வாடகைக்கு கேடிஎம் பைக்கை எடுத்து உலகின் உயரமான மலைக்கு போன நடிகர்! அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போலையே!

இந்திய இளைஞர்களின் ஃபேவரிட் பைக் பிராண்டாக கேடிஎம் (KTM) இருக்கின்றது. இந்த பிராண்டின் பைக்கைக் கொண்டே இந்திய நடிகர் ஒருவர் உலகின் உயரமான மலைகளில் ஒன்றிற்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 19,024 அடி உயரம் கொண்ட 'அம்லிங் லா' (Umling La), மலைக்கே நடிகர் சென்றிருக்கின்றார். உலகின் உயரமான வாகனங்கள் செல்லக் கூடிய ஓர் மலைப் பாதையே இதுவாகும். குணால் கெம்மு எனும் இந்தி நடிகரே இந்த உயரமான மலைப் பாதைக்கு டூ-வீலரிர் சென்றவர் ஆவார்.

அவர் கேடிஎம் 390 அட்வென்சர் (KTM 390 Adventure) பைக்கிலேயே இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். இந்திய திரையுலகில் இரண்டு சக்கர வாகனங்களை அதிகம் நேசிக்கக் கூடிய நபர்களில் ஒருவராக குணால் கெம்மு இருக்கின்றார். இதற்கு சான்றாகவே அவரின் இந்த செயல் அமைந்திருக்கின்றது.

Kunal kemmu in umling la pass with ktm bike

அதேவேளையில், இந்த பைக் வாடகை வாகனம் என கூறப்படுகின்றது. அவர்களுடைய நண்பர்கள் சிலரும் அதே பைக் மாடலையே வைத்திருக்கின்றனர். இதற்கேற்ப 'டிஎன்', 'ஏபி' போல அந்த பைக்கில் 'எல்ஏ' எனும் சீரிஸ் கொண்ட பதிவெண் இடம் பெற்றிக்கின்றது. லடாக் ரெஜிஸ்ட்ரேஷனே இதுவாகும்.

அவர்கள் சென்ற அம்லிங் லா பாஸ் மலை பகுதியும் இங்கேயே அமைந்திருக்கின்றது. நடிகரும், அவருடைய நண்பர்களும் தேர்வு செய்திருக்கும் இந்த பைக் ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த டூ-வீலர் ஆகும். இதனால்தான் இவர்கள் இந்த பைக்கை மலை பயணத்திற்காக தேர்வு செய்திருக்கின்றனர்.

373 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 42.9 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் ஸ்விட்சிங் செய்யும் வசதிக் கொண்ட ஏபிஎஸ், முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் திறன் கொண்ட டபிள்யூ அபெக்ஸ் சஸ்பென்ஷன் (முன் பக்கத்தில்), மோனோஷாக் அப்சார்பர் (பின் பக்கத்தில்), கார்னரிங் ஏபிஎஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவையே இந்த பைக்கை ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு உகந்ததாக மாற்றி இருக்கின்றது. இத்துடன், 5 அங்குல டிஎஃப்டி வண்ண திரையையும் இது கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பைக்கையே தங்களுடைய சாகச பயணத்திற்காக குணால் கெம்மு மற்றும் அவர்களுடைய நண்பர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இந்த பைக் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ் (X), ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் எஸ்டபிள்யூ (SW) ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 2,82,951 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

எஞ்சினை பொருத்த வரை இந்த பைக்கில் 373 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43.5 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திறனே அப்பைக்கை அனைத்து விதமான சாலைகளையம் சமாளிக்கும் திறன் கொண்டதாக மாற்றியிருக்கின்றது. இந்த எஞ்சினை இயக்கத்தை மேலும் திறம்பட்டதாக மாற்றும் விதமாகவே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அதில் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு நிறுவனத்தின் தயாரிப்புகள் அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டதாக இருப்பதும், சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதும்தான் காரணம் ஆகும். கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சாதாரண நபர்கள் மத்தியில் மட்டுமல்ல சில பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. இதற்கு சான்றாகவே ஓர் நடிகர் இந்த பைக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய நிகழ்வு அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 19:00 [IST]
English summary
Kunal kemmus exciting ride to umling la on a ktm 390 adventure
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+