கண்முன் தெரியாம பைக் ஓட்டியதால் நடந்த கோர விபத்து! பலவீனமான இதயம் உள்ளவர்கள் வீடியோவை பாக்க வேணாம்!

மலை சாலைகளில் டூவீலர்களை ஓட்டுவது உற்சாகமான அனுபவத்தை தரும். ஆனால் அந்த உற்சாகத்தை சற்று அடக்கி வைத்து கொண்டு, பொறுப்புடன் டூவீலர்களை ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் விபத்தில் சிக்க நேரிடும். குறிப்பாக மலை சாலைகளில் அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் பைக் ஓட்டிய ஒருவர், விபத்தில் சிக்கியுள்ளார். அதிர்ச்சிகரமான இந்த சம்பவத்தின் வீடியோ (Video) யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலை சாலை ஒன்றில், 2 பேர் கேடிஎம் (KTM) பைக்கை ஓட்டி கொண்டு செல்வதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

KTM Bike-Maruti Suzuki Alto Accident

அவர்கள் இருவரும் அதிவேகத்தில் பைக்கை ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக முன்னால் சென்று கொண்டிருந்த பைக் ரைடர் மின்னல் வேகத்தில் செல்வதை நம்மால் காண முடிகிறது. நடுவில் அவர்கள் இருவரும் தங்களின் நண்பர்களை சந்திக்கின்றனர். அப்போது அவர்களது நண்பர்கள் சிலர் சாலையில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்கின்றனர்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு, 2 கேடிஎம் பைக் ரைடர்களும் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். அப்போதும் அவர்கள் அபாயகரமான முறையில்தான் பைக்கை ஓட்டுகின்றனர். அப்போது சாலையில் திரும்ப முயன்று கொண்டிருந்த ஒரு மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரின் பின் பகுதியில் ஒரு ரைடர் மோதி விட்டார்.

KTM Bike Accident

கேடிஎம் பைக் ரைடர் அதிவேகத்தில் வந்த காரணத்தால், அவரால் பைக்கை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை. எனவே மாருதி சுஸுகி ஆல்டோ காரின் மீது அவர் மோத நேரிட்டது. ஆனால் நல்ல வேளையாக சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டார் என்பது மனதிற்கு ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் ஆகும்.

இந்த விபத்து நடைபெற்ற பிறகு, கேடிஎம் பைக் ரைடர்கள் மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ காரின் டிரைவர் என இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு கொண்டு, சூழ்நிலையை முதிர்ச்சியாக கையாண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சில சமயங்களில் இத்தகைய விபத்துக்கள் மிகப்பெரிய சண்டையை உருவாக்கி விடும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதும் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு சூழலிலும் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்ட கூடாது என்ற பாடத்தை இந்த விபத்து நமக்கு கற்று தருகிறது. குறிப்பாக மலை சாலைகளில் அதிவேகம் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும். உங்களுக்கு அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அது நிச்சயமாக தவறில்லை.

ஆனால் ரேஸ் டிராக்கில் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டும். பொது சாலைகளில் அல்ல. அதேபோல் ஸ்டண்ட் செய்யும் ஆசை இருந்தாலும், அதை தனியார் இடங்களில் பாதுகாப்பான முறையில்தான் செய்ய வேண்டும். பொது இடங்களில் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட்களை செய்ய கூடாது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 23:49 [IST]
English summary
Ktm bike maruti suzuki alto accident watch video here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+