இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணுங்க! பாலா, லாரன்ஸ் இணைந்து செய்த அடுத்த சம்பவம் இது தான்!
கேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் ஆகியோர் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் இவர்கள் கட்டியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் பாலா தற்போது சினிமாக்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் சென்னையில் ரயிலில் பயணம் செய்யும்போது பெண் ஒருவர் எலெக்ட்ரிக் ரயிலில் வியாபாரம் செய்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதை அறிந்தார். பின்னர் அவருக்கு உதவும் வகையில் சொந்தமாக ஒரு ஆட்டோ ஒன்றை அந்த பெண்ணிற்கு வாங்கி கொடுத்து அந்த பெண்ணை ஆட்டோ டிரைவராக மாற்றினார்.

அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக ஆட்டோ ஒன்று வாங்க வேண்டும். ஆட்டோ ஒன்று வாங்கினால் தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு மேம்படும் என்ற கனவில் இருந்த பெண்ணுக்கு அந்த கனவை நிறைவேற்றும் விதமாக இவர் அந்த ஆட்டோவை வாங்கி கொடுத்தார். அப்பொழுது இவருக்கு உதவியாக நடிகர் லாரன்ஸ் உதவி செய்தார். அப்பொழுதே இந்த செய்தி வைரலாக பரவியது.
புதிதாக ஆட்டோ வாங்கிய பெண் அவர்கள் பகுதியில் இருக்கும் பெண் முற்றிலும் பெண்களால் நடத்தப்படும். ஆட்டோ சங்கத்தில் இணைந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அந்த சங்கத்து பெண்களிடம் பேசிய பாலாவிற்கு அந்த சங்கத்தில் உள்ள பல பெண்கள் ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானத்தில் பெரும்பணம் ஆட்டோ வாங்கியதற்காக பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு செலவாவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்களுக்கு உதவி செய்ய கேபிஒய் பாலா நினைத்தார். அதன்படி அவர்கள் பெறப்பட்ட கடன் குறித்த விபரங்களை எல்லாம் பெற்று கடன் வழங்கிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்கள் பாக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் இவரும் நடிகர் லாரன்ஸ் சேர்ந்து முழு பணத்தையும் செலுத்தி கடனில் இருந்த ஆட்டோவை எல்லாம் அந்த பெண்களின் சொந்த ஆட்டோவாக மாற்றி கொடுத்துள்ளார்.
இதை அவர்களிடம் தெரிவித்து அவர்களுக்கு கடன் முழுவதும் செலுத்தப்பட்டதற்கான ஆவணத்தை வழங்குவதற்காக பாலா மற்றும் நடிகர் லாரன்ஸ் ஆகியோர் நேராக அவர்களை சென்று சந்தித்தார். அப்பொழுது அவர்களது ஆட்டோவை ஓட்டிச் சென்று அவர்களை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி அந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து இந்த ஆவணங்களை எல்லாம் ஒப்படைத்தார்கள்.

இதை கேபிஒய் பாலா வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் 10 பேரின் ஆட்டோ கடனை முழுமையாக அடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆரத்தியும் எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் குழந்தைக்கு நடிகர் லாரன்ஸ் பெயர் வைத்தார். ஏற்கனவே அந்த குழந்தைக்கு பெயர் வைத்திருந்தாலும், அதே பெயரை லாரன்ஸ் வாயால் வைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அதன்படி அந்த குழந்தைக்கு அவர் பெயரும் வைத்துள்ளார். இதுவும் அந்த வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பெண்கள் ஆட்டோ ஓட்டுனராக வருவது என்பது மிக அரிதான ஒரு விஷயமாக இருக்கிறது. சமீப ஆண்டுகளாக தான் பெண்கள் ஆட்டோ ஓட்டும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலா, லாரன்ஸ் போன்ற பெரும் பிரபலங்கள் பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இப்படியான உதவிகளை செய்வது நிச்சயம் அவர்களது வாழ்வை மேம்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேபிஒய் பாலா இப்படியாக பல்வேறு நபர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இந்த ஆட்டோ ஓட்டுப் பெண்களுக்கு உதவி செய்யும் விதமாக அவர்களது கடனில் இருந்த ஆட்டோவை எல்லாம் சொந்த ஆட்டோக்களாக மாற்றி உள்ளார். இதனால் இவர் மக்கள் மத்தியில் பெயர் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications









