வாகனமாக இது இருக்கும் என தெரிகின்றது. விமான பயணத்திற்கு இதன் வருகை டஃப் கொடுக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது இந்த வாகனத்தின் உருவாக்க பணிகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

விரைவில் அதன் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் முன்மாதிரி மாடல் சுமார் 100 கிலோ எடைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அடுத்த ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் அளவிற்கு இதன் உற்பத்தி முன்னேற்றம் அடையும் என கூறப்படுகின்றது.

இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் முதலில் 20 பேர் பயணிக்கின்ற வகையிலேயே இந்த வாகனம் தயாரிக்கப்படும் என்றும், அதை 2026 ஆம் ஆண்டில் சோதனையோட்டத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய இன்னும் முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. விரைவிலேயே அவையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின். இந்த மாதிரியான சூழலிலேயே புதிய தண்ணீர் வழி பயணிக்கும் அதி விரைவு வாகனம் பயன்பாட்டிற்கு வர இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நிஜ வாழ்க்கையில் பயன்பாட்டிற்கும் வரும்பட்சத்தில் கடல் அருகில் உள்ள ஊர்களுக்கு மக்கள் வான் வழி அல்லது ரயில் வழி பயணிப்பதைக் காட்டிலும் இந்த வாகனத்தின் வாயிலாகவே அதிகம் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 5:00 [IST]
English summary
Kolkata to chennai sea car development promises 3 hour journey at just rs 600
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+