கண்ணால் பார்ப்பது பொய்... இதில் யார் மீது தவறு உள்ளது? 100இல் 99 பேரது கணிப்பு தவறாகவே இருக்கும்!!

ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போல் பொது சாலையில் கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஓட்டியவருக்கு நேர்ந்துள்ள சம்பவம், அதுபோன்று பைக்கை ஓட்ட நினைப்பவர்களுக்கு ஓர் அபாய ஒலியாக ஒலித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் பெரிய நாடாக இருப்பதாலோ என்னவோ நம் இந்தியா சாலை விபத்துகளுக்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. நம் நாட்டு சாலைகளின் தரம் பெரும்பான்மையான இடங்களில் (குறிப்பாக கிராமப்புற & மலைப்பகுதிகளில்) சிறப்பாக இல்லை என்பதை இதற்கு ஓர் காரணமாக கூறினாலும், நம் மக்களிடத்தில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதையும் மறுக்க முடியாது.

ktm rc390 bike crashed with car

இதனாலேயே அதிவேக பயணம் நம் நாட்டில் எப்போதுமே ஆபத்தானது ஆகும். ஆதலால், அதிவேகமாக சென்றாலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றியே பயணிக்கிறேன் என அசால்ட்டாக இருந்துவிட முடியாது. ஏனென்றால் நம் சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்று சொல்லவே முடியாது. இதற்கு மற்றொரு உதாரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விலையுயர்ந்த பைக்குகளை கொண்ட ரைடர் குழு ஒன்று மலை சாலைகளில் பயணம் செய்துள்ளனர்.

பொதுவாகவே மலைப்பாதைகள் வளைவு, வளைவாக இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய சாலைகளை கண்டாலே பைக் ரைடர்கள் உற்சாகமாகி விடுவர். அவ்வாறுதான் இந்த பைக் ரைடர்ஸ் குழுவும் ரேஸ் டிராக்கில் பயணிப்பதுபோல் வளைவுகளில் சாய்வாக சாய்ந்தப்படி தங்களது பைக்குகளை ஓட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில், இது ரேஸ் டிராக் அல்ல என்பதை அவர்கள் முற்றிலுமாக மறந்துவிட்டார்கள் போல.

ktm rc390 bike crashed with car

ஏனெனில், வேகமாக இயங்கி கொண்டிருந்த இவர்களது பைக்குகளுக்கு நேரெதிரான திசையில் திடீரென ஒரு கார் வந்துள்ளது. இதனை, அவர்களுள் எவரொருவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டிகள் சிலர் சாமர்த்தியமாக தங்களது பைக்கை கண்ட்ரோல் செய்து தப்பித்துள்ளனர். ஆனால், ஒரு ரைடரின் பைக் மட்டும் காரின் முன்பக்கத்துடன் லேசாக மோதியுள்ளது.

வேகமாக சென்ற பைக்கிற்கு இந்த ஒரு சிறு மோதலே முற்றிலுமாக கண்ட்ரோலை இழப்பதற்கு போதுமானதாக இருந்துள்ளது. பைக்கின் கண்ட்ரோலை இழந்ததால் அந்த குறிப்பிட்ட ரைடரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காருடன் மோதிய வேகத்தில், சாலைக்கு அருகே இருந்த மண்மேட்டின் மீது பைக் ஏறியுள்ளது. அதன்பின் நல்லவேளையாக பைக்கின் வேகத்தை குறைத்து ரைடர் எந்த சேதாரமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை மேலே காணலாம். இந்த விபத்தில் ரைடருக்கு பெரியதாக எந்த காயமும் ஏற்பட்டதுப்போல் தெரியவில்லை. ஆனால் காருடன் மோதியதில் பைக்கின் பின்பக்கத்தில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் காரின் முன்பக்க ஹெட்லைட் பகுதியும் சேதமடைந்துள்ளதை வீடியோவில் காண முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த வீடியோவை பார்த்ததும் கார் ஓட்டியின் மீதுதான் தவறு என்பதுபோல் தோன்றலாம். ஆனால், வீடியோவை சற்று உற்று பார்த்தீர்கள் எனில் காரின் நம்பர் பிளேட் குழப்பமாக, வித்தியாசமாக உள்ளதை காண முடியும். ஏனென்றால், வீடியோ மிரர் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த வீடியோவை நீங்கள் முன்பக்கமாக கண்ணாடியை வைத்து அதில் பார்த்தால்தான் புரியும். ஆதலால் கார் ஓட்டி சாலையில் சரியான பக்கத்தில்தான் சென்றுள்ளார். இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க காரணம், பைக் ஓட்டிகளே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 20, 2023, 21:33 [IST]
English summary
Ktm rc390 bike crashed with car viral instagram video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+