எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?

சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் குஷா கபிலா (Kusha Kapila). இன்ஸ்டாகிராமில் (Instagram) மட்டும் இவரை 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவருக்கு நடிகை (Actress) என்ற முகமும் உள்ளது. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அது மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes-Benz E-Class) ஆகும். கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரை, குஷா கபிலா டெலிவரி எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் வேகமாக பரவி வருகின்றன. இ-க்ளாஸ் காரானது, இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை 72.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 84.90 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Kusha Kapila Buys Mercedes-Benz E-Class

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுக்கு ட்யூயல் ஸ்க்ரீன்கள், ஆம்பியண்ட் லைட்டிங், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி என மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் (196 பிஹெச்பி), 2.0 லிட்டர் டீசல் (192 பிஹெச்பி) மற்றும் 3.0 லிட்டர் டீசல் (285 பிஹெச்பி) ஆகியவை ஆகும்.

Mercedes-Benz E-Class

இந்த 3 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இ-க்ளாஸ் காரின் புதிய தலைமுறை மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த புதிய மாடல், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இன்னும் பல்வேறு பிரபலங்களும் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இருப்பதை காட்டிலும், புதிதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலில், இன்னும் பல்வேறு வசதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே குஷா கபிலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்த கார் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். இந்த சொகுசு காராணமாகவே, பிரபலங்கள் பலரும் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரை வாங்கி வருகின்றனர்.

அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), சயீஃப் அலி கான் (Saif Ali Khan), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் ராணி முகர்ஜி (Rani Mukerji) போன்ற பாலிவுட் பிரபலங்களிடமும் (Bollywood Celebrities), மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் பிரபலங்களுடன், தொழில் அதிபர்கள் பலரும் கூட, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரை வைத்துள்ளனர் என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். எனவேதான் இந்த சொகுசு செடான் ரக கார், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட கூடிய மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 15, 2024, 23:56 [IST]
English summary
Kusha kapila buys mercedes benz e class luxury sedan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+