ஓடி கொண்டிருந்தபோதே தனியா கழன்டு வந்த டயர்! அவங்களோட காரா இது! ரோட்ல ஓரங்கட்றதை எல்லாம் இப்பதான் பாக்கறோம்!
இந்திய சாலைகளில் நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் கார்கள் பழுதாகி ஓரங்கட்டப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் சூப்பர் கார் ஒன்று பழுதாகி சாலையில் ஓரங்கட்டப்படுவதை எப்போதாவது பார்த்துள்ளீர்களா? இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஆனால் இப்படியான சம்பவம் ஒன்று சென்னையில் (Chennai) சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. லம்போர்கினி நிறுவனத்தின் கார் ஒன்று சாலையில் ஓடி கொண்டிருந்தபோது, அதன் டயர் சேதமடைந்துள்ளது. ஒரு கட்டத்தில் காரை மேற்கொண்டு இயக்க முடியாத அளவிற்கு டயர் சேதமடைந்து விட்டது. அத்துடன் ரிம்மில் இருந்து கழன்று வரவும் தொடங்கியது.
இதன் காரணமாக அந்த கார் சாலையில் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் (ECR - East Coast Road) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) கார் ஆகும். இந்த சம்பவத்தின் மற்றொரு முக்கியமான ஹைலெட் என்னவென்றால், கௌதம் சிங்ஹானியா (Gautam Singhania) கமெண்ட் செய்திருப்பதுதான். இவர் மிகவும் பிரபலமான தொழில் அதிபர் ஆவார்.
ரேமண்ட் தலைமை செயல் அதிகாரியாக (Raymond CEO) அவர் பணியாற்றி வருகிறார். மிகவும் பிஸியான தொழில் அதிபராக இருந்தாலும் கூட, கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக கௌதம் சிங்ஹானியா அறியப்படுகிறார். அவரிடம் மிகவும் விலை உயர்ந்த ஏராளமான கார்கள் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் லம்போர்கினி ரெவுலோடோ (Lamborghini Revuelto) கார் ஒன்றை அவர் சமீபத்தில் ஓட்டி சென்றார். அது அவருடைய சொந்த கார் கிடையாது. டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்காக ஓட்டி சென்றார். அப்போது நடுவழியில் கார் திடீரென பழுதாகி நின்றது. எலெக்ட்ரிக்கல் ஃபெயிலர் காரணமாக கார் பிரேக்டவுன் ஆனதாக கூறப்படுகிறது.
இதனால் லம்போர்கினி நிறுவனத்தின் மீது கௌதம் சிங்ஹானியாவிற்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கௌதம் சிங்ஹானியா கமெண்ட் செய்துள்ளார். 'லம்போர்கினி காரில் மோசமான டயர்கள் - தரத்தில் பிரச்னையா?' என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். முதல் காரணம் இந்த காரின் உரிமையாளர், டயர்களை முறையாக பராமரிக்காமல் விட்டிருக்கலாம். டயரில் ஏற்பட்ட பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருவதை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
இரண்டாவது, டயர்களில் காற்றின் அளவு சரியான முறையில் இல்லாமல் இருந்திருக்கலாம். லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட ஒரு காரின் டயர்களில் காற்றின் அளவு சரியாக இல்லாவிட்டால், அவை எளிதில் சேதமடைந்து விடும். ஆனால் இவை எல்லாம் யூகங்கள் மட்டுமே. இச்சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








