இனி சிக்னல்ல ரொமான்ஸ் பண்ண பேக்கிரவுண்டு மியூசிக் ரெடி! போலீசார் செய்த பலே ஏற்பாடு!
தமிழகத்தின் பெருநகரங்களில் உள்ள சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும் போது அவர்களை மன அமைதிக்காக கரோக்கி இசை ஒலிக்கப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு டென்ஷனான மனநிலையில் இருந்து அமைதியான மன நிலைக்கு மாற்ற உதவுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முழுவதும் பெருநகரங்களில் உள்ள போக்குவரத்துக்கு முக்கியமான பிரச்சினையே டிராபிக் தான். குறிப்பாக சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும் போது நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக டென்ஷன் ஆகிறார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் வெயிலில் இப்படியாக நிற்கும் போது வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது.

அவர்கள் ஏதாவது வேலைக்கு செல்லும்போது அந்த டென்ஷனால் மன அமைதி இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் கவன சிதறல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் பொறுமையை இழந்து மன அமைதி இழப்பதே முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படியாக டென்ஷனாக இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மன அமைதியை தரும் வகையில் போக்குவரத்து துறை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதியில் தற்போது வாகனங்கள் செல்ல மட்டுமே சிக்னல் வழங்கப்பட்டு வந்த நிலையில் பாதசாரிகள் இப்படியாக சிக்னல் விழும் போது வாகனங்களுக்கு இடையே புகுந்து தான் ரோட்டை கடக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் இது குறித்து ஆய்வு நடத்தி அவர்கள் அப்பகுதியில் உள்ள சிக்னலை அப்டேட் செய்தனர்.

அதன்படி சரியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பாதசாரிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மார்க்கிங்கில் சாலையைக் கடக்க சிக்னல்களை அமைத்து புதிய சிக்னல் கம்பங்களை அமைத்தனர். அப்பொழுது புதிதாக சிக்னல்களில் ஸ்பீக்கர்களை பொருத்தி அதில் கரோக்கி இசையை ஒலிக்க விட்டனர். தற்போது அப்பகுதியில் இது செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.
இதனால் சிக்னலில் இருக்கும் வாகன ஓட்டிகள் டென்ஷனாக இருந்தாலும் சரி, ஒரு சில நிமிடங்கள் இந்த இசையை கேட்பது மூலம் அவர்கள் மன அமைதி ஏற்பட்டு அவர் டென்ஷன் குறைந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வார்கள் என்பதற்காக இதை செய்துள்ளனர். இது கோவையில் முதல் முறை அல்ல இதற்கு முன்னர் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் இதுபோன்ற சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மற்ற நகரங்களில் இது போன்ற அமைக்கப்பட்ட போது அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது மதுரை கோவை நகரங்களிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது.மதுரையில் 32 சிக்னல்களில் இது போன்ற இசையை ஒழிக்கும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்களில் கரோக்கி இசை மட்டுமல்லாமல் அவ்வப்போது சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளும் ஒலிக்க வைக்கப்படுகிறது.
மதுரையில் உள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளான கோரிப்பாளையம், காளவாசல், ஆரப்பாளையம், தெற்கு வாசல், பெரியார் நிலையம், கீழவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிக்னல்களில் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக கிடக்கும் வாகன ஓட்டிகள் இனி சிக்னலுக்காக நிற்கும் போது இனிமையான இசையை கேட்டு ரசிக்கலாம்.
இசையை கேட்பது என்பது மனதிற்கு அமைதியை தரும் ஒரு விஷயமாக இருக்கிறது இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் டென்ஷனாக இருக்கும்போது இப்படியாக இசையை ஒலிக்க வைப்பது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மன அமைதியை தரும். இதனால் விபத்துகளை எண்ணிக்கை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளில் பெரும்பாலும் கவன சிதறல் காரணமாகவே விபத்தில் சிக்குகின்றனர். இதற்காக தமிழக போலீசார் போக்குவரத்து செயலாளர்களில் இனிமையான இசையை ஒலிக்க வைக்க எடுத்த முயற்சி நிச்சயம் ஒரு நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கலாம். இதனால் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் பட்சத்தில் இதை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிங்களர்களிலும் பொருத்த ஏற்பாடுகளை செய்யலாம்.


Click it and Unblock the Notifications