பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

ரஷ்யாவை சேர்ந்த பிரபல பெண் ஒருவரின் லம்போர்கினி காரை அந்நாட்டு காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அந்த பெண் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 199 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான அபராத தொகையை செலுத்த தவறியதால், அந்த பெண்ணின் லம்போர்கினி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

நாஸ்டியா இவ்லீவா என்ற அந்த பிரபலம், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வர்ணணையாளர், நடிகை என இவருக்கு பல முகங்கள் உள்ளன. அபராதம் செலுத்த தவறியதால், காவல் துறையினர் தனது காரை எடுத்து சென்று விட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

நாஸ்டியா இவ்லீவாவை இன்ஸ்டாகிராமில் 18.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 199 சலான்களும் ஒரே ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த அபராத தொகை எவ்வளவு? என்பது தெரியவில்லை.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

நாஸ்டியா இவ்லீவாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது லம்போர்கினி அவென்டெடார் கார் ஆகும். தனது வாழ்க்கையில் விலையுயர்ந்த கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நாஸ்டியா இவ்லீவா கூறியுள்ளார். அத்துடன் அபராத தொகையை செலுத்தி விட்டு காரை மீண்டும் பெறுவதற்கும் அவர் முயற்சி செய்து வருகிறார்.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதால், நாஸ்டியா இவ்லீவாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிவேகத்தில் பயணம் செய்தது, சட்ட விரோதமாக வளைவுகளில் திரும்பியது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அடங்கும். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

நாஸ்டியா இவ்லீவாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லம்போர்கினி அவென்டெடார் கார் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை எஸ், எஸ் ரோட்ஸ்டெர் மற்றும் பிரீமியம் எஸ்விஜே மாடல் ஆகும். லம்போர்கினி அவென்டெடார் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 700 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

அதே சமயம் எஸ்விஜே மாடலில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 770 பிஎஸ் பவரை வாரி வழங்கும். அத்துடன் வேரியண்ட்டை பொறுத்து 690 என்எம் முதல் 720 என்எம் வரையிலான டார்க் திறனை இந்த இன்ஜின் உருவாக்கும். இவ்வளவு செயல்திறன் மிக்க காரைதான், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையை செலுத்தாமல் தற்போது நாஸ்டியா இவ்லீவா இழந்துள்ளார்.

பிரபல நடிகையின் விலை உயர்ந்த லம்போர்கினி காரை தூக்கிய போலீஸ்... காரணம் தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க

நீங்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், காவல் துறையினரிடம் அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமின்றி, சாலை விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Aventador Of Russian Actress Seized By Police - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, April 14, 2021, 18:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X