கையில காரை வாங்கினதும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. மொத்த பற்களும் தெரியுற மாதிரி சிரிக்கிற இவங்க ஒரு நடிகையா!

இந்தியாவில் மிக வேகமாக ஓர் கார் மாடல் பிரபலமடைந்து வருகின்றது. மஹிந்திரா (Mahindra)-வின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்இவி 9இ (XEV 9e), கார் மாடலே அது ஆகும். இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. திரை உலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி பெரும் செல்வந்தர்கள் வரை என பலர் இந்த வாகனத்தை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே பிரபல நடிகையும், மாடலுமான குப்ரா சைத், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மின்சார காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக குப்ரா சைத் அந்த காரை டெலிவரி பெறும் படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

Kubbra sait purchases mahindra xev 9e electric suv

இதன் வாயிலாக குப்ரா சைத் மஹிந்திரா இ-காரை வாங்கியிருப்பது அதிகாரப்பூர்வ உறுதியாகி இருக்கின்றது. காரை கைகளில் வாங்கியதும் தன்னுடைய அளவற்ற மகிழ்ச்சியை அவர் ஷோரூமில் வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றன. குப்ரா சைத், ஆளே யாருனு தெரியல, யார் இவங்க?.. என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கலாம்.

ஆரம்பத்தில் துபாயில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாதாரண ஊழியராக பணியைத் தொடங்கியவரே குப்ரா சைத். இதற்கு பின்னரே அவர் மாடலிங் துறையில் தன்னுடைய காலடி தடத்தைப் பதித்தார். இந்த துறையில் அவர் பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. முக்கியமாக 2009 ஆம் ஆண்டில் இந்திய உலகளாவிய அழகுப் போட்டியில் 'மிஸ் பெர்சனாலிட்டி' விருதை அவர் வென்றார்.

அதுமட்டுமல்ல, அவர் 2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் 'சிறந்த பெண் எம்சி' (Emcee) என்கிற விருதையும் வென்றார். குறிப்பாக, நெட்பிளிக்ஸில் வெளியாகி 'சேக்ரட் கேம்ஸ்' எனும் ஷோவில் குக்கூ எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் பலரின் மனம் கவர்ந்த நடிகையாக அவர் மாறினார்.

இத்தகைய நபரே மகிழ்ச்சியில் மொத்த பற்களும் தெரியும் அளவிற்கு மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரை டெலிவரி பெற்றுச் சென்றிருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 21.90 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதிகபட்சமாக ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் இந்தியாவில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. முதல் ஒன்றில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இரண்டாவது ஒன்றில் ஃபுல் சார்ஜில் 656 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல ஆடம்பர அம்சங்கள் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதிலும் மஹிந்திராவின் இந்த புதுமுக கார் தலை சிறந்த வாகனமாக விளங்குகின்றது. இதனால்தான் ஏர்ஆர் ரஹ்மான் போன்ற பிரபலங்களும் இந்த காரை வாங்கியிருக்கின்றனர். ஆமாங்க, இந்த காரை இவர் சமீபத்திலேயே டெலிவரி பெற்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை வைத்து பார்க்கையில், சீக்கிரமே இந்தியாவின் மின்சார கார் பிரிவை இந்த கார் தன் பக்கம் வளைத்துப் போட்டுக் கொள்ளும் என்கிற எண்ணம் எழும்பி இருக்கின்றது. மேலும், இந்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ளும் மேலும் சில புதிய பேட்டரி பேக் தேர்வுகள் இந்த காரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 15:12 [IST]
English summary
Kubbra sait joins the trend of bollywood celebrities buying mahindra xev 9e electric suv
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+