சொத்தை பல்லுக்கு மருத்துவம் பார்த்தே 2 காஸ்ட்லி காரை வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் சமீப காலமாக இளம் தலைமுறையினர் பலர் காஸ்ட்லியான கார்களை வாங்குவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. முக்கியமாக இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் டாக்டர், வக்கீல் போன்ற பிரதான தொழிலில் இருப்பவர்கள் பலர் சொகுசு கார்களை வாங்கி வருகிறார்கள். இப்படியான செய்திகள் பல சமீப காலமாக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இளம் பெண் பல் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஒன்று அல்ல இரண்டு மெர்சிடிஸ் ஜீவாகன் என்ற எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதை அவரது தந்தை டாக்டர் மேதா ரஞ்சன் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் தனது மகள் இப்படியாக காரை வாங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ஒன்று ஜி 63 ஏஎம்ஜி மற்றொன்று ஜி 450 டி காராகும். ஜி63 ஏஎம்ஜி கார் முழுமையாக கோல்டன் நிறத்தில் இருக்கிறது. ஜி450டி கார் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். இரண்டு காரும் எலகண்டான லுக்கில் இருக்கிறது. அடுத்த பதிவில் இவர் தனது குடும்பத்துடன் இந்த கார் முன்பு டெலிவரி எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளன. இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது இந்த கார்களை அவர் தந்தை தனது மகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.

Lady Dentist Mercedes Benz G-Wagens

இதில் ஜி 63 ஏஎம்ஜி காரைப் பொறுத்தவரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமான ஒரு காராக இருக்கிறது. முக்கியமாக சினிமா பிரபலங்கள் விளையாட்டு துறையில் உள்ள பிரபலங்கள் பெரும் பணக்காரர்கள் இந்த கார்களை வாங்கி வருகிறார்கள். அவர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிவாகன் பெட்ரோல் இன்ஜின் காரை வாங்க இது ஒரு கடைசி வாய்ப்பு என்பதால் இந்த காரை வாங்கி வருகிறார்கள். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் நான் நிறுவனம் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஜீவாகன் பிரிவில் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் ஜிவாகன் பிரிவைப் பொறுத்தவரை ஜி63 கார் முதல் முதலில் ஒரு மிலிட்டரி காராக தான் உருவாக்கப்பட்டது. இது மெல்ல மெல்ல உருமாறி ஒரு சொகுசு எஸ்யூவி காராக மாறியது. இது பலரை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முக்கியமாக இதன் பாக்ஸியான வடிவமைப்பு ரக்கடான லுக் ஆகிய அப்படியே பல ஆண்டுகளாக மெயின்டெயின் செய்யப்பட்டுள்ளது. கேபின் வசதி தற்போது பிரிமியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் பல்வேறு விதமான கஷ்டங்கள் உள்ளன. வெளிப்புறத்தில் உட்புறத்திலும் ஒவ்வொரு காரும் தனித்துவமாக இருக்கும் வகையில் கஷ்டங்கள் எல்லாம் இருக்கிறது.

இந்த காரில் 4.0 லிட்டர் வி 8 பை டெர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 576 பிஎச்பி பவரையும் 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 4வீல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜினை விட்டு விட்டு பெட்ரோல் இன்ஜின் பக்கம் நகர்ந்து வரும் நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை பிரத்தியேகமாக டீசல் இன்ஜின் காராகவே விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு கார்களிலும் வெளிப்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் தான் இருக்கிறது. ஆனால் இன்ஜினில் பெரிய அளவு மாற்றம் இருக்கிறது. முக்கியமாக இந்த காரில் 350 லிட்டர் இன் லைன் 62 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 362 பிஎஸ் பவரையும் 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் இருக்கிறது குறைவான வேகத்தில் இது சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 to 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.8 நொடியில் பிக்கப் செய்து விடும் அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்களின் விலையை பொறுத்தவரை மெர்சிடிஸ் ஜி 63 ஏஎம்ஜி கார் ரூபாய் 3.30 கோடி என்ற விலையிலும் ஜி450டி கார் ரூ 2.90 கோடி என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இது கஸ்டமைஸ்டு ஆப்ஷன் இல்லாத விலையாகும் கஸ்டமைஸ்ட் ஆப்ஷன் சேரும்போது இன்னும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 11, 2026, 17:30 [IST]
English summary
Lady dentist two mercedes benz g wagens delivery dads gift
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+