சுத்தியும் மிலிட்டரி! இந்த பொண்ணோட அப்பா பேர கேட்டா அம்பானிக்கே நடுங்கும்! அந்த குடும்பத்தின் இளவரசியா இவங்க!
இந்தியாவின் மிகவும் பணக்கார குடும்பங்களில் பிர்லா குடும்பம் முக்கியமானது. இந்த குடும்பத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla). 57 வயதாகும் இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் (Aditya Birla Group) தலைவராக (Chairman) இருந்து வருகிறார். நிதி சேவைகள், டெக்ஸ்டைல், டெலி-கம்யூனிகேஷன், ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு தொழில்களில் ஆதித்யா பிர்லா குழுமம் ஈடுபட்டு கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொழில்களில் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) ரிலையன்ஸ் (Reliance) உடன், ஆதித்யா பிர்லா குழுமம் மோதி வருகிறது.
குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு (Net Worth) 2,35,200 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் கூட, குமார் மங்கலம் பிர்லாவின் மகள் (Daughter) அனன்யா பிர்லா (Ananya Birla) கலைத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

தொழில் அதிபர் என்பதை கடந்து, பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆகிய முகங்களும் அனன்யா பிர்லாவிற்கு உண்டு. இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அனன்யா பிர்லாவை நம்மால் ஏர்போர்ட்டில் (Airport) காண முடிகிறது.
ஆனால் அது எந்த ஊரின் ஏர்போர்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் அவர் பயன்படுத்தியது போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை போர்ஷே கேயென்னே எஸ்டிடி (Porsche Cayenne STD) மற்றும் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) ஆகியவை ஆகும். இதில், எஸ்டிடி வேரியண்ட்டின் விலை 1.36 கோடி ரூபாய் ஆகவும், ஜிடிஎஸ் வேரியண்ட்டின் விலை 2 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 1.56 கோடி ரூபாய் மற்றும் 2.30 கோடி ரூபாய் வரும். இதில் அனன்யா பிர்லா பயன்படுத்தியது எஸ்டிடி வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 353 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. போர்ஷே கேயென்னே காரில், 10.9 இன்ச் கோ-டிரைவர் ஸ்க்ரீன், 12.65 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து இந்த வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM) மற்றும் ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace) உள்ளிட்ட கார்களுடன், போர்ஷே கேயென்னே போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அனன்யா பிர்லாவின் கார் கலெக்ஸன் (Cars Collection) மிகவும் பெரியதாக உள்ளது. இதில், ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். எனவே அடிக்கடி அவரை விலை உயர்ந்த கார்களில் காண முடியும்.


Click it and Unblock the Notifications








