உடல் முழுக்க விபூதி பூசி கொண்டு நிர்வாணமாக வலம் வரும் பெண் அகோரி.. இவ்ளோ காஸ்ட்லியான காரையா பயன்படுத்துறாங்க!!

இந்தியாவில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பவர்களில் பெண் அகோரி நாகசாது-வும் ஒருவர் ஆவார். இந்தியா முழுக்க உள்ள பிரபலமான கோவில்களுக்கு இவர் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஆந்திராவில் உள்ள சில கோவில்களுக்கு அவர் விசிட் கொடுத்திருந்தார். குறிப்பாக, காலஹஸ்தி கோவிலுக்கு அவர் நுழைய முயன்றபோது பெரும் சர்ச்சையே வெடித்தது. பெண் அகோரி நாகசாது நிர்வாணமாக கோயிலுக்கு நுழைய முயன்றதனாலேயே அங்கு சர்ச்சை வெடித்தது. அவரை, அப்படியே கோயிலுக்குள் நுழைய விடாமல் அங்கிருந்து கோயில் பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.

அதாவது, நிர்வாணமாக அவரை கோயிலுக்கு நுழைய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுடன் முரண்டுபிடித்த பெண் அகோரி, தன்னைக் கோயிலுக்குள் விடவில்லை என்றால் இங்கேயே தீ குளிப்பேன் என மிரட்டி, அதற்கு அவர் தயாரும் ஆகினார். இதை அடுத்து அவருடன் பேசி சமாதானம் கோயில் பணியாளர்கள் அவருக்கு ஆடை அணிவித்து பின்னர் கோயிலுக்குள் செல்ல அனுப்பி வைத்தனர்.

Lady aghori naga sadhu uses hyundai i20

முற்றும் துறந்து முழுவதுமாக கடவுள் மயமாக இருப்பவர்களே சந்நியாசி மற்றும் அகோரிகள் ஆவர். ஆனால், இந்த பெண் அகோரிநாகசாது சற்று வித்திசாயமானவராக இருக்கின்றார். அவர் வலம் வருவதே ஓர் காஸ்ட்லியான கார் மாடல் ஆகும். அதுதவிர, அவர் விலை உயர்ந்த செல்போனையும் பயன்படுத்தி வருகின்றார்.

பெண் அகோரி பயன்படுத்தி வருவது ஹூண்டாய் ஐ20 கார் மாடல் ஆகும். இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக, இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது ஐ20 கார்.

இத்தகைய காரையே தன்னுடைய பயணங்களுக்கு பெண் அகோரி பயன்படுத்தி வருகின்றார். முக்கியமாக தனக்கு பிடித்தவாறு காரை மிகவும் பயமுறுத்தும் வகையில் அவர் மாற்றியிருக்கின்றார். அதாவது, அச்சுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக இருக்கக் கூடிய காளி படத்தையும், அபாய சின்னங்களையும் கார் முழுக்க ஒட்டியிருக்கின்றார்.

இத்தனை ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கும் அவர் அந்த காரில் பதிவெண்ணை ஒட்டவில்லை. இருந்தும் அவர் அந்த காரை தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றார். காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல காரின் உட்பக்கமும் அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது. சில விரும்பத்தகாத பொருட்களை அவர் காருக்குள் வைத்தவாறு பயணித்து வருகின்றார்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த காரை பெண் அகோரி இப்படி பயன்படுத்தி வருவது கார் ஆர்வலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் ஐ20 கார் ரூ. 7.04 லட்சம் ஆகும். இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். வயர்லெஸ் சார்ஜர், 26.03 செமீ அளவுள்ள தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், நீல நிற ஆம்பியன்ட் லைட் மற்றும் சன் கிளாஸ் தாங்கிகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காரில் பன்முக ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பாதுகாப்பு அம்சங்களை ஐ20 கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்வுகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஞ்சினியர்கள், டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சமீப காலமாக சாமியாராக ஆவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக அகோரி ஆகுவது இப்போது டிரெண்டாகிட்டு வருகின்றது. இதற்கு சான்றாக தமிழகத்திலும் சிலர் கடந்த நாட்களில் அகோரி ஆகி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 17:51 [IST]
English summary
Lady aghori naga sadhu halchal uses hyundai i20 car here is more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+