தவறான பாதையில் ஏறிவந்த இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞர்: வைரல் வீடியோ!

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா காரை இடைமறைத்து, கேடிஎம் பைக்கை ஓட்டிவந்த பைக்கர் தக்கம் பாடம் புகட்டியுள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்...

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

இந்தியாவில் வாகனங்களை வாங்கி குவிப்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆகையால், இந்தியா வாகனங்களுக்கான ஓர் மிகப்பெரிய சந்தையாக பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த சில வருடங்களாக நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்வடைந்து வருகின்றது. அதேபோன்று, அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அசூரமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

அசூர வேகத்தில் வளர்ந்துவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இந்தியாவில் இருக்கிறதா...? என கேட்டால் அது நமக்கு மிகப்பெரிய சந்தேகத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால், இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மிகவும் இடுக்கான சாலை அமைப்பைக் கொண்டதாக உள்ளன. இதனால் காலையும், மாலையும் அலுவலக நேரங்களில், இந்தியாவின் முக்கியமானச் சாலைகள் அனைத்தும் மிகப் போராட்டத்தைச் சந்திக்கின்றன.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சொல்லப்போனால், சில நேரங்களில் ஒரு சிக்னலைக் கடக்க மட்டுமே மணிக்கணக்கில் நேரமெடுத்துக் கொள்ளும் அவலம் இங்கு நிலவுகிறது. அந்த அளவிற்கு வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இதைப் போன்ற இடையூறுகளைத் தவிர்க்கும் விதமாக போக்குவரத்தில் பல்வேறு விதிமுறைகள் அரசும், போக்குவரத்துத்துறையும் அமல்படுத்தி வருகின்றன.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

ஆனால், அதனைப் பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. வாகன ஓட்டிகள், அவர்களின் அவசர தேவைக்காக சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைத் தண்டிக்கும் விதமாக போக்குவரத்துத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவற்றைத் துளியும் மதியாத வாகன ஓட்டிகள் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல்களால் வாகன விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இதுபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இங்கு மாறாக, விதிமுறை மீறலில் ஈடுபட்ட டாடா இன்டிகா காரின் உரிமையாளரை, கேடிஎம் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் இடைமறைத்து நின்று சரியான பாதையில் செல்லுமாறு எச்சரிக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவானது, கேடிஎம் பைக்கை ஓட்டிவந்த இளைஞரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது. மேலும், இந்த வீடியோவை லோகேஷ் சுவாமி என்ற நபர் அவரது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், எதிர்பக்கமாக வரும் டாடா இன்டிகா வாகன ஓட்டி, தவறான பாதையில், மற்ற வாகனங்கள் செல்லாதவாறு ஏறி வருகிறார். அவர் செல்ல வேண்டிய சரியான பாதையில், அவ்வளவு நெரிசல் காணப்படாத நிலையில், டாடா இன்டிகா உரிமையாளர் இவ்வாறு விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளார்.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

இந்த விதிமீறலால் சரியான பாதையில் செல்லும் வாகனங்கள் மிகவும் ஒதுங்கி, சற்று நின்று செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக கேடிஎம் பைக்கர், டாடா இன்டிகா வாகன ஓட்டியின் செயலால் எரிச்சலடைந்தார். மேலும், தன்னுடைய கோபத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்டும் விதமாக, அந்த காரை நகரவிடமால் இடைமறைத்து நின்றார்.

இதனால், அந்த கார் சற்று நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தனது ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில், நீங்கள் தவறாக பாதையில் வரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் இதனைப் போலீஸிடம் கொடுத்து உங்கள் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் டாடா இன்டிகா காரின் உரிமையாளரிடம் கேடிஎம் பைக்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தவறை உணர்ந்த அந்த காரின் உரிமையாளர் பைக்கரிடம் மன்னிப்பு கேட்டு, அவசரத்தின் காரணமாக இவ்வாறு தவறான பாதையில் வந்ததாக விளக்கம் அளித்தார். மேலும், இனி இவ்வாறு விதிமீறலில் ஈடுபடவும் மாட்டேன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த காரை கேடிஎம் பைக்கர் செல்ல அனுமதித்தார்.

தவறான பாதையில் ஏறிவந்த டாடா இன்டிகா - இடைமறைத்து தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு... வைரல் வீடியோ!

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் நடைபெற்றது. பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமான பிஎம்டிசி பஸ், ஒரு வழிச்சாலையில் ஏறிவந்து மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு மிகவும் ஆபத்தான சூழலில் சென்றது. அப்போது, அவ்வழியாக வந்த பல்சர் பைக்கர், அந்த பஸ்ஸை இடைமறைத்து, மேலும் நகராதவாறு பைக்கை நிறுத்தியுனார். இதனால், அந்த நேரத்தில் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீஸார் இருவரையும் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வாகன ஓட்டிகள் தங்களின் தேவைக்காக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இந்த செயலால் அவர்கள் மட்டுமின்றி எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டிகளும் ஆபத்தைச் சந்திக்கின்றனர். இந்தியாவில் வாகன விபத்தால் இறப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும் வாகனங்கள் இயக்குவது அவசியமாக உள்ளது. இது, அவர்களையே நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் நன்மையை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2019, 16:23 [IST]
English summary
KTM Biker Angrily Blocks TATA Indigo Which Was One Way. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+