நடிகையாக இருந்தாலும், மேக்கப் இல்லாமல் விமானத்தில் வந்து இருக்காரு! கூட்டிட்டு போக வந்த காரின் விலை தெரியுமா?

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் விலை குறைவான கார்களை அறிமுகம் செய்வதையே ஒரு யுக்தியாக டொயோட்டா நிறுவனம் கொண்டுள்ளது. குறிப்பாக, மாருதி சுஸுகியின் பிரபலமான கார்கள் டொயோட்டா கார்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதேநேரம் விலைமிக்க கார்களையும் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. அவ்வாறான விலைமிக்க டொயோட்டா கார், வெல்ஃபையர் (Vellfire) ஆகும். இந்தியாவில் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட ஒரேயொரு டொயோட்டா கார் வெல்ஃபையர் ஆகும். டொயோட்டாவின் பிரம்மாண்டமான லக்சரி எம்பிவி (MPV) ரக காராக வெல்ஃபையர் விளங்குகிறது.

kriti sanon spotted with vellfire

பின் கதவுகள் பக்கவாட்டாக தள்ளக்கூடிய வகையில், கிட்டத்தட்ட வேன் போன்றதான தோற்றத்தை வெல்ஃபையர் கொண்டுள்ளது. இந்த காரின் வெளிப்பக்கம் இப்படியென்றால், உட்பக்கம் இன்னும் பிரம்மிப்பானதாக உள்ளது. இந்த பிரம்மாண்டமான காரை 7-சீட்டர் அல்லது 4-சீட்டர் வெர்சனில் வாங்கலாம். 4-சீட்டர் வெர்சனில் முன் இருக்கைகளுக்கு பின்னால் வெறும் 2 இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அவ்வளவு பெரிய இடத்தில் வெறும் 2 இருக்கைகள் மட்டுமே எனும்போது கை, கால்களை நன்கு நீட்டி அமர போதுமான இடவசதி கிடைக்கிறது. வெல்ஃபையர் காரை வாங்குபவர்கள் எல்லாருமே பெரும் பணக்காரர்களும், சினிமா & அரசியல் பிரபலங்களாகவே உள்ளதால் 4-சீட்டர் வெர்சனில் தான் இந்த டொயோட்டா கார் அதிகமாக விற்பனையாகிறது. குறிப்பாக, சினிமா நடிகர், நடிகையர் வெல்ஃபையர் காரை குட்டி கேரவன் போன்று பயன்படுத்துகின்றனர்.

kriti sanon spotted with vellfire

இதனாலேயே டொயோட்டா வெல்ஃபையர் சினிமா பிரபலங்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ள நிலையில், முன்னணி நடிகை ஒருவர் சமீபத்தில் பிராண்ட்-நியூ டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கி உள்ளார். புதிய வெல்ஃபையர் கார் உடன் அந்த நடிகை காட்சித்தரும் வீடியோ (Video) ஒன்று யூடியூப்பில் (Youtube) வெளியாகி உள்ளது. இவர் வேறு யாருமில்லை, பிரபல பாலிவுட் நடிகை கிரிட்டி சனோன் (Bollywood Actress Kriti Sanon) ஆவார்.

பாலிவுட் சினிமா துறையில் தற்சமயம் முன்னணி நடிகையாக விளங்கும் கிரிட்டி சனோன், இந்தியில் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு முதன்மையான தேர்வாக உள்ளார். இந்த அளவிற்கு பிரபலமானவராக விளங்கும் நடிகை கிரிட்டி சனோன் புதியதாக கோடி ரூபாய் செலவு செய்து டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கி இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

சமீபத்தில் வாங்கப்பட்ட இந்த புதிய வெல்ஃபையர் காரை நடிகை கிரிட்டி சனோனின் தாய் மற்றும் சகோதரி சில தினங்களுக்கு முன் பயன்படுத்தி இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது, நடிகை கிரிட்டி சனோன் தான் புதியதாக வாங்கிய வெல்ஃபையர் காரில் விமான நிலையம் ஒன்றில் காட்சி தந்துள்ளார். இந்த நடிகையின் வெல்ஃபையர் கார் முழுவதுமாக பளபளக்கும் கருப்பு நிறத்தில் உள்ளது.

இது இல்லாமல், பிரீசியஸ் மெட்டல் என்கிற சில்வர் நிறம் மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் ஆப்ஷன்களிலும் வெல்ஃபையர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டொயோட்டா காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் சொகுசான பயணம் ஆகும். அதேநேரம், தோற்றத்திலும் வசீகரிக்கக்கூடியதாக வெல்ஃபையர் உள்ளது. குறிப்பாக, இந்த காரின் முன்பக்கத்தில் படிக்கட்டு போன்றதான டிசைனில் வழங்கப்படும் கிரில் பகுதி தனித்துவமான லுக்கை வெல்ஃபையருக்கு வழங்குகிறது.

இந்தியாவில் ஹை (Hi) மற்றும் விஐபி- எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் (VIP - Executive Lounge) என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா வெல்ஃபையர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.22 கோடி மற்றும் ரூ.1.33 கோடியாக உள்ளது. இந்தியாவில் இந்த விலையுயர்ந்த டொயோட்டா கார் ஆனது ஹைப்ரீட் (Hybrid) காராக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சொகுசான பயணம் தான் டொயோட்டா வெல்ஃபையர் காரின் அடையாளம் ஆகும். அளவில் நன்கு பெரியதாக உருவாக்கப்படுவதால், கட்டிட அறை ஒன்று சக்கரங்களுடன் இயங்குவது போன்ற உணர்வை வெல்ஃபையர் வழங்குகிறது. இத்தகைய காரை வாங்கியிருப்பதன் மூலம், இனி நடிகை கிரிட்டி சனோன் அதிகமாக இந்த காரில் தான் காட்சியளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 13:47 [IST]
English summary
Kriti sanon spotted with her brand new toyota vellfire luxury car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+