30,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீரென பயணிகள் மூக்கிலிருந்து வந்த ரத்தம்! இது தான் உண்மையான காரணமா?
முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக விமானத்திற்குள் இருந்த பயணிகள் மூக்கில் காதில் எல்லாம் ரத்தம் வந்துள்ளது. இது மட்டுமல்ல அடுத்த ஒரு சில நொடிகளில் விமானத்தின் உயரம் 9 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. நடுவானில் பறக்கும் விமானத்தில் இப்படியான ஆபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இதை தடுக்க விமான கட்டுமானத்தின் போது என்னெல்லாம் செய்கிறார்கள் என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
கடந்த சனிக்கிழமை தென்கொரியாவில் உள்ள இசியான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தைவான் நாட்டை நோக்கி 125 பயணிகளுடன் கொரியன் ஏர் பிளைட் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. வழக்கமாக இந்த விமானம் சுமார் 30,000 அடிக்கு மேல் உயரமான விமான பாதையில் தான் பறக்கும். அதன்படி தான் இந்த விமானமும் பறந்து கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக விமானத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது இதனால் விமானத்திற்குள் இருந்த கேபின் பிரஷர் குறைந்தது இதனால் விமானத்திற்கு உள்ளிருந்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். சிலருக்கு மூக்கு வழியாகவும் காது வழியாகவும் ரத்தம் வந்துள்ளது. 15 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கடுமையான காது வலி ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் விமானத்தின் உயரம் குறைந்தது தான். சுமார் 30,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானம் அடுத்த ஒரு சில நொடிகளில் திடீரென தனது உயரத்தை 9 ஆயிரம் அடியாக குறைத்தது. குறுகிய காலத்தில் உயரத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டால் பயணிகளுக்கு பிரஷர் மாற்றம் ஏற்பட்டு இப்படியான பிரச்சினைகள் எல்லாம் வரும்.

பொதுவாக நாம் மலைகளில் ஏறும்போது காது அடைக்கும் அனுபவத்தை பெற்றிருப்போம். இது உயரம் அதிகமாக காற்றில் இருக்கும் அழுத்தம் அதிகமாகவதால் காது மூக்கு உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் மாறுபடும் அதன் காரணமாக இந்த மாதிரி பிரச்சனை ஏற்படும். விமானங்களில் பறக்கும் போதும் இப்படியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த பிரச்சினையை சமாளிக்க விமானம் கட்டுமானம் செய்யப்படும்போது விமானம் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கேபின் பிரஷரும் அதற்கு தகுந்தார் போல் அதிகரிக்கும். இதனால் விமானத்திற்குள் இருக்கும் பயணிகளுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் இந்த கேபின் பிரஷர் என்பது விமானம் அதிகரிக்க அதிகரிக்க மெது மெதுவாக தான் அதிகரிக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் சுமார் 30,000 அடிக்கு மேல் விமான பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் உயரம் அடுத்த சில நொடிகளில் வெகு வேகமாக குறைந்து 9 ஆயிரம் அடியாக மாறி உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் உயரம் குறைந்ததால் பிரஷரில் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை.
இதன் காரணமாகவே பயணிகளுக்கு மிகப்பெரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானம் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட பயணிகளை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் நடந்தது. இதனால் சில பயணிகள் காது மூக்கு வழியாக ரத்தம் வழிந்து பாதிக்கப்பட்டார்கள்.
விமானம் கிளம்பப்படும் முன்பு விமானத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டவுடன் கேபின் பிரஷரைசேஷன் செய்யப்படுவதாக பைலட்டிடம் இருந்து அறிவிப்பு வரும். அந்த நேரத்தில் விமானத்திற்குள் புகை போன்ற சில விஷயம் வருவதை நாம் பார்த்திருப்போம். இதை செய்த பிறகு தான் விமானம் கிளம்பும் இதன் மூலம் விமானம் தரையில் இருக்கும் போது எப்படியான பிரஷர் இருந்ததோ அதே பிரஷர் விமானம் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தாலும் இருக்கும் வகையில் தொழில்நுட்பம் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் பிரஷரைசேசன் என்பது மிக முக்கியமான ஒரு செயலாக இருக்கிறது. இதில் பிரச்சனை ஏற்பட்டால் விமானத்தை கிளப்புவதே தவிர்த்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட சம்பவத்தில் முதலிலேயே இந்த பிரச்சனை இருந்ததா என்ற தகவல் எதுவும் இல்லை. விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்


Click it and Unblock the Notifications








