பாக்க காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்க! ஆனா இவ்ளோ பெரிய ஆளா! 4 கோடி ரூபா சொகுசு காரை மொத ஆளா வாங்கியிருக்காங்க!

இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் (Mercedes Maybach GLS). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், திரையுலக நட்சத்திரங்களுக்கு பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. ரன்வீர் சிங் (Ranveer Singh), அஜய் தேவ்கன் (Ajay Devgn), அர்ஜூன் கபூர் (Arjun Kapoor), நயன்தாரா (Nayanthara), ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), தீபிகா படுகோனே (Deepika Padukone), டாப்ஸி பன்னு (Tapsee Pannu) மற்றும் கீர்த்தி சனோன் (Kriti Sanon) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடம் இந்த கார் இருக்கிறது.

இதில் பாலிவுட் திரையுலகில் முதன் முதலில் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரை வாங்கிய நடிகை என்ற பெருமை கீர்த்தி சனோனுக்கு உள்ளது. இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரை வாங்கி விட்டார்.

Kriti Sanon Spotted In Mercedes Maybach GLS 600

பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் புதிய காரை வாங்கினால், ஒரு சில வருடங்கள் மட்டும் பயன்படுத்தி விட்டு, வேறு காருக்கு மாறி விடுவார்கள். ஆனால் கீர்த்தி சனோன் இன்னமும் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் காரை வைத்துள்ளார். அத்துடன் அடிக்கடி வெளி இடங்களுக்கு இந்த காரில் வந்து சென்று கொண்டும் உள்ளார்.

இதன்படி வெளி இடம் ஒன்றுக்கு மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரில் கீர்த்தி சனோன் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், கீர்த்தி சனோன் தனது மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் காரில் ஏறி புறப்படுவதை காணலாம்.

Kriti Sanon

கீர்த்தி சனோனுக்கு தற்போது கிட்டத்தட்ட 35 வயதாகி விட்டது. ஆனால் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஹிந்தி மட்டுமல்லாது, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து கொண்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கல்லூரி மாணவி போன்று இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு ஏற்ப கையில் ஃபைல் ஒன்றை வைத்து கொண்டு, மிகவும் சாதாரணமான ஒரு உடையிலேயே கீர்த்தி சனோன் இந்த வீடியோவில் காட்சியளித்துள்ளார். சரி, அவர் பயணம் செய்த மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். கீர்த்தி சனோன் வைத்திருப்பது இந்த காரின், 600 4மேட்டிக் (600 4MATIC) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 3.35 கோடி ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.85 கோடி ரூபாய் வரும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன்களை செய்தால், காரின் விலை 4 கோடி ரூபாயை கடந்து விடும்.

ஆனால் இது தற்போதைய விலையாகும். கீர்த்தி சனோன் இந்த காரை கடந்த 2021ம் ஆண்டிலேயே வாங்கி விட்டார். எனவே அப்போது விலை இதை விட சற்று குறைவாக இருந்திருக்கலாம். இந்த விலை உயர்ந்த காரில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது.

அத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பின் இருக்கை பயணிகளுக்கு பிரத்யேக திரைகள், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்டவை எல்லாம் இந்த காரின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற அதிநவீன வசதிகளும், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இது கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, அஜின்கியா ரஹானே (Ajinkya Rahane) போன்ற கிரிக்கெட் வீரர்களும் கூட மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரை வைத்துள்ளனர். சொகுசான பயணத்தை எதிர்பார்க்க கூடிய கோடீஸ்வரர்கள் இந்த காரை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 13:06 [IST]
English summary
Kriti sanon spotted in mercedes maybach gls 600 luxury suv viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+