மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலிலும், சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

கோமகி (Komaki) நிறுவனம் மிக விரைவில் விற்பனைக்கு வர உள்ள வெனிஸ் (Venice) ஸ்கூட்டர் மற்றும் ரேஞ்ஜர் (Ranger) மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்திருக்கின்றது. இரண்டும் மின்சாரத்தால் இயங்கும் டூ-வீலர்கள் ஆகும். இவைகுறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

கோமகி (Komaki) நிறுவனம் இரு புதிய மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கின்றது. இதற்காக அனைத்து பணிகளையும் கோமகி தயார் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம், எலெக்ட்ரிக் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ரேஞ்ஜர் (Ranger) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெனிஸ் (Venice) ஆகிய இரு மின்சார டூ-வீலர்களையே நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இவற்றின் வருகையை முன்னிட்டு இரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் கோமகி இன்று (ஜனவரி 13) வெளியீடு செய்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடாகும். ஆகையால், நிறுவனத்தின் மின் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

நிறுவனத்தின் இப்புதிய தயாரிப்புகளில் என்ன மாதிரியான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல் முழுமையாக வெளியிடப்பவில்லை. அதேநேரத்தில், புதிய வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றியும், ரேஞ்ஜர் க்ரூஸர் இ-பைக் பற்றியும் கணிசமான தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இதன்படி, வெனிஸ் மின்சார ஸ்கூட்டர் நிறுவனத்தின் அதி-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு ஸ்கூட்டர் பிரிவில் ஏற்கனவே நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் வரிசையில் ஐந்தாவது தேர்வாக வெனிஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இது ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. ஐகானிக் மற்றும் நவ-நாகரீகமான அம்சங்கள் கொண்ட மின்சார வாகனமாக இந்த ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது. ட்ரெண்டியான அம்சங்கள் பல வெனிஸ் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இது அனைத்து வயதினரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 72v 40ah பேட்டரி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், நீளமான இருக்கை, நீண்ட மற்றும் அகலமான கால் வைக்கும் இடம், பெரிய ஸ்டோரேஜ் வசதி என பல அம்சங்கள் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

மேலும், ரிப்பேர் சுவிட்ச், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் ஸ்விட்ச் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களையும் இந்த வெனிஸ் இ-ஸ்கூட்டர் பெற இருக்கின்றது. இதைப் போன்ற பன்முக சிறப்பு வசதிகளுடன் ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் பைக் இந்திய மின்சார பைக் சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இந்த பைக் ஓர் முழுமையான சார்ஜில் 180 கிமீ முதல் 220 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, நாட்டில் க்ரூஸர் ரகத்தில் விற்பனைக்கு வரும் முதல் எலெக்ட்ரிக் பைக்கும் இதுவாகும். ஆகையால் இந்தியர்கள் பலர் இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இந்த பைக்கில் 72v50ah திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல் ரிப்பேர் சுவிட்ச், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் சுவிட்ச், ப்ளூடூத் சிஸ்டம் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற இருக்கின்றது.

கோமகியின் மின்சாரத்தால் இயங்கும் வெனிஸ் ஸ்கூட்டர், ரேஞ்ஜர் பைக் வெளியீடு! ஸ்டைலில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் அசத்தலா இருக்கு!

இந்த அம்சங்கள் இந்த இருசக்கர வாகனங்களின் இயக்கத்தை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் என கோமகி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக, இவற்றின் தோற்றம் பயன்பட்டாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கவரும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்த நிலையை சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கி வருகின்றன. அந்தவகையில், மிக விரைவில் கோமகி நிறுவனத்தின் இந்த இ-வாகனங்கள் சீக்கிரமாகவே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Komaki revealed electric cruiser ranger and e scooter venice ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X