பிரதமர் செய்த அந்த ஒரு காரியம், எங்கே வந்து நிற்குது பாருங்க!! லட்சத்தீவுக்கு விமானத்தில் போக செம்ம சான்ஸ்!

லட்சத்தீவு (Lakshadweep)-க்கு வருகிற மார்ச் மாதம் வரையில் அனைத்து விமான டிக்கெட்களும் புக் ஆகிவிட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியான நிலையில், லட்சத்தீவுக்கு விமான சேவையை வழங்கும் ஏர்லைன் நிறுவனம் இதுகுறித்து ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதையும், லட்சத்தீவுக்கு செல்ல திடீரென மக்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.

மாலத்தீவை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால், உலக வரைப்படத்தில் மாலத்தீவுகள் எங்கள் இருக்கிறது என கேட்டால் பலரால் காட்ட இயலாது. ஏனெனில் அந்த அளவிற்கு உலக வரைப்படத்தில் தெரியாத தீவு கூட்டம் மாலத்தீவுகள் ஆகும். இத்தனைக்கும் நம் இந்தியாவுக்கு அருகாமையில்தான் இந்த தீவுகள் உள்ளன.

lakshadweep gets additional flight

இவ்வளவு சிறிய தீவு நாடாக இருப்பினும், மாலத்தீவுகளில் மிகவும் லக்சரி தரத்திலான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதற்கு காரணம், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகும். ஆனால், மாலத்தீவுக்கு வடக்கே 754கிமீ தொலைவில் உள்ள லட்சத்தீவு அந்த அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவில்லை. அழகில் இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.

தீவுகள் எண்ணிக்கை மட்டுமே மாலத்தீவுகளில் அதிகம். இந்த நிலையில், லட்சத்தீவுகளை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்யும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். பிரதமரின் இந்த லட்சத்தீவு தொடர்பான படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனையடுத்து, இணையத்தில் பலரும் லட்சத்தீவுகளை பற்றி தேடினர்.

lakshadweep gets additional flight

இலட்சத்தீவுகள் vs மாலத்தீவுகள் என்ற அளவிற்கு இணையத்தில் விவாதங்கள் சூடுப்பிடித்தன. எங்களது லட்சத்தீவுகள் எந்த விதத்திலும் சளைத்தது கிடையாது என்பதை கூறும் விதமாக, இந்தியர்கள் பலரும் லட்சத்தீவுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக, லட்சத்தீவுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்றுத்தீர ஆரம்பித்தன.

2024 மார்ச் மாதம் வரையிலான விமான டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு ஆகிவிட்டதாக நமது செய்தித்தளத்தில் கூட சமீபத்தில் தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில், லட்சத்தீவுக்கு கூடுதலாக ஒரு விமானத்தை இயக்கவுள்ளதாக அலையன்ஸ் ஏர் அறிவித்துள்ளது. லட்சத்தீவுக்கு விமான சேவையை வழங்கும் ஒரேயொரு ஏர்லைன் நிறுவனம் அலையன்ஸ் ஏர் ஆகும்.

lakshadweep gets additional flight

அதேபோல், லட்சத்தீவுகளிலும் அகாட்டி என்ற ஒரேயொரு தீவில் மட்டுமே விமான நிலையம் உள்ளது. கேரளாவின் கொச்சியில் இருந்து தினந்தோறும் அகாட்டிக்கு ஒரு விமானத்தை காலை நேரத்தில் அலையன்ஸ் ஏர் இயக்கி வருகிறது. இந்த நிலையில், லட்சத்தீவுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, கூடுதலாக ஒரு விமானத்தை இயக்க அலையன்ஸ் ஏர் முன்வந்துள்ளது.

ஆனால், இந்த கூடுதல் விமானம் தினந்தோறும் இல்லாமல், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழேயுள்ள அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் டுவிட்டர் பதிவில் காணலாம். வருகிற ஜனவரி 21ஆம் தேதியில் இருந்து மார்ச் 27ஆம் தேதி வரையில் இந்த கூடுதல் விமான சேவை வழங்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அலையன்ஸ் ஏர் நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் பிரதமரின் அலுவலகம் மற்றும் மத்திய விமான துறை அமைச்சரை மென்ஷன் செய்துள்ளதால் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. மார்ச் 27ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த கூடுதல் விமான சேவை என குறிப்பிடப்பட்டாலும், அதற்கு பின்பும் லட்சத்தீவுக்கு இந்த 2வது விமான சேவை தொடரப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 20:07 [IST]
English summary
Lakshadweep gets additional flight alliance air announced check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X