தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

சொகுசு உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி அதிக லக்சூரி மற்றும் சூப்பர் திறன் கொண்ட புதிய படகை உருவாக்கியிருக்கின்றது. இந்த படகுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தியாளரான லம்போர்கினி, சொகுசு படகு ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. லக்சூரி கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் படகு தயாரிப்பில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

கடந்த சில வருடங்களாகவே நிறுவனம் சொகுசு மற்றும் அதி திறன்மிக்க படகுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மற்றுமொரு நிறுவனத்துடன் இணைந்து லம்போர்கினி செய்து வருகின்றது. இதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓர் கடல் குழுமத்துடன் நிறுவனம் கூட்டணி வைத்திருக்கின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

இரு நிறுவனங்களும் இணைந்தே தற்போது 'லம்போர்கினி 63' எனும் அதிவேக சொகுசு படகை தயாரித்திருக்கின்றன. 63 என்பது லம்போர்கினி நிறுவனம் கார் தயாரிப்பில் களமிறங்கிய ஆண்டை குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்டிருக்கின்றது. லம்போர்கினி நிறுவனம் 1963ம் ஆண்டில் இருந்தே சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

இதனை நினைவு கூறும் வகையிலேயே சொகுசு படகுக்கு லம்போர்கினி 63 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படகை சுமார் 3.5 மில்லியன் செலவில் உருவாக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் இந்த படகு உருவாக்கப்பட்டிருப்பதால் தண்ணீரில் மிதக்கும் அரண்மனையைப் போல் இப்படகு காட்சியளிக்கின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் லம்போர்கினியின் சொகுசு கார்களுக்கு சற்றும் சலைக்காத படகாக இது காட்சியளிக்கின்றது. அதேசமயம், இதன் கார்களில் இருப்பதைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் இந்த படகில் இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

பரந்த கேபின் (உட்புறம்), இயற்கை ஒளி எளிதில் நுழையும் வகையில் திறப்புகள், அதிக மிருதுவமான மற்றும் சொகுசான இருக்கைகள், பெரிய தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் படகில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி 'மினி பார்' வசதியும் லம்போர்கினி 63 படகில் உள்ளது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

ஆகையால், கொண்டாட்டம், கேளிக்கை போன்றவற்றை படகில் இருந்தவாறே அனுபவிக்க முடியும். பெரும் பணக்காரர்களைக் குறி வைத்து இப்படகு உருவாக்கப்பட்டிருக்கின்றது. படகின் ஸ்டைலும், வசதிகளும் அவர்களை ஈர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

படகிற்கு வெர்டே கியான் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே நிறத்தைதான் லம்போர்கினி அதன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்குக் கிடைக்கும் சியான் எஃப்கேபி 37 காருக்கு பயன்படுத்தியிருக்கின்றது. படகை சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பில் லம்போர்கினி உருவாக்கியிருக்கின்றது.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

ஆனால், இதன் விசாலமானதாகவும், அதிக இட வசதிக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இந்த படகில் லம்போர்கினியின் அவென்டேட்டார் காரில் இடம் பெற்றிருக்கும் சில அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், ஸ்டியரிங் வீல், கேபின் உட்பகுதி ஸ்டைல் மற்றும் இருக்கை பெல்ட்டுகள் ஆகியவை ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

தண்ணீரில் மிதக்கும் அரண்மனை! லம்போர்கினி தயாரித்த அதி-சொகுசு படகு! அம்மம்மா இவ்ளோ சிறிய படகில் இத்தனை வசதிகளா?

கார்பன் ஃபைபரால் படகின் உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அதிக உறுதியானது மற்றும் எடைக் குறைவானது. இதன் அதிக வேக நீந்தும் திறனுக்காக மேன் வி12 டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 2,000 குதிரை திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதன் உச்சபட்ச வேகம் 60 க்னாட்டுகள் ஆகும்.

Most Read Articles
English summary
Lamborghini & Italian Sea Group Jointly Create Lamborghini 63 High-Speed Luxury Yacht. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X