15 நாளுக்கு ஒரு ராக்கெட் தமிழகத்திலிருந்து விண்ணில் பாயும்! இஸ்ரோ சொன்ன செம அப்டேட்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடி கல்லை பிரதமர் மோடி நாட்டிச் சென்றுள்ள நிலையில் தற்போது ஏவுதளம் எப்பொழுது தயாராகும்? எப்பொழுது இந்தியா தமிழகத்திலிருந்து ராக்கெட் ஏவுதலை துவங்கும்? என்ற முக்கிய அப்டேட் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது ஆய்வுக்காக ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்புவதற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை தேர்வு செய்து அங்கு தான் ராக்கேட் ஏவுதல மையத்தை அமைத்துள்ளது. தற்போது இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்டுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான் விண்ணில் செலுத்தப்படுகிறது.

kulasekarapattinam rocket launch

இந்நிலையில் இஸ்ரோ தற்போது இரண்டாவது ஏவுதளத்தை தயார் செய்ய முடிவு செய்து இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அப்பொழுது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்து அங்கிருந்து ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் போது எந்த வித பிரச்சனையும் இல்லாமல் விண்வெளிக்கு ராக்கெட் பயணிக்கும் என்பதால் அங்கு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வந்து ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி சென்றார். இந்நிலையில் இஸ்ரோ சேர்மன் சோம்நாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் இந்த ராக்கெட் ஏவுதலும் குறித்த சில முக்கியமான தகவல்களை எல்லாம் வெளியிட்டார். இதன்படி இந்த ஏவு தளத்தில் இருந்து ராக்கெட்டுகள் எப்பொழுது விண்ணில் பாயும் என்ற தகவலையும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து நடந்தது. பின்னர் அங்கிருந்து குலசேகரப்பட்டினம் வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் அங்கிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேஸ் மூலம் ரோகிணி சவுண்டிங் ராக்கெட் என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவினார் இது அட்சய தீர்க்க ரேகை எனப்படும் இலக்கை நோக்கி பறந்து சென்றது.

அதன் பின்னர் இவர் ஊடகத்திடம் பேசியபோது: " குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ராக்கெட் ஏவுதளம் என்பது அமைக்கப்பட திட்டமிடப்பட்டு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் எல்லாம் விரைவில் துவங்க உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை பணிகள் நிறைவு பெற்று இந்த ராக்கெட் ஏவுதளம் ஏவுதலுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளம் தயாரானால் இங்கிருந்து இஸ்ரோவின் ராக்கெட்கள் விண்ணில் பறக்கும்.

குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளத்தில் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகள் விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் எல்லாம் துவங்க உள்ளன. அதாவது 15 நாளுக்கு ஒருமுறை ராக்கெட் விண்ணில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என்பது சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சேட்டிலைட் லான்ச் வெஹிகிள் ராக்கெட்டுகளை இங்கிருந்து விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். இதில் சேட்டிலைட்டுகளை வைத்து விண்வெளிக்கு அனுப்ப முடியும். இதை இஸ்ரோவின் சொந்த பயன்பாட்டிற்காகவும் இந்திய நாட்டின் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும். அதே நேரம் தனியார் நபர்கள் சேட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்ப விரும்பினால் அவர்களும் இந்த ராக்கெட் ஏவுதளத்தை பயன்படுத்தி ராக்கெட் மூலம் அவர்களது சேட்டிலைட்டை விண்ணில் ஏவ முடியும்" என கூறினார்.

தற்போது குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவு தளத்திற்காக சுமார் 2292 ஏக்கர் நிலம் இஸ்ரோவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் எவ்வளவு அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பணி சுமைக்குறையும். பணிகளை இரண்டாகப் பிரிந்து சிறிய ரக ராக்கெட்டுகள் எல்லாம் குலசேகரப்பட்டினத்தில் இருந்தும் பெரிய ரக ராக்கெட்டுகள் எல்லாம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்தும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு முறைப்படுத்தப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள விண்வெளி ஆய்வுமயமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு விதமான சாதனைகளை செய்து வருகிறது. இந்த இஸ்ரோ தொடர்ந்து வளர்ச்சி பெறுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கிறது. இதன் மூலம் இஸ்ரோ ராக்கெட்டை விண்னிற்கு அனுப்பி பல கோடி ரூபாயை இந்தியாவிற்கு வருமானமாக ஈட்டித் தரப் போகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 15:32 [IST]
English summary
Kulasekarapattinam rocket launch details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+