டிரைவர் சீட்ல உக்காந்துகிட்டு பெண் செய்த காரியம்! சொன்னாங்க பாருங்க ஒரு விஷயம்! அத கேட்டு நாடே ஆடி போயிருச்சு!

சமூக வலை தளங்கள் (Social Media) எல்லாம் தற்போது நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறி விட்டன. வேடிக்கையான வீடியோக்கள் (Funny Videos) பலவற்றை நாம் சமூக வலை தளங்களில் பார்க்க முடிகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் திட்டமிட்டு எடுக்கப்பட்டவை.

அதே சமயம் ஒரு சில வீடியோக்கள், இயற்கையாகவே நடந்தபோது சுற்றியிருந்த நபர்களால் எடுக்கப்பட்டவை. இந்த சூழலில் சமூக வலை தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாக (Viral Video) பரவி வருகிறது. ட்விட்டர் பயனரான ஷிரிஷ் த்ரோட் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

டிரைவர் சீட்ல உக்காந்துகிட்டு பெண் செய்த காரியம்! சொன்னாங்க பாருங்க ஒரு விஷயம்! அத கேட்டு நாடே ஆடி போயிருச்சு!

பெண் ஒருவர், ஒரு பஸ்ஸின் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அந்த சமயத்தில் பஸ்ஸின் டிரைவர் அங்கு வருகிறார். அப்போது தனது இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைகிறார். எனவே தனது இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு அவர் கூறுகிறார்.

ஆனால் அந்த பெண், டிரைவர் இருக்கையில் இருந்து எழவில்லை. அதற்கு பதிலாக பஸ் டிரைவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்குகிறார். அத்துடன் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து பஸ்ஸை ஓட்டுமாறும் அவர் டிரைவரிடம் கூறுகிறார். இதை கேட்டதும் டிரைவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

இருப்பினும் பஸ்ஸை இயக்குவதை பற்றி விளக்க டிரைவர் முயற்சி செய்கிறார். எனினும் அந்த பெண் எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. அந்த பெண் தனது மாமியாருடன் சேர்ந்து, அந்த பஸ்ஸில் ஏறியதாக கூறப்படுகிறது. மாமியாருக்கு பின் பகுதியில் இருக்கை கிடைத்து விட, அந்த பெண் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

டிரைவர் கூறிய எதையும் அந்த பெண் காதில் போட்டு கொள்ளாத நிலையில், சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் மாமியாரும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டார். அந்த பெண் கூறியதை போன்றே, அந்த பெண்ணின் மாமியாரும், டிரைவரை வேறு ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற டிரைவர், தனது இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் கையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்கிறார். அத்துடன் வீடியோ முடிவடைந்து விடுவதால், இறுதியில் என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் இந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

அனேகமாக வட இந்தியாவில் எங்கேயாவது நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம் உண்மையிலேயே இயல்பாக நடந்ததா? என்பதும் கூட சந்தேகமாகதான் உள்ளது. ஏனெனில் பஸ் எப்படி இயங்குகிறது? என்பது கூட தெரியாத அளவிற்கு யாராவது அறியாமையில் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

இந்த சம்பவம் உண்மையிலேயே இயல்பாக நடந்ததா? அல்லது வீடியோ வைரல் ஆக வேண்டும் என்பதற்காக யாராவது திட்டமிட்டு எடுத்தார்களா? என்பது நமக்கு உறுதியாக தெரியாத நிலையில், சமூக வலை தளங்களில் தற்போது பலரது கவனத்தையும் இந்த வீடியோ வேகமாக ஈர்த்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 14, 2023, 17:55 [IST]
English summary
Lady bus driver seat viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+