தீ விபத்தில் சிக்கிய பின்னரும் இந்த காரு ஓடுச்சா!.. வாங்கினா இந்த மாதிரி தரமான காரைதான் வாங்கணும்!
தீ விபத்தில் சிக்கிய பின்னரும் கார் ஒன்று இயங்கும் நிலையில் இருந்தது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. லம்போர்கினி ஹூராகேன் ஈவோ (Lamborghini Huracan EVO), தீ விபத்தில் சிக்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த வீடியோவை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் சிங்கானியா-வும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த காரே தீ விபத்திற்கு பின்னரும் ஓடும் நிலையில் இருந்துள்ளது. இது காரை அவதூறாக பேசிய பலரின் வாயை அடைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
காரின் முன் பக்கத்திலேயே தீ பிடித்திருக்கின்றது. சில நிமிடங்கள் வரை காரை நெருப்பு பதம் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த கார் ஓடியிருக்கின்றது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தீ விபத்து நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இரவு 10.20 மணி அளவிலேயே அரங்கேறியது.

அந்த சமயத்தில் அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் விபத்தைத் தவிர்த்தனர். மேலும், காரும் முழுமையாக தீயிற்கு இரையாகமல் பத்திரப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே கார் தீ விபத்து குறித்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய எதிர்ப்பை செல்வந்தர் கவுதம் சிங்கானியா வெளிக்காட்டியிருந்தார்.
தொடர்ந்து, கார் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் கருத்து தெரிவித்தனர். இதனால், அந்த காரின் மார்க்கெட் மிகப் பெரிய பாதிப்பிற்கு ஆளாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையிலேயே, அனைவரையும் வாயடைத்து போக செய்யும் வகையில் லம்போர்கினி ஹூராகேன் கார் தீ விபத்திற்கு பின்னர் சீராக இயங்கக் கூடிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
இது ஆச்சரியத்தின் உச்சமாக பார்க்கப்படுகின்றது. தீ விபத்தில் இருந்து கார் மீள்வதே பெரிய விஷயம், இதில் இந்த கார் தீ விபத்தில் இருந்து மீண்டதோடு மட்டுமின்றி தற்போது இயங்கும் நிலையில் இருந்திருக்கின்றது. ஆனால், காரை அவர்கள் நீண்ட தூரம் இயக்கவில்லை. ஃபிளாட் பெட் வாகனத்தில் ஏற்றும் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
அப்போது அது சமத்து பிள்ளையை போல எந்த இடையூறும் இன்றி ஏறியது. இந்த வீடியோவே தற்போது கார் ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் இவ்வளவு தரமானதா என்கிற வியப்பையும் அநேகரின் மத்தியில் கிளப்பியிருக்கின்றது. காரின் தீ விபத்திற்கான முழுமையான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.
இதுகுறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பையிலேயே இந்த கார் விபத்து சம்பவம் அரங்கேறியது. இது குஜராத்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என கூறப்படுகின்றது. மணிக்கு 323 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஓர் சூப்பர் கார் மாடலே லம்போர்கினி ஹூராகேன் ஈவோ ஆகும்.
இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 2.9 செகண்டுகளே போதுமானது ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக இந்த காரில் 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி10 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 631 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இத்தகைய காரே தன்னுடைய சிறப்பான தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீ விபத்தில் செயல்பட்டு இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த காரின் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








