அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாலே இது எல்லாம் சாதாரணம் போல!! ஓவர் நைட்டில் 2 லம்போர்கினி கார்களுக்கு ஓனர்!

லம்போர்கினி (Lamborghini) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம் எல்லாருக்குமே ஒரு கனவாக இருக்கும். ஆனால், இந்த கனவை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால், மிகவும் குறைவு தான். ஆனால், இங்கு ஒரு தம்பதியினர் ஒரே நாளில் 2 லம்போர்கினி கார்களை வாங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் இந்த தம்பதியினர் என்பதையும், அவர்கள் புதியதாக வாங்கியுள்ள லம்போர்கினி கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்களுள் ஒன்று லம்போர்கினி ஆகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகளவில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. நம் இந்தியாவில் கூட சில லம்போர்கினி கார்களுக்கு அதீத வரவேற்பு கிடைப்பதை பார்க்க முடியும்.

american husband and wife

உலகளவில் பிரபலமான லம்போர்கினி கார்களுள் ரெவல்டோ மற்றும் ஹூராகென் ஸ்டெர்ராடோ கார்களும் அடங்குகின்றன. இந்த லம்போர்கினி கார்களை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் தம்பதியினர் ஒரே நாளில் டெலிவிரி பெற்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சாமன் சோலேமணி என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சாமன் சோலேமணி ஒரு மருத்துவர் ஆவார். மேலும், இவரிடம் செல்வங்களும் கொட்டி கிடக்கின்றன. லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ கார் ஒன்று இவரது மனைவிக்கு டெலிவிரி அளிக்கப்படுவதில் இருந்து இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ துவங்குகிறது. இதனை தொடர்ந்து, சிவப்பு நிறத்திலான ஹூராகென் ஸ்டெர்ராடோ கார் ஒன்று ஷோரூமிற்குள் வருகிறது.

american husband and wife

இந்த ஹூராகென் காரை தனது மனைவிக்காக சாமன் சோலேமணி பிரத்யேகமாக ஆர்டர் செய்து பெற்றுள்ளார். இந்த காருக்கு கொடுக்கப்பட்டு இருப்பது ரோஸ்ஸோ ஃபோகோ என்கிற கண்ணை கவரக்கூடிய பளபளப்பான சிவப்பு நிறம் ஆகும். மேலும் இது லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ காரின் ஆல்பா எடிசன் ஆகும். இதனை உணர்த்தும் வகையில், காரின் கதவுகளில் '63' பேட்ஜ் இருப்பதை காணலாம்.

மனைவிக்காக இந்த ஹூராகென் ஸ்டெர்ராடோ கார் ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் மருத்துவர் சாமன் சோலேமணிக்கு லம்போர்கினி ரெவல்டோ கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இந்த தம்பதியினரின் லம்போர்கினி கார்களில் பவர்ஃபுல்லான வி12 மற்றும் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, ஒரே வீட்டிற்கு, ஒரே நாளில் வி12 மற்றும் வி10 என்ஜின் கார்கள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முறை என லம்போர்கினி ஷோரூம் அதிகாரி ஒருவர் கூறுவதை வீடியோவில் கேட்க முடிகிறது.

american husband and wife

சாமன் சோலேமணி அரான்சியோ சாண்டோ என்கிற பளிச்சிடும் ஆரஞ்ச் நிறத்தில் ரெவால்டோ காரை வாங்கியுள்ளார். இந்த ஆரஞ்ச் நிறத்தில் தான் ரெவால்டோ காரை லம்போர்கினி நிறுவனம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி வருகிறது. ரெவல்டோ ஆனது லம்போர்கினியின் மாடர்ன் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். சாமன் சோலேமணி மற்றும் அவரது மனைவி என இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் முதற்கட்டமாக 200 ரெவல்டோ கார்களை விஐபி கஸ்டமர்களுக்கு மட்டுமே டெலிவிரி செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. அந்த 200 ரெவால்டோ கார்களுள் ஒன்றை இந்த அமெரிக்க மருத்துவர் பெற்றுள்ளார். இவர் தனது மனைவிக்காக லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ காரை கடந்த ஆண்டில் புக் செய்தார். ஆனால், கார் இப்போதுதான் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அமெரிக்க தம்பதியினர் வாங்கியிருக்கும் இரு லம்போர்கினி கார்களும் ஸ்பெஷலானவை ஆகும். அதாவது, அமெரிக்காவில் 200 ரெவால்டோ கார்கள் மட்டுமே அதுவும் விஐபிகளுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறினோம். அதேபோன்று, சாமன் சோலேமணி அவரது மனைவிக்கு வாங்கி தந்திருக்கும் லம்போர்கினி ஹூராகென் ஸ்டெர்ராடோ காரும் உலகளவில் மொத்தமாகவே 1,499 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 18:29 [IST]
English summary
Lamborghini cars took delivery by husband and wife on same day check all details here
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X