புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ஏராள பிரச்னைகள்... அலட்சியப்படுத்தும் டீலர்கள்: ஆதாரங்கள் இதோ... !
புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் ஏராளமான பிரச்னைகள் இருப்பதாக வீடியோ ஆதாரங்களுடன் பரபரப்பு புகாரை பதிவு செய்துள்ளார் பிரபல கார் பந்தய வீரர் தீபக் சின்னப்பா.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே அந்த பைக்கில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பது குறித்து ஏராளமான புகார்கள் எழத் துவங்கின.

பெங்களூரை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் தீபக் சின்னப்பா தான் ஆசையாய் வாங்கிய புதிய கேடிஎம் ட்யூக்க 390 பைக்கில் இருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை வீடியோ ஆதாரங்களுடன் டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பழைய கேடிஎம் ட்யூக் 390 பைக்கை பயன்படுத்தி வந்த தீபக் சின்னப்பா, அந்த பைக்கின் மீது இருக்கும் காதலால், கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கையும் ஆசை ஆசையாய் வாங்கி இருக்கிறார். இரண்டையுமே வீட்டில் வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூன் 23ந் தேதி பெங்களூரில் உள்ள லேங்ஃபோர்டு கேடிஎம் ஷோரூமில் அந்த பைக்கை முன்பதிவு செய்து வாங்கி இருக்கிறார். அதன் பின்னர் பெங்களூர், கஸ்தூரிபா சாலையில் உள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தில் பராமரிப்புப் பணிகளை செய்து வந்துள்ளார்.

கடந்த 10ந் தேதிதான் கட்டணமில்லா மூன்றாவது சர்வீஸை கஸ்தூரிபா சாலையில் உள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தில் செய்துள்ளார். இந்த நிலையில், தீபக் சின்னப்பாவின் பைக்கில் ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன.

கடந்த ஆண்டு கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எல்இடி ஹெட்லைட்டில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் எழுந்தன. உலக அளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த பிரச்னையை சரி செய்வதற்காக சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை கேடிஎம் நிறுவனம் வழங்கியது.
Recommended Video


ஐரோப்பிய நாடுகளில் முறைப்படி அறிவிக்கப்பட்டு நடந்த இந்த சாஃப்ட்வேர் அப்டேட் இந்தியாவில் எந்த அறிவிப்பும் இல்லாமல், காதும் காதும் வைத்தாற்போல் நடந்தது. குறிப்பிட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளில் சாஃப்ட்வேரை அப்டேட் செய்தது கேடிஎம் இந்தியா நிறுவனம். அதில், தீபக் சின்னப்பாவின் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கும் ஒன்று.

பிரச்னை சரி செய்வதற்காக கொடுக்கப்பட்ட அந்த சாஃப்ட்வேர் அப்டேட்டிற்கு பின்னர்தான் தீபக் சின்னப்பாவிற்கு பிரச்னைகள் விஸ்வரூபமெடுத்தன. சாஃப்ட்வேர் கொடுத்த சில மாதங்களில் தீபக் சின்னப்பாவின் கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் சாவியை எடுத்த பின்னரும் ஹெட்லைட் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டே இருந்துள்ளது.

ஹெட்லைட் பிரச்னை எழுந்தபோதே, இந்த டிஎஃப்டி திரையிலும் பிரச்னை எழுந்துள்ளது. மேலும், ஒவ்வொரு முறை இக்னிஷனை ஆன் செய்யும்போது அந்த சாதனம் ரீபூட் ஆகி இருக்கிறது. வேகம், சராசரி மைலேஜ் உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை காட்டுவதிலும் பிரச்னை இருந்துள்ளது.
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் டிஎஃப்டி திரையில் தேதி, நேரம், சர்வீஸ் ரிமைன்டர், ஓடிய தூரம், எரிபொருள் செலவு அளவு ஆகிய அனைத்தும் அவ்வப்போது தவறாக காட்டியதுடன், டிஎஃப்டி திரை அவ்வப்போது செயலிழந்து போவதும் வாடிக்கையாகி இருக்கிறது.

இதுகுறித்து கஸ்தூரிபா சாலையில் உள்ள கேடிஎம் சர்வீஸ் சென்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், அங்குள்ள சர்வீஸ் சூப்பர்வைசர் பிரச்னைக்கு தாங்கள் காரணமில்லை என்றும், அதற்கு உரிய ஆதாரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். பின்னர், சர்வீஸ் சென்டரில் இருந்தவர்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்னையை சரிபார்க்க கூறி இருக்கிறார்.
இதையடுத்து, அங்கு மீண்டும் சாஃப்ட்வேர் செய்துள்ளனர். ஆனால், அதன் பிறகும் ஹெட்லைட் பிரச்னை சரியாகவில்லை. கடந்த 10ந் தேதி கட்டணமில்லா மூன்றாவது சர்வீஸுக்கு சென்றபோதும், சாஃப்ட்வேர் அப்டேட் செய்துள்ளனர். அப்போதும் பிரச்னை சரியாகவில்லை.

பின்னர் இதுகுறித்து சர்வீஸ் மையத்தில் மீண்டும் வினவியபோது, அந்த சாஃப்ட்வேர் அப்டேட் டிஎஃப்டி திரைக்கு மட்டும்தான் ஹெட்லைட் பிரச்னைக்கு இல்லை என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார் சர்வீஸ் மையத்தின் சூப்பர்வைசர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் தீபக்.

இந்த பிரச்னைகள் ஒருபுறம் தலைவலியாக மாறிய நிலையில், 3-வது சர்வீஸ் முடிந்து ஒரு வாரத்திற்குள் அடுத்து ஒரு புதிய பிரச்னை எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் தனது பைக்கில் அலுவலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பைக்கின் ஃப்யூவல் ஃபில்டர் கழன்று பெட்ரோல் வெளியேறத் துவங்கி இருக்கிறது. உடனடியாக, கஸ்தூர்பா சாலையிலுள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு பிரச்னையை தெரிவித்துள்ளார்.

ஆனால், அங்கிருந்தவர்கள் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். உடனடியாக, எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
அப்போது, அங்கிருந்த சர்வீஸ் சூப்பர்வைசர், வண்டியை மற்றொரு வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின்னர், பிரச்னையை பார்த்துவிட்டு சொல்கிறோம் என்று கூறி இருக்கின்றனர்.

இதனை கேட்டு அதிர்ந்த தீபக், அந்த கட்டணத்தை எல்லாம் ஏற்க முடியாது என்று கூறி மீண்டும் கஸ்தூரிபா சாலையில் உள்ள கேடிஎம் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அங்கிருந்து 2 மெக்கானிக்குகள் பைக் நின்ற இடத்திற்கு வந்து ஃப்யூவல் ஃபில்டரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை சரிசெய்துள்ளனர்.

ஆனால், பிரச்னைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சாவியை எடுத்த பின்னரும் தொடர்ந்து ஹெட்லைட் ஒளிர்வதால், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போய் அவ்வப்போது செல்ஃப்ட் ஸ்டார்ட் செய்வதிலும் பிரச்னை ஏற்படுகிறதாம். பிரச்னைகள் குறித்து பலமுறை கூறியும் இதுவரை உருப்படியான விஷயம் எதையும் கேடிஎம் சர்வீஸ் மையத்தில் செய்து தரவில்லையாம்.

"தொடர்ந்து பைக்கை ஓட்டியிருந்தால் நிச்சயம் தீப்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பைக்கை நிறுத்தியதால் விபத்திலிருந்து தப்பினேன்," என்று தீபக் சின்னப்பா டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பிரச்னைகள் ஏற்படுவது குறித்து இது புதிய செய்தியல்ல. புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் ஹெட்லைட்டில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது குறித்து ஏராளமான புகார்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் செல்லும்போது சில வேளைகளில் ஹெட்லைட் முற்றிலுமாக அணைந்து பைக் ரைடரை சிக்கலிலும் ஆழ்த்தியதாக செய்திகள் வந்தன.
புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களிலும் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது பைக் குறித்து புகார்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர் தலையில் பைக்கை கட்டினால் போதும் என்ற ஒரே நோக்கோடு பைக் நிறுவனமும், டீலர்களும் செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்தில் இந்த நிறுவனங்கள் எந்தளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதையும், பல லட்சம் போட்டு இதுபோன்ற விலை உயர்ந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு அந்த நிறுவனம் ஆர்வம் காட்டாமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

இதுதொடர்ந்தால், நிச்சயம் கேடிஎம் பைக்குகள் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர் மத்தியில் வெகு சீக்கிரத்தில் குறைந்து போகும் என்பதை அந்த நிறுவனம் மனதில் வைத்து விற்பனைக்கு பிந்தைய சேவையை மேம்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் புகார்களை காது கொடுத்து கேட்டு, அதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
பம்புசெட் எஞ்சினுடன் வந்த டீசல் புல்லட் பற்றி சுவாரஸ்யத் தகவல்கள்!

வர்த்தக ரீதியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டீசலில் ஓடும் ஒரே இருசக்கர வாகனம் என்ற பெருமை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டீசல் புல்லட்டுக்கு மட்டுமே உண்டு.

கடந்த 1993ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த டீசல் புல்லட் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சாலைகளில் அதிகம் வலம் வந்தது. மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக இதனை தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

பலராலும் டீசல் புல்லட் என்று அழைக்கப்பட்டாலும்,, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வைத்திருந்த பெயர் டாரஸ். இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய 325சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்த சிறிய ரக எஞ்சினும் இதுதான்.

டீசல் புல்லட்டில் க்ரீவ்ஸ் நிறுவனத்தின் லொம்பர்தினி என்ற பம்பு செட்டுகளில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சினில் சிறிய மாறுதல்களை செய்து பொருத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6.5 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருந்தது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் புல்லட் மோட்டார்சைக்கிள் 168 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த டீசல் புல்லட் 196 கிலோ எடை கொண்டதாக இருந்தது. எனினும், மைலேஜில் பெட்ரோல் மாடல் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தது.

பிரத்யேகமான பச்சை வண்ணக் கலரில் விற்பனை செய்யப்பட்ட டீசல் புல்லட் இப்போது இருக்கும் இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் பைக்குகளைவிட அதிக மைலேஜ் தர வல்லதாக இருந்தது. ஆம், டீசல் புல்லட் லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் தரும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டீசல் புல்லட் நடைமுறையில் லிட்டருக்கு 55 கிமீ வரை மைலேஜ் தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த காலக்கட்டத்தில் டீசல் விலை மிக குறைவாக இருந்ததால், இந்த மோட்டார்சைக்கிள் இருசக்கர வாகன மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோட்டார்சைக்கிளின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்த விஷயம், அதிக அதிர்வுகள்தான். இந்த மோட்டார்சைக்கிளை ஆசையோடு வாங்கிய பலர் ஒரு சில ஆண்டுகளிலேயே உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு விற்க முனைந்தனர்.

அடுத்து, செல்ஃப் ஸ்டார்ட் இல்லாமல் காலால் உதைத்து ஸ்டார்ட் செய்வதில் பெரும் பிரச்னை இருந்தது. அதிக புகையும் வெளியேற்றமும் வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய விஷயம்.

வட இந்தியாவில் சில இடங்களில் இந்த டீசல் புல்லட்டை மூன்று சக்கர பயணிகள் வாகனமாக மாற்றி, ஷேர் ஆட்டோ போல பயன்படுத்தினர்.

2000ம் ஆண்டில் டீசல் புல்லட் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், அதிக டிமான்ட் இருந்த காரணத்தை வைத்து சூரஜ் மோட்டார்ஸ் நிறுவனம் டீசல் புல்லட்டை தயாரித்து விற்பனை செய்தது. பெட்ரோல் புல்லட் வைத்திருந்த பலரும் டீசல் எஞ்சினை வாங்கி பொருத்திக் கொண்டனர். எனினும், பெட்ரோல் புல்லட் போல மதிப்பை தக்க வைக்க முடியாமல் வழக்கொழித்து போனது.
Picture Source: Youtube


Click it and Unblock the Notifications