கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விலை உயர்ந்த சூப்பர் கார் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்வு எங்கு அரங்கேறியது? தீ வைக்கப்பட்ட அந்த சூப்பர் காரின் மதிப்பு என்ன? மற்றும் அது என்ன கார் மாடல் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலகின் விலை உயர்ந்த சூப்பர் கார் மாடல்களில் ஒன்றாக லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் கல்லர்டோ (Gallardo Spyder) இருக்கின்றது. இந்த கார் மாடலே நடு ரோட்டில் எரிந்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் தீப்பிடிப்பிற்கு பின்னால் மிகப் பெரிய காரணம் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

சூப்பர் கார் தீ விபத்திற்கு பின்னால் கொடுக்கல், வாங்கலே காரணமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே வேண்டுமென்ற அந்த காருக்கு தீ வைக்கப்பட்டு இருக்கின்றது. லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் காரின் இந்திய மதிப்பு ரூ. 1 கோடிக்கும் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காருக்கே தீ வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல் கார் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலேயே அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் சூப்பர் காரின் உரிமையாளர் பெயர் நீரஜ் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இவர் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடரை காரை விற்க முன் வந்திருக்கின்றார். ஆகையால், இதற்கான சரியான உரிமையாளருக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இதற்காக தன்னுடைய நண்பர்கள் சிலரின் உதவியையும் அவர் நாடி இருக்கின்றார். இந்த நிலையிலேயே நீரஜ்ஜின் நெருங்கிய நண்பரான அமன் ஹெய்டர் வாயிலாக அவருடைய நண்பர் அஹமத் என்பவர் நீரஜைத் தொடர்புக் கொண்டிருக்கின்றார்.
தான் காரை வாங்கிக் கொள்வதாகவும், அந்த காரை மமிதிபள்ளியில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டிற்கு எடுத்து வருமாரு அவர் கூறி இருக்கின்றார். இதையடுத்து, அமன் மற்றும் ஹம்டன் ஆகிய இருவரும் காரை மமிதிபள்ளியில் உள்ள அஹமத் வீட்டிற்கு எடுத்தச் செல்வதாகக் கூறி காரை கொண்டுச் சென்றிருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் அஹமத் கூறி மமிதிபள்ளிக்கு காரைக் கொண்டு செல்லாமல் அவர்கள் ஹைதராபாத் விமானநிலையம் வழியாக அக்காரை எடுத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், கார் வீட்டுக்கு வரும் என அஹமத்தும் அவரது நண்பர்கள் சிலரும் அவரது வீட்டில் நீண்ட நேரமாக காத்திருந்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே அஹமத்தும் அவரது நண்பர்களும் அமனைத் தொடர்புக் கொண்டு கார் எங்கே என கேட்டிருக்கின்றனர்.
அப்போது நீரஜ் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும், அதை தந்தால் கார ஒப்படைப்போம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருக்கின்றது. இந்த நிலையிலேயே கோவத்தின் உச்சிக்கு சென்றிருக்கின்றனர் அஹமத்தும், அவரது நண்பர்கள் பட்டாளம்.
இந்த நிலையிலேயே அவர்கள் வேண்டுமென்றே கார் மீது பெட்ரோலை ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களின் மோதலில் அரிய வகை கார் மாடலான லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் முற்றிலுமாக எரிந்து நாசமாகி இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்து வழக்கு பதிவு செய்த ஹைதராபாத் போலீஸார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் காதலர்கள் பலரின் கனவு வாகனமாக லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் சூப்பர் கார் இருக்கின்றது. மேலும், இது ஓர் அரிய வகை கார் மாடலாகும். உலக அளவில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவேதான் இது அரிய கார் மாடலாக பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








