லம்போர்கினி காரை ரூ. 14 லட்சத்தில் சொந்தமாக்க முடியுமா?.. நம்ம இந்தியர்கள் நினைச்சா எதையும் செய்வாங்க போலையே!

கார் காதலர்களின் கனவு வாகனமாக லம்போர்கினி அவென்டேடர் எஸ்விஜே (Lamborghini Aventador SVJ) இருக்கின்றது. இந்த கார் மாடலின் அதிக விலை காரணமாக பெரும் செல்வந்தர்களுக்கே அது எட்டாக் கனியாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர் ஒருவர் வெறும் 14 லட்ச ரூபாய் செலவில் லம்போர்கினி அவென்டேடர் எஸ்விஜே சூப்பர் காரை தனக்கு சொந்தமாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்படி சாத்தியம் ஆகும் என்று-தானே கேக்குறீங்க. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

லம்போர்கினி அவென்டேடர் எஸ்விஜே-வின் விலை ரூ. 6 கோடிக்கும் அதிகம் ஆகும். இதனால்தான் இந்த கார் பெரும் செல்வந்தர்களுக்குகூட நீண்ட நாள் கனவு வாகனமாக உள்ளது. இத்தகைய விலை உயரிய கார் மாடலை ரூ. 14 லட்சத்திற்கு ஒருவர் தன் வசமாக்கி இருக்கின்றார் என்பது ஆச்சரியத்தின் உச்சம்.

Lamborghini replica

இது மட்டுமல்ல இதுபெரும் அதிர்ச்சியான தகவலும்கூட. ஏனெனில் யூஸ்டு கார் மார்க்கெட்டில்கூட இந்த அளவிற்கு மலிவான விலையில் லம்போர்கினியின் எந்த தயாரிப்பும் விற்பனைக்குக் கிடைக்காது. ஆனால், மாடிஃபிகேஷன் உலகில் இந்த காரை என்ன, இதைவிட மிக மிக விலை உயரிய காராக இருந்தாலும் வாங்கிவிட முடியும்.

ஆமாங்க, இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வாகனம் உருமாற்றம் செய்யப்பட்ட வாகனம் ஆகும். ஹோண்டா சிவிக் காரையே இந்த அளவிற்கு மாற்றியிருக்கின்றனர். மிகவும் துள்ளியமாக லம்போர்கினி காரை போல மாற்றி இருக்கின்றனர். மேலும், இந்த அளவிற்கு துள்ளியமாக ஹோண்டா சிவிக் கார் மாடல், லம்போர்கினி கார் மாடலின் தோற்றத்தை தத்தெடுத்துக் கொள்வதற்கு அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாடி பேனல்களே முக்கிய காரணமாக உள்ளது.

Lamborghini replica for rs 14 Lakh

இதுமட்டுமல்ல கை தேர்ந்த நபர்களும் இந்த காரின் துள்ளியமான உருமாற்றத்திற்கு பின்னால் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. லம்போர்கினி அவன்டேடர் எஸ்விஜே-வை துள்ளியமாக பிரதிபலிக்க அவர்கள் ஃபைபர் பேனல்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். இது பிரத்யேகமாக ஹோண்டா சிவிக் காருக்காகவே வடிவமைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது.

இதுதவிர, அக்காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஹெட்லைட் தொடங்கி இன்னும் பல பாகங்கள் இந்த காருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இதனால்தான் அச்சு அசல் லம்போர்கினி அவன்டேடர் எஸ்விஜே பிரதிபலிக்கும் வகையில் சிவிக் கார் மாடல் மாறி இருக்கின்றது. சந்தையில் லம்போர்கினி அவன்டேடர் எஸ்விஜி காருக்கான பாகங்களை வாங்க வேண்டும் என்றால் மிக பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதனால்தான் அவர்களே காருக்கான பாகங்கள் மற்றும் பேனல்களைக் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தி இருக்கின்றனர். விண்ட்ஸ்கிரீன், ஜன்னல் கண்ணாடிகள், ரியர் வியூ மிர்ரர் என அனைத்தையும் பிரத்யேகமாக தயார் செய்து பயன்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, உண்மையான லம்போர்கினி கார்களில் பன்படுத்தப்பட்டு இருப்பதைப் போல ஏர் டேம்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு பார்ப்போரை ஒரு நிமிடம் உறைய செய்யும் வகையில் உள்ளது.

தொடர்ந்து, 19 அங்குல அலாய் வீல்கள், வாகனத்தின் ஸ்போர்ட்டி லுக்கை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், அசல் லம்போர்கினி கார் மாடல்களில் காணப்படக் கூடிய பட்டாம்பூச்சி வகை கதவுகளே இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. எனவேதான் பார்ப்போர் இந்த காரை சிவிக் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இதன் சென்டர் கன்சோலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் கேபினை கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தால் அலங்கரித்திருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக பொத்தான்கள் மற்றும் சுவிட்சுகள் ஆகியவற்றை லம்போர்கினி கார்களில் இருப்பதைப் போலவே மாற்றி இருக்கின்றனர். ஆனால், அவை லம்போர்கினியின் அளவிற்கு தரமானதாக தெரியவில்லை.

இதேபோல் காரின் பின் பக்கத்திலும் சில கவர்ச்சியான வேலைப்பாடுகளை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், கஸ்டமைஸ் செய்யப்பட்ட டெயில்லைட்கள், ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை இதில் காண முடிகின்றது. தொடர்ந்து, லம்போர்கினி கார்களில் காணப்படுவதைப் போல ஸ்போர்ட்டி எக்சாஸ்ட் அமைப்பு இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஆஃப்டர்மார்க்கெட் எக்சாஸ்ட் ஆகும்.

மேலும், இதுபோன்று இன்னும் ஸ்பெஷல் வேலைகளை இந்த காரில் நம்மால் காண முடிகின்றது. இதனால்தான் இந்த கார் ஒரிஜினல் லம்போர்கினி காரைப் போல மாறி இருக்கின்றது. ஆனால், அளவு, கிரவுண்ட் கிளியரன்ஸ், வடிவமைப்பு உள்ளிட்டவற்றை உற்று நோக்கினால் இது லம்போர்கினி அல்ல மாடிஃபை செய்யப்பட்ட கார் மாடல் என்பதை கண்டறிந்துவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபைச் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றச் செயல் ஆகும். எனவே தினசரி பயன்பாட்டிற்கு இந்த காரை பயன்படுத்த முடியாது. ஆகையால், இதை வேண்டுமானால் ஷோ-கேஸாக பயன்படுத்தலாம். அதேவேளையில், ரூ. 14 லட்சம் செலவில் இந்த வாகனத்தை அவர்கள் உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ரூ. 6 கோடி செலவில் அடைய முடியாத காராக இருந்து வந்த வாகனத்தை 14 லட்ச ரூபாவில் உருவாக்கி இருப்பது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2024, 5:00 [IST]
English summary
Lamborghini aventador svj at rs 14 lakh through ingenious modification
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X