ரயிலை விட 35 நிமிடம் சீக்கிரமாக போகும் அரசு பஸ்! இது எப்படி சாத்தியமானது தெரியுமா?
கேரள மாநிலத்தில் இயங்கி வரும் கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ் ஒன்று ரயிலை விட வேகமாக பயணம் செய்து வருகிறது. குறிப்பிட்ட ரோட்டில் ரயிலும் பசும்ப பயணம் செய்து வரும் நிலையில் ரயில் பயண நேரத்தை விட குறைவான பயண நேரத்தில் பஸ் குறிப்பிட்ட ஊரை சென்றடைகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? இதற்கு பின்னால் உள்ள விஷயம் என்ன? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் முழுவதும் பொதுவாக நீண்ட தூர பயணம் என்றால் மக்கள் பலர் ரயில் போக்குவரத்து தான் விரும்புவார்கள். இது மட்டுமல்லாமல் ரயில் விரைவாகவும் பயணம் செய்யும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும் விரைவான பயணம் சொகுசான பயணம் இரண்டுமே ரயிலில் தான் கிடைக்கும்.

ஆனால் கேரள மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு ரூட்டில் கதையே வேறாக இருக்கிறது. அங்கு உள்ள மக்கள் பலர் ரயிலை விட பஸ்கள் பயணம் செய்ய தான் அதிகம் விரும்புகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் ரயிலை விட விரைவாக செல்கிறது என்பதுதான். நீண்ட தூரத்தில் இருக்கும் இரண்டு நகரங்களை இணைக்கும் இந்த ரூட்டில் பஸ் எப்படி விரைவாக செல்கிறது. ரயில் ஏன் தாமதமாக செல்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் முதல் பாலக்காடு வரை அமிர்தி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கி வருகிறது. இந்த ரயில் தினமும் இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பும் அதிகாலை 3:40 மணிக்கு பாலக்காடு சென்றடையும். மொத்தம் ஏழு மணி நேரம் 10 நிமிடம் பயண நேரத்தை எடுத்துக் கொள்கிறது. திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய நகரங்களை இணைக்க சுமார் 340 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.

அதே திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காட்டுக்கு கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இரவு 9:30 மணிக்கு கிளம்பும் இந்த பஸ் சரியாக அதிகாலை 4:05 மணிக்கு பாலக்காட்டுக்கு சென்று அடைகிறது. சுமார் 6 மணி நேரம் 35 நிமிடங்கள் மட்டுமே இந்த பஸ் பயண நேரமாக எடுத்துக் கொள்கிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு கிளம்பும் இந்த பஸ் பாலக்காடுக்கு அந்த ரயில் சென்று அடுத்த 25 நிமிடத்தில் பாலக்காட்டுக்கு சென்றடைகிறது. ரயிலை விட வேகமாக பஸ் பயணம் செய்கிறது. பயண நேரத்தில் சுமார் 35 நிமிடம் வரை மிச்சமாகிறது. இதனால் பாலக்காட்டுக்கு செல்வதற்காக ரயிலை பிடிக்க நினைத்த சிலர் ரயிலே தவறவிட்டாலும், உடனடியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த பஸ்சை பிடித்து சரியான நேரத்திற்கு பாலக்காட்டுக்கு சென்றடைய முடியும்.
இதன் காரணமாக மக்கள் பலர் பாலக்காடு திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காட்டுக்கு செல்வதற்கு ரயிலை விட இந்த பஸ்ஸில் பயணம் செய்தால் அதிகம் விரும்புகிறார்கள். பஸ் விரைவாக பயணம் செய்கிறது அதிக நேரம் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதற்காக பஸ்ஸை தேர்வு செய்கிறார்கள். கேரளா மாநில அரசு போக்குவரத்தை எந்த அளவுக்கு முன்னேற்றி உள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் பஸ்ஸை விட ரயில் தான் மிக வேகமாக பயணம் செய்யும் என்பதால் மக்கள் பல ரயிலை விரும்புவார்கள். ஆனால் கேரள மாநிலத்தில் இது தலைகீழாக மாறி உள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரயிலை விட பஸ் எப்படி இவ்வளவு வேகமாக ஒரு இடத்திற்கு சென்றடைகிறது என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு தரமான சாலைகளும் தரமான பஸ் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் திறன் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பஸ்கள் பராமரிப்பு மிக மோசமாக இருப்பதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தனியார் பஸ்கள் மீது மக்களுக்கு அதிக மோகம் இருக்கிறது. அரசு பஸ்கள் பல இடங்களில் பழுதாகி நிற்கும் சம்பவங்கள் கூட நடந்துள்ளது. தற்போது புதிதாக அதிகமான பஸ்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்திலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலை விட பஸ் அதிக வேகத்தில் விரைவாக செல்கிறது என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் பல்வேறு விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற சேவைகளை கேரள மாநில அரசு பஸ் வழங்கி வந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








