Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

விஜய் டிவி பிரபலத்திற்கு அவரது மனைவி Maruti Suzuki காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சரத். இவரும், கிருத்திகா என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சரத்-கிருத்திகா திருமணம் நடைபெற்று ஒரு ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அவர்களின் வீட்டிற்கு புதிய கார் ஒன்று வந்துள்ளது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

அது Maruti Suzuki Baleno கார் ஆகும். கிருத்திகா இந்த காரை சரத்திற்கு பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காரின் முன்பாக சரத்-கிருத்திகா நிற்கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் சரத் வாங்கியுள்ள முதல் கார் இதுதான் எனவும் கூறப்படுகிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

எனவே சரத் மற்றும் கிருத்திகாவிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள Maruti Suzuki Baleno கார்தான் சரத்-கிருத்திகா வீட்டிற்கு தற்போது புதிதாக வந்துள்ளது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள Premium Hatchback ரக கார் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் Premium Hatchback ரக கார் என்ற பெருமையும் Maruti Suzuki Baleno காருக்கு உள்ளது. ஒவ்வொரு மாதமும் Maruti Suzuki நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை Baleno கார் ஈட்டி தந்து கொண்டுள்ளது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

அதிகம் விற்பனையாகும் Premium Hatchback கார்களின் பட்டியலில் ஒவ்வொரு மாதமும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் காரை பல மடங்கு அதிக எண்ணிக்கையில் Maruti Suzuki Baleno விற்பனையாகி கொண்டுள்ளது. இந்திய சந்தையில் Tata Altroz, Hyundai i20, Volkswagen Polo மற்றும் Toyota Glanza உள்ளிட்ட கார்களுடன் Maruti Suzuki Baleno போட்டியிட்டு வருகிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

இதில், Toyota Glanza காரானது, Maruti Suzuki Baleno காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். Suzuki நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில், Maruti Suzuki நிறுவனத்தின் கார்களை Toyota நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் Maruti Suzuki Baleno தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து Glanza என்ற பெயரில் Toyota விற்பனை செய்கிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் Maruti Suzuki Baleno காரின் ஆரம்ப விலை 5.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். Maruti Suzuki Baleno கார் மொத்தம் 9 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. அத்துடன் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. Maruti Suzuki Baleno காரில் டீசல் இன்ஜின் தேர்வு கிடையாது. Baleno மட்டுமின்றி Maruti Suzuki நிறுவனத்தின் எந்த காரிலும் தற்போது டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவது கிடையாது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக கார்களில் டீசல் இன்ஜின் தேர்வை வழங்குவதை Maruti Suzuki நிறுவனம் நிறுத்தி விட்டது. ஆனால் தற்போது டீசல் இன்ஜின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே Maruti Suzuki நிறுவனம் மீண்டும் டீசல் இன்ஜின் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

எனவே வரும் காலங்களில் Maruti Suzuki நிறுவனத்தின் டீசல் இன்ஜின் கார்கள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அத்துடன் Maruti Suzuki நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறது.

Audi கார் வாங்கற அளவுக்கு வளரணும்... விஜய் டிவி பிரபலத்திற்கு Maruti கார் பரிசளித்த மனைவி... எவ்ளோனு தெரியுமா?

Maruti Suzuki நிறுவனத்தின் Wagon R எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருமா? விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்றால், எப்போது அறிமுகம் செய்யப்படும்? என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, August 20, 2021, 14:07 [IST]
English summary
Kpy sarath buys maruti suzuki baleno premium hatchback
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+