இந்தியாவுக்குள்ள இப்படி ஒரு விமான நிலையமா? இது தெரியாம இவ்வளவு நாளா வெளிநாட்டுக்கு போக பிளான் போட்டோமே!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் லட்சத்தீவுகள் குறித்து மக்கள் அதிகமாக பேசி வரும் நிலையில் இந்த லட்சத்தீவுக்கு செல்ல இருக்கும் ஒரே விமான நிலையமான அகட்டி விமான நிலையம் குறித்து பலர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படியான இந்த அழகான தீவில் உள்ள விமான நிலையம் ஏன் மற்ற விமான நிலையங்களை விட சற்று வித்தியாசமானது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு என்பது மிக மோசமான நிலைக்கு சென்று வருகிறது. மாலத்தீவிற்கு சீன அரசு உதவி செய்வதால் அந்நாட்டில் உள்ள அரசு பதவியில் இருக்கும் பலர் இந்தியாவை மிக மோசமான நாடாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு என்பது மிக மோசமாக மாறிக் கொண்டு வருகிறது.

மாலத்தீவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கும் பயணிகளில் இந்தியர்கள் எண்ணிக்கை தான் மிக அதிகமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இனி மாலத்தீவுக்கு செல்ல போவதில்லை எனவும் மாலத்தீவிற்கு பதிலாக லட்சத்தீவுக்கு செல்லலாம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசும் லட்சத்தீவை மேம்படுத்தும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் லட்சத்தீவிற்கு செல்ல வேண்டுமென்றால் கடல் வழியாகவோ அல்லது விமான வழியாகவோ தான் செல்ல வேண்டும். இதற்காக லட்சத்தீவில் அகட்டி என்ற பகுதியில் தான் ஒரு விமான நிலையம் இருக்கிறது. அந்த விமான நிலையத்தை தான் தற்போது இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும்.

லட்சத்தீவுகளில் உள்ள பல முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் லட்சத்தீவு விமான நிலையம் அடக்கமாகிறது இந்த லட்சத்தீவுகள் என்பது தனித்தனியாக இருக்கும் தீவுகளின் குடும்பம் தான். இதில் அகட்டி என்ற தீவில் தான் விமான நிலையம் என்பது அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவு சுமார் ஆறு கிலோமீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இவ்வளவு சின்ன இடத்தில் தான் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தின் சிறப்பு அம்சமே இதன் ஓடுபாதை தான். இரண்டு புறமும் கடல் இருக்க நீல நிறக் கடலுக்கு நடுவே விமானம் தரையிறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் விமானங்கள் வேகமாக வந்து தரை இறங்கி பயணிகளை இறக்கிவிடும். அதே நேரம் விமானம் கிளம்பும்போது இதே ஒரு பாதையில் வேகமாக சென்று டேக் ஆப் ஆகும். இதை பார்க்கும் போதே மிக அழகாக இருக்கும்.

இந்த விமானத்துக்குள் இருந்து லேண்ட் ஆகும்போதும் சரி, டேக்ஆப் ஆகும்போதும் சரி மிக ரம்யமான சூழ்நிலையை நம்மால் பார்க்க முடியும். மிக அழகான தீவுகளை எல்லாம் விமானத்தில் பறந்தபடியே பார்த்துக் கொண்டு தரையிறங்க முடியும். இதனால் பலர் இந்த லட்சத்தீவுக்கு செல்வதை விரும்புகின்றனர்.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க. தற்போது இந்திய அரசு லட்சத்தீவை விமான மூலம் இணைக்க புதிய விமான நிலையம் ஒன்றை கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மினிக்காய் என்ற தீவில் ஒரே நேரத்தில் ராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதிய விமான நிலையம் ஒன்றை கட்டமைக்க முடிவு செய்துள்ளனர் .

அதன்படி விரைவில் இதற்கான பணிகள் எல்லாம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்கள் கூட தரையிறங்க வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் லட்சத்தீவ விமானம் வழியாக அதிக பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையம்
இது மட்டுமல்லாமல் லட்சத்தீவை கடல் வழியாக இணைக்கும் வகையில் பல்வேறு வகையான கடல் வழி பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கப்பல்கள் லட்சத்தீவுக்கு செல்லும் வகையில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்சத்தீவில் இனி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு புதிய ஹோட்டல்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது லட்சத்தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கு அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறை முழுவதும் இனி ஆன்லைனில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் ரூபாய் 200 என்ற விலையில் பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து ஆண்டுகளில் லட்சத்தீவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









