இதெல்லாம் செய்ய பெரிய மனசு வேணும்! சமோசா விற்ற பெண்ணிற்கு பாலா செய்த உதவி!

குக் வித் கோமாளி புகழ் பாலா சமீபத்தில் ஏழைப் பெண் ஒருவருக்கு சொந்தமாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த ஆட்டோவை வாங்க பாலாவிற்கு நடிகர் லாரன்ஸ் உதவி செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவு பிரபலமான நடிகர் பாலா இவர் தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு அடிக்கடி உதவி செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவராக இருக்கிறார். இவர் உதவி செய்வது குறித்து வெளியான வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

kpy bala gifted auto

சிறிய கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு டூவீலர் வாங்கி கொடுப்பது என பல்வேறு விதமான உதவிகளை செய்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது புதிதாக மற்றொரு உதவியை செய்து மற்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் இவர் பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பதாக இருக்கிறது. அதாவது இவரும் நடிகர் லாரன்ஸ் சேர்ந்து கஷ்டப்படும் ஏழை பெண்ணிற்கு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவரது வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என இவர்கள் கருதுகின்றனர்.

kpy bala gifted auto

இது குறித்து பாலா பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்ட இந்த பெண் பெயர் முருகம்மாள் என்றும், இவர் சென்னையில் உள்ள எலெக்ட்ரிக் ரயிலில் சமோசா விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் தவறிவிட்டதாகவும், தற்போது இவர் தனியாக உழைத்து மூன்று பெண்களையும் வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இவரிடம் பேசிய பாலாவிற்கு இந்த பெண்மணிக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்க வேண்டும் என்றும் அதை அவர் நீண்ட நாள் கனவாக வைத்திருப்பதாகவும், அந்த ஆட்டோ இருந்தால் அந்த ஆட்டோ ஓட்டி வருமானம் பெற்று அந்த வருமானத்தில் தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை அடுத்த படி நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என நினைத்து வருவது தெரிய வந்தது.

kpy bala gifted auto

இதையடுத்து பாலா இவருக்கு உதவி செய்ய முன்வந்தார். புதிதாக ஒரு ஆட்டோ வாங்க எவ்வளவு செலவாகும் என பார்த்தர் ரூபாய் 3 லட்சம் செலவாக இருந்தது. இதையடுத்து இவருடன் உதவி செய்வதற்காக நடிகர் லாரன்ஸ் இணைந்து கொண்டார். பாலா ரூபாய் 1.5 லட்சம் பணமும் நடிகர் லாரன்ஸ் ரூபாய் 1.5 லட்சம் பணமும் போட்டு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான ஆட்டோவை வாங்கி அந்த பெண்மணிக்கு வழங்கி உள்ளார்கள்.

இப்படியாக ஆட்டோ வழங்கியவுடன் அந்த பெண் ஆட்டோ ஓட்டுகிறார். அவருடன் சக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து ஆட்டோ ஓட்டுகிறார்கள். அப்பொழுது அங்கே வந்த பாலா மற்றும் நடிகர் லாரன்ஸ் ஆகியோர் அந்தப் பெண்மணியிடம் ஆட்டோ சாவியை வழங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் பரிசாக வழங்குகிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து நடிகர் பாலாவையும் நடிகர் லாரன்ஸையும் பாராட்டி வருகிறார்கள். இது போன்று தொடர்ந்து சமூக சேவைகளை செய்ய வேண்டும் எனவும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆட்டோ அந்த பெண்ணின் வாழ்க்கையை நிச்சயம் மாற்றி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனம் என்பது ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப் போடும் திறன் கொண்டது சாதாரணமாக வாகனத்தை நாம் நினைத்து விடக்கூடாது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்தால் தான் ஒரு மனிதனின் வாழ்க்கை முன்னேறும். அதற்கு முக்கிய கருவியாக இருப்பது இந்த வாகனம். இதனால் பாலா வாங்கி கொடுத்த இந்த ஆட்டோ அந்த பெண்ணின் குடும்பத்தையே மாற்றும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 18:03 [IST]
English summary
Kpy bala gifted auto to samosa selling women with raghava lawrence
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X