சினிமாக்காரர்களில் இவர் தனி ரகம்! மேப்பில் கூட காட்டாத ஊருக்கு ஆம்புலன்ஸ்... நன்கொடை லிஸ்ட் போயிட்டே இருக்கு!!

கேபிஒய் பாலா (KPY Bala), இந்த பெயரை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேபிஒய் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவரான பாலா, சமீப காலமாக மக்களுக்கு உதவிகளை செய்வதில் அதிக ஈடுப்பாட்டுடன் உள்ளார். குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பின் மக்கள் நிறைய பேருக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், கல்வராயன் மலைத்தொடரில் வசிக்கும் கிராம மக்களுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

மலைப்பிரதேச பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவது சற்று சவாலான காரியம் ஆகும். இதனாலேயே மலைப்பகுதி மக்களுக்கு நிறைய வசதிகள் கிடைப்பதில்லை. ஒரு சில மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. முக்கியமாக, மருத்துவ உதவிகளுக்கு மலையில் இருந்து பல கிமீ தொலைவிற்கு கீழிறங்கி வர வேண்டிய நிலைமை இப்போதும் சில பகுதிகளில் உள்ளது.

kpy bala donates ambulance

முறையான மற்றும் விரைவான சாலை வசதி இல்லாததினால், நிறைய மலைவாழ் மக்கள் இப்போதும் பெரிதும் இன்னல்களை சந்திக்கின்றனர். இதன் காரணமாகவே, கேபிஒய் பாலா கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் தொரங்கூர் கிராம மக்களுக்காக மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்கொடையாக வழங்கி சிறப்பித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அங்கம் வகிக்கும் கல்வராயன் மலைத்தொடருக்கு சரியாக கீழே அமைந்துள்ள கிராமம் தான் தொடரங்கூர் ஆகும். ஏற்றம், இறக்கமான மலைப்பாதைகளுக்கும், அடர்ந்த வனப்பகுதிக்கும் நடுவே அமைந்துள்ள தொரங்கூர் கிராம மக்களுக்கு நிறைய அடிப்படை வசதிகளே இன்னும் கனவாக இருந்து வருகிறது. அவசரத்திற்கு மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றால் கூட 40கிமீ பயணம் செய்து மாவடிப்பட்டு என்கிற பகுதிக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

kpy bala donates ambulance

இதனால், அவசர சூழல்களில் மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் சேவை அவசியமான ஒன்றாக இருப்பதால் தொரங்கூர் கிராம மக்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை நடிகரும், சமூக சேவகருமான கேபிஒய் பாலா வழங்கியுள்ளார். முதலுதவிக்கு தேவையான உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் ஆனது அடிப்படையில் மாருதி சுஸுகி ஈக்கோ வேன் ஆகும்.

உட்புறத்தில் அதிக இடவசதி கொண்ட வேன் மாடலாக மாருதி சுஸுகி ஈக்கோ விளங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.32 லட்சத்தில் இருந்து ரூ.6.58 லட்சம் வரையில் உள்ளன. 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஈக்கோ வாகனத்தை ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியுள்ளனர். இதற்கேற்ப இந்த ஈக்கோ ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தொரங்கூர் கிராம மக்களுக்கு உள்ளது.

kpy bala donates ambulance

ஸ்டாண்டர்ட், ஏசி என 2 விதமான வேரியண்ட்களில் ஈக்கோ வேனை மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. அதாவது, ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் ஏசி கிடைக்காது; மற்றொன்றில் கிடைக்கும். இதில் எந்த வேரியண்ட்டை கேபிஒய் பாலா பரிசளித்துள்ளார் என்பது தெரியவில்லை. மேலும், சிஎன்ஜி ஆப்ஷனிலும் மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது.

ஈக்கோவில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 101 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பாதுகாப்புக்கு இந்த வாகனத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலார்ட், சீட்-பெல்ட் ரிமைண்டர்ஸ், ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேபிஒய் பாலா இவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனத்தை பல்வேறு கிராம மக்களுக்கு வழங்கியுள்ளதை இதற்குமுன் பார்த்துள்ளோம். மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை எல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். அப்படியென்றால், ஆம்புலன்ஸ் வாகனங்களை ரூ.7 லட்சம் செலவு செய்து கேபிஒய் பாலா வாங்கிக் கொடுக்கிறார் என்றால், அது பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2024, 16:29 [IST]
English summary
Kpy bala donates maruti suzuki eeco ambulance to kalvarayan hills people
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X