வீடு வாங்கினால் லம்போ அல்லது பிஎம்டபிள்யூ கார் இலவசம்!

By Saravana

வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லம்போர்கினி அல்லது பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்குவதாக, துபாயை சேர்ந்த டமாக் என்ற பிரபல கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1முதல் துபாயில் நடைபெறும் 2016 துபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி, இந்த சலுகையை வழங்குவதாக டமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் மாடல்கள்

கார் மாடல்கள்

டமாக் நிறுவனத்தின் சொகுசு வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் லம்போர்கினி ஹூராகென், பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் அல்லது பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி என ஏதாவது ஒரு காரை தங்களது விருப்பம்போல் தேர்வு செய்து பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.

கார் வேண்டாமா...

கார் வேண்டாமா...

கார் வேண்டாம் அல்லது ஏற்கனவே சொகுசு கார் இருக்கிறது என்று கருதும் வாடிக்கையாளர்கள் காருக்கு ஈடான தொகையை வீட்டின் விலையில் கழித்துக் கொள்ளளாம் என்றும் தெரிவித்துள்ளது.

வீடு அமைவிடங்கள்

வீடு அமைவிடங்கள்

துபாய் மரினாவிலுள்ள அகோயா, புர்ஜ் பகுதியில் உள்ள சர்வீஸ் அப்பார்மென்ட்டுகள் மற்றும் பாலம் ஜுமைரா பகுதியிலுள்ள உயர்வகை சொகுசு வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகளை டமாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தகம் மந்தம்

வர்த்தகம் மந்தம்

கட்டுமானத் துறையில் நிலவும் மந்த நிலையை கருதி, இந்த கவர்ச்சிகர சலுகைகளை டமாக் நிறுவனம் அறிவித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிதல்ல...

புதிதல்ல...

ஏற்கனவே ஒருமுறை தன்னிடம் வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இதேபோன்று விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கும் திட்டத்தை டமாக் நிறுவனம் அறிவித்தது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததையடுத்து, தற்போது மீண்டும் அந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுசரி...

அதுசரி...

கார் கிடக்கட்டும், வீடு விலை எவ்வளவு என்கிறீர்களா? இந்திய மதிப்பில் ரூ.1.26 கோடியிலிருந்து ஆரம்பமாகிறதாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 9, 2016, 16:24 [IST]
English summary
Damac Properties will be gifting several customers with luxury vehicles. The Dubai Property Developers will be selling apartments and villas. Based on a customer's purchase they would be receiving either a luxury vehicle or even a supercar.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+