விமானங்களையே தூக்கி சாப்பிடும் அரசு பஸ்! டிக்கெட் விலையை ஏத்தி ஏழைகள் வயித்துல அடிச்ச ஆம்னி பஸ்களுக்கு ஆப்பு!
இந்தியாவில் முன்பெல்லாம் அரசு பஸ்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். தமிழ்நாடு (Tamil Nadu) உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுதான் யதார்த்தமாக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக இந்த நிலைமை மாற தொடங்கியுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களுக்கு (Omni Buses) இணையாக, அரசு பேருந்துகளும் மாற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக கேஎஸ்ஆர்டிசி என சுருக்கமாக அழைக்கப்படும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC - Karnataka State Road Transport Corporation) தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையான சொகுசு வசதிகளை அரசு பஸ்களிலும் வழங்கி வருகிறது.
இதற்கு ஐராவத் க்ளப் க்ளாஸ் (Airavat Club Class) பஸ்கள் ஒரு உதாரணம். இந்த சூழலில், பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் வகையில், ஐராவத் க்ளப் க்ளாஸ் பஸ்களை கேஎஸ்ஆர்டிசி தற்போது மேம்படுத்தியுள்ளது. ஐராவத் க்ளப் க்ளாஸ் 2.0 (Airavat Club Class 2.0) என்ற பெயரில் இந்த புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கேஎஸ்ஆர்டிசி மொத்தம் 20 ஐராவத் க்ளப் க்ளாஸ் 2.0 பஸ்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. கர்நாடக மாநில முதல் அமைச்சரான சித்தராமையா (Siddaramaiah), இந்த 20 பஸ்களையும் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இவை அனைத்துமே வால்வோ மல்டி-ஆக்ஸில் (Volvo Multi-axle) பஸ்கள் ஆகும்.
இந்த 20 பஸ்களும் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து சென்னை, திருப்பதி, ஐதராபாத், ஸ்ரீ ஹரிகோட்டா, கோழிக்கோடு, காசர்கோடு, ராய்ச்சூர், மங்களூர், ஷிவமோகா, தாவனகரே, குண்டபுரா மற்றும் பெல்லாரி உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்களின் நீளம் 15 மீட்டர் ஆகும். 2x2 வகையில் 51 இருக்கைகள் இருக்கின்றன. எனவே பயணிகளுக்கு சௌகரியமான இடவசதி கிடைக்கும். முந்தைய மாடலை காட்டிலும், புதிய மாடலின் உயரம் அதிகம். எனவே பயணிகளுக்கான 'ஹெட்ரூம்' இடவசதியும் கூட சிறப்பாக உள்ளது.
முந்தைய மாடலை காட்டிலும், புதிய மாடலில், லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான இடவசதி, 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்டுஷீல்டு கண்ணாடியும், 9.5 சதவீதம் அகலமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே டிரைவரால் சாலையை நன்றாக பார்க்க முடியும். இதன் மூலமாக ப்ளைண்ட் ஸ்பாட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பஸ், சாலை விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த பஸ்ஸின் ஏரோடைனமிக் டிசைன், சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேம்பட்ட இன்ஜின், சிறப்பான செயல்திறனை வழங்கும். இதுதவிர செல்போன் சார்ஜிங் பாயிண்ட்கள் போன்ற வசதிகளும், இந்த பஸ்ஸில் உள்ளன.
மேலும் மேம்படுத்தப்பட்ட ஏசி, அவசர காலங்களில் பாதுகாப்பிற்காக தீ பிடித்தால் அலாரம் அடிக்கும் வசதி மற்றும் தீயை அணைக்கும் வசதிகளும் இந்த பஸ்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்ஸில் டிரைவர்களுக்கு என நிறைய கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கண்ட்ரோல்கள் அனைத்தும், டிரைவர்கள் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம், சௌகரியம் மற்றும் பாதுகாப்புதான். அவை இரண்டையும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் புதிய ஐராவத் க்ளப் க்ளாஸ் 2.0 பஸ்கள் வழங்கும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் இவை தனியார் சொகுசு ஆம்னி பஸ்களுக்கு மிகச்சிறந்த மாற்றாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








