25 வயசுல சொந்தமா உழைச்சு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிட்டாரு.. அப்படி என்ன தொழிலை இந்த இளைஞர் செய்யுறாரு தெரியுமா?
இளம் தொழிலதிபர்களில் ஒருவராக கிரிஷ்ணா அரோரா அறியப்படுகின்றார். 'அச்சீவர்ஸ் கிளப்' எனும் நிறுவனத்திற்கு சொந்தக்காரராக இவர் இருக்கின்றார். இவர் இந்த நிறுவனத்தின் வாயிலாக பலதரப்பட்ட தொழிலைச் செய்து வருகின்றார். முக்கியமாக ஊக்கமளிக்கும் பேச்சாளர், நெட்வொர்க் மார்க்கெட்டிங் மற்றும் லீடர்ஷிப்பிற்கான கோச்சிங் உள்ளிட்டவற்றை அவர் செய்து வருகின்றனர். மேலும், இவருக்கு வயது வெறும் 25 மட்டுமே ஆகும். இந்த சிறு வயதிலேயே அவர் தற்போது பெரும் செல்வந்தர்கள் வாங்க விரும்பும் ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார்.
இந்த காரை முழுக்க முழுக்க அவருடைய சொந்த உழைப்பிலேயே அவர் வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவைச் சேர்ந்த இந்த இளம் தொழிலதிபர் தற்போது துபாயில் வசித்து வருகின்றார். இங்கேயே தன்னுடைய நீண்ட நாள் கனவை அவர் நிறைவேற்றியிருக்கின்றார். இது யூஸ்டு கார் ஆகும்.

துபாயைச் சேர்ந்த சிவி ஆட்டோமொபைல்ஸ் எனும் யூஸ்டு கார் விற்பனையாளர் வாயிலாகவே இளம் தொழிலதிபரான கிரிஷ்ணா அரோரா ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மாடல் ஆகும். இந்த காரை இப்போது புதிதாக வாங்க வேண்டும் என்றால் ரூ. 6.95 கோடி முதல் ரூ. 7.95 கோடி வரை ஆகும்.
இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரை யூஸ்டு கார் மார்க்கெட் வாயிலாக கிரிஷ்ணா வாங்கி இருக்கின்றார். தன்னுடைய அம்மா மற்றும் அப்பா உடன் சென்றே இந்த காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். மேலும், இந்த காரை சொந்த உழைப்பில் வாங்கிய இளம் தொழிலதிபராகவும் கிரிஷ்ணா தற்போது மாறியிருக்கின்றார்.
சொகுசு அம்சங்களை மிக தாராளமாகக் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதனால்தான் உலக பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காட்சியளிக்கின்றது. இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு காரணமாக இருக்கும் முக்கிய அம்சங்களில் அதன் சூசைட் ரக டோர்களும் ஒன்றாகும்.
இதுதவிர, பெரிய கிரில், எல்இடி லைட் மர்றும் பெரிய வீல் ஆகியவற்றையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 6.6 லிட்டர் டர்போசார்ஜட் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது அதிகபட்சமாக 563 எச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இந்தியாவிலும் இந்த காரை பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்த காரை கடந்த நாட்களில் நடிகர் விஜய்யும் பயன்படுத்தினார் என்பது கவனிக்கத்தகுந்தது. செல்வந்தர்கள் இந்த காரை விரும்ப பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதிலும், மிக முக்கியமானதாக அதன் அரண்மனை போன்ற ஆடம்பர வசதிகளே ஆகும்.
இந்த காரில் சிறிய குளிர்சாதன பெட்டி, பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையில் பயணித்தாலும் குலுங்கல் இல்லாத டிராவல் அனுபவத்தை வழங்கும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, வெளிப்பக்கத்தில் கேட்டும் இரைச்சல் துளியளவும் காருக்குள் கேட்காது. இதுபோன்று இந்த காரின் சிறப்புகளை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இத்தகைய காரையே இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் தற்போது தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கின்றார். அதுவும், தன்னுடைய 25 வயதிலேயே கோஸ்ட் சொகுசு காரின் உரிமையாளராக அவர் மாறியிருக்கின்றார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சொல்லப்போனால் சிலரை பொறாமையடையவும் அவர் செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையிலேயே பலரின் பிரியமான சொகுசு காராக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது மாறி இருக்கின்றன. ஆனால், இதன் விலை மிக அதீதம் என்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சற்றே குறைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications








