செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காங்க! கோடி ரூபாய் காரில் வந்தது அவங்களா! நேர்ல பாத்ததும் கிறங்கி போன இளசுகள்!

இந்தியாவின் பிரபல மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹம்மர் ஹெச்2 (Hummer H2). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எம்எஸ் டோனி (MS Dhoni) மற்றும் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) உள்ளிட்ட பலரிடமும் ஹம்மர் ஹெச்2 கார் இருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கூட ஹம்மர் ஹெச்2 காரை வைத்துள்ளனர். இதில் ஜாக்கி ஷெராப் (Jackie Shroff) ஒருவர் ஆவார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது, பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படங்களிலும் கூட ஜாக்கி ஷெராப்பை நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

Krishna Shroff Spotted In Hummer H2 SUV

தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான பிகில் (Bigil) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் வெளியான ஜெயிலர் (Jailer) உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். இவரது மகள் கிருஷ்ணா ஷெராப்பும் (Krishna Shroff) இணையத்தில் பிரபலமான ஒருவராகவே உள்ளார்.

இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், தனது தந்தை ஜாக்கி ஷெராப்பின் ஹம்மர் ஹெச்2 காரில், கிருஷ்ணா ஷெராப் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Krishna Shroff Spotted In Hummer H2

இந்த வீடியோ மும்பை சர்வதேச விமான நிலையத்தில் (Mumbai International Airport) எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா ஷெராப் பயன்படுத்திய ஹம்மர் ஹெச்2 காரின் விலை (Price) சுமார் 1 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வீடியோவில் மேலும் 2 பிரபலங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இதில் சோனு நிகம் (Sonu Nigam) ஒருவர் ஆவார். நடிகர், இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. அவர் பயன்படுத்தியது கியா கார்னிவல் (Kia Carnival) கார் ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று.

ஆனால் இந்திய சந்தையில் தற்போது கியா கார்னிவல் கார் விற்பனையில் இல்லை. அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். கூடிய விரைவில் புதிய தலைமுறை (New Generation) கியா கார்னிவல் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்த வீடியோவில் நாம் 3வது மற்றும் கடைசியாக பார்ப்பது மிரா ராஜ்புத் (Mira Rajput) ஆவார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் (Shahid Kapoor) மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் கார் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணா ஷெராப் மட்டுமல்லாது, மற்ற 2 பிரபலங்களின் வீடியோக்களும் மும்பை விமான நிலையத்தில்தான் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வீடியோவாக யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் பிரபல மனிதர்கள் பலரும், விமான நிலையங்களுக்கு வருவதற்கும், செல்வதற்கும் விலை உயர்ந்த கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். அதேதான் இங்கும் நடந்துள்ளது. எனினும் ஒரு சில பிரபலங்கள் மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்ற சாதாரண நிறுவனங்களின் கார்களையும் பயன்படுத்துகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 13:39 [IST]
English summary
Krishna shroff spotted in hummer h2 viral video full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+