மலை பாதையில் சினிமா ஹீரோ போல பயணித்த சுற்றுலா பயணிகள்! வைரலான வீடியோவால் வந்த ஆபத்து!
காரின் முன் பக்க கதவை திறந்தபடியே பயணம் செய்த டிரைவருக்கு ரூபாய் 3500 அபராதம் விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வைரல் வீடியோவில் இப்படியான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் மிதிக்கப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது குளிர்காலம் என்பதால் இந்தியாவில் குளிர் மிகுந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படியாக இமாச்சலப் பிரதேச மாநிலம் குளு பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு செல்ல மலை வழியாக அமைக்கப்பட்ட சாலையில் பயணம் செய்ய வேண்டும். வாகனங்களில் வருபவர்கள் மலைப்பாதை வழியாக தான் பயணம் செய்வார்கள்.

இப்படியாக ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கதவுகளை திறந்தபடி மலை பாதையில் பயணம் செய்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் அந்த காரில் வந்தவர்கள் அந்த கதவு வழியாக எட்டிப் பார்த்தபடியே சக வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு செய்யும்படி வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். இதை சாலையில் வாகனம் ஓட்டி வந்த மற்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் ஹூண்டாய் கிரெக்டா எஸ்யூவி காரில் முன்பக்கம் இரண்டு கதவுகள் திறந்தபடி டிரைவர் ஒருவர் காரை ஓட்டி செல்ல பயணிகள் சீட்டில் அமர்ந்த ஒருவர் காரின் கதவில் அமர்ந்து செல்லும்படி இந்த வீடியோ பதிவாகி இருந்தது. இந்த வீடியோவில் காரின் பதிவு எண்ணும் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேச போலீசார் பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டறிந்தனர். பின்பு அவர்களுக்கு ரூபாய் 3500 அபராதம் விதித்து அதற்கான செல்லானை வழங்கி உள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது.
அப்பொழுது நெட்டிசன்கள் பலர் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் மிக குறைவான தொகையை கொண்டதாக உள்ளது என்றும், இவர்களுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் குறைவான அபராதத்தை செலுத்தி விட்டு யார் வேண்டுமானாலும் இது போன்ற செயலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் வந்து விடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியாக குளு வரும் சுற்றுலா பயணிகள் பல மலைப்பாதையில் சாகசம் என்ற பெயரில் இப்படியாக ஏதாவது சட்ட விதிமுறை மீறல்களை செய்து வருகின்றனர். இது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. குளு பகுதியில் இது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் தற்போது வைரலான வீடியோவால் இது தற்போது தலை தூக்கி உள்ளது. இதன்பிறகு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்.
குளு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட இப்படியான சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. கொடைக்கானல்,ஊட்டி போன்ற பகுதிகளில் மலைப் பாதைகளில் பயணிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் பலர் சக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் சாகசம் என்ற பெயரில் ஏதாவது சேட்டை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது.
மலை பாதையில் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் எந்த விதமான சட்ட விதிமுறைகளையும் மீறி வாகனம் ஓட்டக்கூடாது. நீங்கள் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகள் எப்பொழுதும் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். இது போன்ற சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக மலை பாதைகளில் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விபத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும். இதனால் கவனமாக வாகனம் ஓட்டவும்.


Click it and Unblock the Notifications








