எந்த பணக்காரருக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுங்க... மொத்த ஊரும் சுற்றி பார்க்க ஒரே அசிங்கமா போயிடுச்சு!!
இந்திய தொழிலதிபர்களுள் விலையுயர்ந்த கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களுள் ஒருவர், கௌதம் சிங்கானியா (Gautam Singhania) ஆவார். மும்பையில் வசிக்கும் இந்த செல்வந்தர் தனது விலையுயர்ந்த கார்களில் அவ்வப்போது வெளியே காட்சி தருவதன் மூலம் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக இவருக்கும், லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்துக்கும் இடையேயான முரண்பாடுகள் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளன. ஏனெனில், உலகளவில் பிரபலமான கார் நிறுவனமாக இருப்பினும், பல கோடி ரூபாய் சொத்து கொண்ட ஒருவர் குறை கூறும்போது அது பலரது கவனத்தை பெறுகிறது.
இது எல்லாம் ஆரம்பித்தது கடந்த அக்டோபர் மாதத்தில் ஆகும். அக்டோபர் மாத துவக்கத்தில், கௌதம் சிங்கானியாவின் லம்போர்கினி ரெவால்டோ (Revuelto) கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே நடுவழியில் நின்றது. இந்த சம்பவம் சிங்கானியாவுக்கு கௌரவ பிரச்சனையாக அமைந்ததால், உடனடியாக அதுகுறித்து விளக்கம் கேட்டு லம்போர்கினி நிறுவனத்தை எக்ஸ் தளத்தில் கிழித்தெடுத்தார்.

அதற்கு லம்போர்கினி சரியான பதில் அளித்ததா என தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ஏற்கக்கூடிய பதிலை லம்போர்கினி அளிக்கவில்லை என்றுதான் நினைக்கிறோம். ஏனெனில், அதன்பின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் லம்போர்கினியை சிங்கானியா வெச்சு செய்ய ஆரம்பித்தார். ஒருமுறை, தனது லம்போர்கினி காருடன் ஃபெராரி (Ferrari) கார் ஒன்றுடன் கௌதம் சிங்கானியா பந்தயத்தில் ஈடுப்பட்டார்.
அந்த பந்தயத்தில் தனது லம்போர்கினி காரை ஃபெராரி கார் எளியதாக தோற்கடித்துவிட்டது என கூறி இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் சிங்கானியா வீடியோ வெளியிட்டு வன்மத்தை கக்கினார். இந்த நிலையில், தற்போது மற்றுமொரு வீடியோ உடன் கௌதம் சிங்கானியா வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மும்பை கடற்கரை சாலை (Mumbai Coastal Road)-இல் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் லம்போர்கினி கார் ஒன்று காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை காட்சிப்படுத்தியது நான் தான் என கௌதம் சிங்கானியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "மும்பை கடற்கரை சாலையில் லம்போர்கினி கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் லம்போர்கினியின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு தரங்கள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகின்றன. விலை மற்றும் நற்பெயருக்கு ஏற்ற சமரசமற்ற தரத்தை ஒருவர் எதிர்பார்க்கிறார்- சாத்தியமான அபாயங்களை அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவில், காரின் பின்பகுதியில் இருந்து புகை வருவதை பார்க்க முடிகிறது. இந்த லம்போர்கினி கார் ஆனது கௌதம் சிங்கானியாவுக்கு சொந்தமானது கிடையாது. காரின் பின்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்டதும், காரை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் வெளியே தப்பித்து வந்துள்ளார். அதன்பின் கார் முழுவதும் பரவிய தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
இந்த தீ விபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, ஓவர் ஹீட்டிங் (Overheating) ஆகும். காருக்கு பின்பக்கத்தில் உள்ள என்ஜின் சிஸ்டம் அதிக சூடாகி உள்ளது. சிக்னலில் நின்றப்போதும் என்ஜின் அதிக உழைத்ததால், அதனால் ஏற்பட்ட வெப்பம் அருகில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் பாகங்களை சூடாக்கி தீயை உண்டாக்கி உள்ளது. மின்கசிவும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவின் லம்போர்கினி காராக இல்லாவிடினும், வீடியோ வெளியிட்டு தனது வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளார். கௌதம் சிங்கானியா உடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமின்றி, இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன என்பதையும் லம்போர்கினி நிறுவனம் கண்டறிய வேண்டும்.


Click it and Unblock the Notifications








