பிரபல இளம் நடிகை இவ்வாறு பைக்கில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்பதை நம்பவே முடியல!! இணையத்தில் வைரலாகும் வீடியோ

சினிமா பிரபலங்களை லக்சரி கார், லக்சரி பைக்குகளில் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு அபூர்வமான விஷயம் அல்ல. இன்னும் சொல்ல போனால், அத்தகைய வாகனங்களிலேயே அவர்களை வெளியில் பார்க்க முடியும். நாம் வாங்க வேண்டும் என கனவு கண்டுவரும் வாகனங்கள் கூட சினிமா நட்சத்திரங்களுக்கு சாதாரணமானவைகளாக தெரியலாம்.

ஏனெனில் சில வாகனங்கள் நமக்கு தான் விலைமிக்கவைகளாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு சாதாரணமானவையே. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ராயல் என்பீல்டு பைக்குகளில் 650சிசி பைக்குகளை தான் பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் வாங்குவர். 350சிசி பைக்குகளை கண்டு கொள்ள மாட்டார்கள். இப்படி இருக்கையில் வளர்ந்துவரும் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் காட்சி தந்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு பைக்கில் மாஸாக எண்ட்ரீ கொடுத்த இளம் நடிகை!!

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். இந்த வீடியோவில் காட்சி தருபவர் நடிகை கிரிட்டி சனோன் ஆவார். சமீபத்தில் நடைபெற்ற பாலிவுட் பட பிரீமியர் நிகழ்ச்சி ஒன்றிற்கு கிரிட்டி சனோன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் வந்திறங்கியுள்ளார். பைக்கை வேறொரு நபர் ஓட்ட, இவர் பின்னால் அமர்ந்தப்படி பயணித்து வந்துள்ளார். அப்போது பலர் இந்த நிகழ்வை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தினர்.

மும்பை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நடிகை கிரிட்டி சனோன் இவ்வாறு மோட்டார்சைக்கிளில் வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஏனெனில் மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் கிரிட்டி சனோன் ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை. அப்படி இருக்கையில், இவர் மோட்டர்சைக்கிளில் மும்பை மாநகர சாலைகளில் பயணித்து வந்துள்ளார் என்பது நம்பும் விதமாக இல்லை.

நடிகர் ஒருவர் இவ்வாறு பைக்கில் பயணித்து வந்துள்ளார் என சொன்னால் பரவாயில்லை. ஏனெனில் சமீப காலங்களில் ஜான் ஆபிரகாம், கார்த்திக் ஆர்யன், டினோ மோரேயா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் ஜிம் உள்ளிட்டவற்றிற்காக மும்பை சாலைகளில் பைக்கில் காட்சி தந்துள்ளனர். ஆனால் ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை ஒருவர் மோட்டார்சைக்கிளில், அதிலிலும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்து இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

திரைக்குவர தயாராகும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சினிமா திரையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுப்படுகின்றனர். குறிப்பாக, படத்தில் நடித்த நடிகர், நடிகையர் சில விசித்திரமான செயல்களில் ஈடுப்பட்டதை கூட சமீப காலங்களில் பார்த்துள்ளோம். அந்த வகையில், திரைப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகை கிரிட்டி சனோன் இவ்வாறு பைக்கில் பயணித்துள்ளார் என்பது உண்மை எனும் பட்சத்தில், அதில் ஆச்சிரியப்படுவதற்கு எதுவுமில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், மும்பை மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு மோட்டார்சைக்கிள் பயணமே சிறந்தது. நடிகை கிரிட்டி சனோனிடம் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 லக்சரி கார் உள்ளது. பாலிவுட் சினிமா நட்சந்திரங்கள் பலர் சமீப காலமாக அதிகளவில் தேர்வு செய்யும் இந்த மெர்சிடிஸ்-மேபக் காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார் மட்டுமின்றி, கிரிட்டி சனோனிடம் ஆடி க்யூ7 காரும் உள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை பொறுத்தவரையில், இது தற்போதைக்கு பழைய தலைமுறை வெர்சனில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தலைமுறை புல்லட் 350 பைக் விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய புல்லட் 350 பைக்கில் முக்கிய அம்சமாக புதிய ஜே-சீரிஸ் 349சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

Article Published On: Monday, March 20, 2023, 19:34 [IST]
English summary
Kriti sanon arrived on royal enfield bullet 350 bike for movie premiere show
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+