சென்னை மக்களுக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான்! பெட்ரோல் பங்க்களை இந்த ஊரில் இழுத்து மூட நேரம் வர போகுது!

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), எதிர்காலத்தில் உலகையே கட்டி ஆள போகிற போக்குவரத்து வாகனங்கள். அதாவது, பெட்ரோல், டீசல் வாகனங்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாருமே எலக்ட்ரிக் வாகனங்களை தான் பயன்படுத்த போகிறோம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தான் எதிர்காலத்தில் பலத்த போட்டி இருக்கும் என்பது எல்லாம் பெரிய கதை. அவற்றை பற்றி விவரிக்க இன்று ஓர்நாள் போதாது. இந்த தொகுப்பில் நாம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகின் 2வது மிகப்பெரிய மையமாக மாற போகும் இந்திய நகரத்தை பற்றி பார்க்க போகிறோம்.

அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதார வளர்ந்த நாடுகள் உடன் ஒப்பிடுகையில், நம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த சிலர் துவங்கிவிட்டனர் என்றாலும், மொத்த எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் அத்தகையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

electric vehicle charging hub

இதனால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் இன்னும் பெரிய அளவில் வளராததற்கு முக்கியமான காரணம், நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் இன்னும் பரவலாக நிறைய இடங்களில் வராதது ஆகும்.

பெட்ரோல் பங்க் (Petrol Bunk)-களை போல ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் நாடு முழுவதும் விரிவாக்கம் அடையாததால் எலக்ட்ரிக் வாகனங்களை நீண்ட தொலைவு கொண்டு செல்லவும், கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் பலர் தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த நிலை இன்னும் சில வருடங்களுக்குதான்.

electric vehicle charging hub

அதன்பின் எல்லாமே மாறுவதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக நாம் எதிர்பார்க்காத நகரம் ஒன்று இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் ஆக மாற போகிறது. இந்தியளவில் மட்டுமில்லாமல், உலக அளவிலேயே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 2வது மிக பெரும் சார்ஜிங் முனையமாக இந்த இந்திய நகரம் விளங்க போகிறது.

அந்த இந்திய நகரம் வேறொன்றும் இல்லை... மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா (Kolkata) ஆகும். கொல்கத்தாவை ஏன் நாம் எதிர்பார்க்காத நகரம் என கூறுகிறோம் என்றால், எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே முதலாவதாக நம் நினைவிற்கு வருவது பெங்களூர் (Bengaluru) தான். ஏனெனில், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் இருந்து கடந்த சில வருடங்களில் பல்வேறு இவி நிறுவனங்கள் தோன்றியுள்ளன.

ஆனால், பெங்களூரு இல்லாமல், தேசிய தலைநகர் டெல்லி, மும்பை போன்ற நகரங்களும் இல்லாமல், கொல்கத்தா உலகின் 2வது மிக பெரிய இவி சார்ஜிங் மையமாக விளங்க உள்ளது. இன்னும் சில வருடங்களில் சீனாவுக்கு அடுத்து கொல்கத்தாவில் தான் அதிக இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இருக்குமாம்.

இதற்காக, தெற்கு கொல்கத்தாவில் தாகூர்புகூர் (Thakurpukur) என்கிற பகுதியில் ஒரே இடத்திற்குள் சுமார் 300 சார்ஜர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த இடத்தில் ஒரே நேரத்தில் 300 எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜிங் பகுதியில் மெதுவான மற்றும் விரைவான என 2 விதமான சார்ஜிங் வசதிகளும் வழங்கப்பட உள்ளன.

அதிகப்பட்சமாக 120kWh வரையில் திறன் கொண்ட சார்ஜர்கள் இந்த மையத்தில் இருக்குமாம். இந்த சார்ஜிங் மையத்தை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மையம் இந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த பணிகளை எஸ்உர்ஜா (EzUrja) என்கிற நிறுவனம், கைவிடப்பட்ட 2 ஏக்கர் பரப்பளவிலான தொழிற்சாலைக்குள் மேற்கொண்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு உலகிலேயே ஒரே இடத்தில் அதிக சார்ஜிங் வசதிகளை சீனா கொண்டுள்ளது. சீனாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 650 சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பாதி எண்ணிக்கையிலான சார்ஜர்கள் தான் கொல்கத்தாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்றாலும், இதன் மூலமாக இந்திய நாட்டின் மற்ற பகுதிகளிலும் சார்ஜிங் வசதிகள் மேம்படும் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 11:21 [IST]
English summary
Kolkata will be worlds 2nd largest electric vehicle charging hub
மேலும்... #electric vehicles #charger #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+