டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா? என்னங்க சொல்றீங்க... சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு...

யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன், ஜிபி முத்துவுடன் அதிக வேகமாக பைக் ஓட்டியதால் அவர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்திற்காக அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

தமிழகத்தில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளுக்காக தன் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ ஒன்று பெரும் அளவில் வைரலானது. அதில் அவரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடியிருந்தது. அன்று முதல் தமிழகத்தில் பெரும் பரவலாக இவரை பற்றி பேசி வருகின்றனர். பிரபலமானாலே சர்ச்சையில் சிக்குவார்கள் என்பதைப் போல இவரும் அதன் பின்பு ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார்.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இவர் பிரபலமாவதற்கு முன்பு செய்த விஷயத்தில் ஒன்று இவர் வேகமாகச் சாலையில் பயணித்தது. கிட்டதட்ட 240 கி.மீ வேகத்தில் தனது பைக்கில் பயணம் செய்து அதை வீடியோவும் எடுத்து வெளியிடுள்ளார். இந்த வீடியோக்கள் அதன் பின்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் அதிக வேகமாக வாகனம் ஓட்டுகிறார். இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். உள்ளிட்ட பல விஷயங்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளாக எழுந்தது.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூட பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகளைப் போடத் துவங்கினர். இந்நிலையில் அவர் அடுத்ததாக மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை அப்லோடு செய்திருந்தார். அதில் அவர் யூடியூப் பிரபலமான ஜிபி முத்துவுடன் பைக்கில் பயணம் செய்தார். இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இதில் சிக்கல் என்னவென்றால் அவர் ஜிபி முத்துவுடன் மிக வேகமாகப் பயணம் செய்திருந்தார். அந்த வீடியோவில் ஜிபி முத்து பைக்கின் பின்னால் அமர்ந்து பைக் வேகமாகச் சென்றதால் பதறிப்போய் இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது கோவை போலீசார் பைக்கில் வேகமாகப் பயணித்ததற்காக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து கோவை போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

அதில் அவர்கள் கடந்த 14ம் தேதி டிடிஎஃப் வாசன் யூடியூபர் ஜிபி முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் டி3 போத்தனூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் பாலக்காடு மெயின் ரோடு அருகே அதி வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாகற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இதற்காக அவர் மீது மோட்டார் வாகன சட்டம் ஐபிடி 279ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. யூடியூப் பிரபலமான ஜிபி முத்து தனது பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரும் டிடிஎஃப் வாசனும் சேர்ந்து செய்த ஒரு வீடியோவால் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

டிடிஎஃப் வாசன் மீது தற்போது கோவை மாநகர போலீசார் தற்போது மோட்டார் வாகன சட்டம் ஐபிசி 279ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால் பொது வழியில் வாகனத்தில் அதிக வேகத்திலும் வாகனத்தை மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலோ அல்லது மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தும் வகையிலோ வாகனத்தை ஓட்டினால் குற்றம் எனவும்,

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதம் சிறை அல்லது ரூ1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த சட்டத்தின்படி பொதுவாக அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் தொடர்ந்து இந்த தவறுகளைச் செய்பவர்களுக்குச் சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம். டிடிஎஃப் வாசனை பொருத்தவரை ஏற்கனவே அவர் மீது அதிக வேகத்தில் பைக் ஓட்டுகிறார். இளைஞர்களைத் தவறான பாதையில் வழி நடத்துகிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர் இதே தவற்றைச் செய்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் அண்ணாவுக்கு 6 மாதம் சிறையா . . . என்னங்க சொல்றீங்க . . . சட்டத்துல இதுக்கு இடம் இருக்கு . . .

இதனால் டிடிஎஃப் வாசனிற்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவர் எவ்வளவு வேகத்தில் பயணித்தார் என்ற தகவல் அந்த வீடியோவில் தெளிவாக இல்லாததால் இவர் உண்மையிலுமே அதி வேகத்தில் தான் பைக் ஓட்டினாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. இது குறித்து போலீசார் தெளிவான விசாரணை நடத்திய பின்பே இவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் வெளியாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kovi police registered case on TTF Vasan likely to get imprisonment for 6 months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X