மேட்சிங் மேட்சிங்... லம்போ அவென்டேடார் ஸ்டைலில் உருவான அதிவேக படகு!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் டீலர்ஷிப்பை சேர்ந்த சிஇஓ., ஒருவர் லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டெர் கார் மாடல் ஸ்டைலில் ஓர் அதிவேக படகை கஸ்டமைஸ் செய்துள்ளார். அவை இரண்டையும் ஒருசேர விற்பனை செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அந்த லம்போ அவென்டேடார் ரோட்ஸ்டெர் காரின் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் அந்த அதிவேக படகை கஸ்டமைஸ் செய்துள்ளனர். அதிவேக படகு தயாரிப்பில் பிரபலமான மிட்நைட் எக்ஸ்பிரஸ் நிறுவனம்தான் அந்த அதிவேக படகை கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது.


படங்களுடன் தகவல்கள்

படங்களுடன் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் படங்களுடன் கூடுதல் தகவல்களை காணலாம்.

படகு மாடல்

படகு மாடல்

மிட்நைட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 39எஸ் கட்டி அதிவேக படகை லம்போர்கினி அவென்டேடார் அம்சங்களுடன் மாற்றியுள்ளனர். அமெரிக்கா மட்டுமின்றி பல்வேரு நாடுகளின் கடல் ரோந்து பணிகளில் இந்த படகுதான் பயன்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

லம்போர்கினி காரின் சாம்பல் நிற மேட் ஃபினிஷ் போன்ற படகும் அதே வண்ணத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

வைரக்கல் வடிவிலான தையல் வேலைப்பாடுகளுடன் உயர் ரக லெதர் இருக்கைகளுடன் படகின் இன்டிரியர் கவர்கிறது. எல்இடி விளக்குகளால் பொருத்தப்ப்டடுள்ளன. அதாவது, அந்த லம்போர்கினி காரின் இன்டிரியரை ஒத்துப் போகும் வகையில் இன்டிரியர் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்சோல்

கன்சோல்

கன்சோல் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும், நவீன பாதுகாப்பு வசதிகள், நேவிகேஷன் உள்ளிட்டவை இருக்கின்றன. எனவே, இந்த அதிவேக படகு மிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.

 மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

இந்த அதிவேக படகில் உயர் ரக தரத்திலான ஜேஎல் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 45 கேலன் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. 310 கேலன் எரிபொருள் தொட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

படகு எஞ்சின்

படகு எஞ்சின்

இந்த அதிவேக படகில் மெர்குரி வெரடோ எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒருசேர 1,200 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும்.

விலை

விலை

காரும், அதிவேக படகும் சேர்த்து ஒரு மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு உள்ளது. பிரஸ்டீஜ் இம்போர்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த கார் மற்றும் படகை விற்பனை செய்ய உள்ளது. அந்த நிறுவனத்தின் விலைப் பட்டியலில் லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டெர் காருக்கு 5.5 லட்சம் டாலர் விலையும், அதிவேக படகுக்கு 5 லட்சம் டாலர் விலையிலும் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Via:Dupont Registry

More from DriveSpark

Article Published On: Friday, August 22, 2014, 10:30 [IST]
English summary
US based Lamborghini dealer is offering an Aventador Roadster with a Midnight Express 39S Cuddy powerboat in matching Grigio Titans matte finish and diamond-stitched interiors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+