இந்த பாலா இவ்ளோ வெள்ள மனசுகாரரா!.. பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசா கொடுத்ததுக்கு காரணம் இதுதானா!!
சின்னத் திரை வாயிலாக பல கோடி தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர் கேபிஒய் பாலா. இவர் பலதரப்பட்ட சமூக சேவை பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார். ஓர் அரசியல்வாதியையே மிஞ்சும் அளவிற்கு மக்கள் நல தொண்டு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக, பெரிய அளவில் வசதி இல்லாத மலை வாழ் மக்கள் குடியிருப்பு மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலனடையும் வகையில் இலவச ஆட்டோ சேவை போன்றவற்றை அவர் தொடங்கி வைத்திருக்கின்றார். நன்கொடை எதுவும் பெறாமல் அனைத்தையும் அவருடைய சொந்த பணத்தில் செய்து வருகின்றார்.

50 கோடி, நூறு கோடி என பல கோடிகளைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் பெரும் நடிகர்களே நமக்கு என் என்று ஒதுங்கி இருக்கும் இந்த காலக்கட்டத்தில், மிகவும் எளிமையான நபராக உள்ள பாலா யாரும் எதிர்பார்த்திராத பொதுநல சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்தவகையில், சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியபோது ஏழை மக்களைச் தேடி சென்று நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு தன்னால் முயன்ற உதவியைச் செய்துக் கொடுத்தார். இந்த நிலையிலேயே பெட்ரோல் பங்க்கில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கேபிஒய் பாலா காஸ்ட்லியான டிவிஎஸ் பைக்கை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பைக்கை பரிசளிக்கும் வீடியோவையும் பாலா தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அந்த வீடியோவில் அவர் இந்த இளைஞருக்கு ஏன் பைக்கை பரிசாக வழங்கினேன் என்பதற்கான வீடியோவையும் இணைத்திருக்கின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பாலா, அந்தவகையில், பெட்ரோல் பங்க்கில் ஊழியராக இருக்கும் இந்த இளைஞரின் வீடியோவையும் சமீபத்தில் இருக்கின்றார்.
அந்த வீடியோவில், இளைஞர் வீட்டில் பைக் வாங்க பணம் கேட்டதாகவும், பணம் தர முடியாத என அவருடைய குடும்பத்தினர் அவமானப்படுத்தியாகவும் அப்பாவியாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மேக வேகமாக வைரலாகி பலரினம் மனதைக் கஷ்டப்படுத்தியது. அந்தவகையிலேயே பாலாவின் மனதையும் வீடியோ வருட செய்திருக்கின்றது.
இந்தநிலையிலே தான் பைக்கை வாங்கி பரிசாக வழங்கி இருப்பதாக பாலா கூறி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கையே வாங்கிக் கொடுத்திருக்கின்றார். ப்ளூ சில்வர் நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்கையே பரிசாக வழங்கி இருக்கின்றார்.
இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ. 94 ஆயிரம் ஆகும். உதறல் இல்லாத ரைடு அனுபவத்தை வழங்கும் திறன், அதிக எரிபொருளை மிச்சப்படுத்தும் சிக்கன திறன், செல்ஃப் ஸ்டார்ட் ஆகியவற்றை கொண்டதே இந்த பைக் ஆகும். மேலும், குறைந்த பராமரிப்பு செலவுக் கொண்டதும் இந்த பைக் ஆகும்.
இந்தியாவில் இந்த பைக் தற்போது டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் லிட்டர் ஒன்றிற்கு 68 கிமீ வரையில் மைலேஜ் பெற முடியும். இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஓர் 110 சிசி பைக்காகும். 8.08 பிஎச்பி மற்றும் 8.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான மாஸான பைக்கையே கேபிஒய் பாலா இணையத்தில் டிரெண்டாகிய வீடியோ அடிப்படையில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். பாலாவின் இந்த செயலுக்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் பைக் மாடல்களில் ஒன்றாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி இருக்கின்றது. இதன் பராமரிப்பு செலவு குறைவு, விலையும் பட்ஜெட்டுக்குள்ளேயே இருப்பது போன்ற காரணங்களினாலேயே மக்கள் பலர் இந்த பைக்கை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பைக்கையே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பாலா பரிசாக வழங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









