இந்தியா ஏழை நாடு என்று சொன்னால் நம்பாதீங்க... தமிழ்நாட்டு லம்போர்கினி கார் கூட இருக்குது!!

லம்போர்கினி (Lamborghini) கார்களை சாலையில் காண்பது பெரும்பாலும் அரிதான ஒன்றே. டெல்லி, மும்பை போன்ற மாநகரங்களில் கூட அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்கள் வசிக்கும் பகுதிகளில் வேண்டுமானால் லம்போர்கினி கார்களை பரவலாக காண முடியும். மற்றப்படி, நம் சென்னையில் கூட லக்போர்கினி கார்களை சாலையில் காண்பது அரிதானதே ஆகும். ஆனால் இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரே நேரத்தில் சுமார் 71 லம்போர்கினி கார்கள் உலா சென்றுள்ளன. எதற்காக இந்த லம்போர்கினி கார் ஊர்வலம் என்பதையும், எங்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் இந்தியா எந்த அளவிற்கு ஏழ்மை நாடு என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதே அளவிற்கு பணக்கார நாடும் கூட. அதற்கு இங்குள்ள லக்சரி கார் உரிமையாளர்களின் எண்ணிக்கை தான் சாட்சியாகும். நம் நாட்டில் நிறைய பேரிடம் லக்சரி கார்கள் இல்லையென்றாலும், வைத்திருக்கும் சிலரை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தாலே பல ஆயிரங்கள் கடந்துவிடும்.

lamborghini cars passed through mussoorie

இருப்பினும், இந்தியாவில் லக்சரி கார்களை வைத்திருப்பவர்களும் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார்களை தான் வைத்துள்ளனர். லம்போர்கினி, ஃபெராரி போன்ற லக்சரியான ஸ்போர்ட்ஸ் கார் உரிமையாளர்கள் நம் நாட்டில் குறைவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், ஒரு நகரத்தில் ஒரே நேரத்தில் 71 லம்போர்கினி கார்கள் ஊர்வலமாக சென்றுள்ளன.

அந்த நகரம் வேறொன்றும் இல்லை, உத்தரகாண்ட் மாநிலத்தில் முசூரி ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டெஹ்ராடூனில் உள்ள ஒரு மலைப்பிரதேச நகரம் முசூரி ஆகும். பழங்காலத்தில் உத்தரகாண்டின் முக்கியமான வணிக பகுதிகளுள் ஒன்றாக விளங்கிய முசூரி அதன் கம்பீரமான நிமிர்ந்த மலைத்தொடர்களினால் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இத்தனைக்கும், முசூரிக்கும் இமயமலை தொடருக்கும் பல கிமீ தொலைவு உள்ளது.

lamborghini cars passed through mussoorie

சிம்லா அளவிற்கு இல்லையென்றாலும், முசூரிக்கும் வருடந்தோறும் லட்சக்கணக்கிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில், லம்போர்கினி உரிமையாளர்கள் ஒன்றாக இணைந்து தங்களது கார்களில் முசூரிக்கு சென்றுள்ளனர். கண்ணை கவரக்கூடிய பல்வேறு வண்ண நிறங்களில் மொத்தம் 71 லம்போர்கினி கார்கள் முசூரியின் அழகான மலைச்சாலைகளில் சென்றுள்ளன.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. லம்போர்கினி கார்களை பெரும்பாலானோர் மஞ்சள் நிறத்தில் வாங்கவே விரும்புவர். ஆனால், இந்த ஊர்வலத்தில் மஞ்சள், சிவப்பு, கருப்பு என பல நிறங்களில் லம்போர்கினி கார்கள் சென்றன. இவ்வளவு ஏன், மிகவும் அரிதாக தென்படக்கூடிய பச்சை நிற லம்போர்கினி கார் கூட இந்த ஊர்வலத்தில் சென்றுள்ளது.

lamborghini cars passed through mussoorie

முசூரியின் பிசியான சாலையில் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் இந்த 71 லம்போர்கினி கார்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஒரேடியாக இத்தனை லம்போர்கினி கார்களை பார்த்ததும் சுற்றியிருந்தவர்கள் ஆச்சிரியத்தில் திகைத்து நிற்பதை வீடியோவில் காணலாம். இன்னும் சில பேர், இந்த லம்போர்கினி கார்களை பார்ப்பதற்காகவே தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.

லம்போர்கினி கிரோ (Giro) என்கிற பெயரில் இவ்வாறான ஊர்வலங்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. லம்போர்கினி கார்களின் ஸ்டைலையும், பெர்ஃபார்மன்ஸையும் பொது உலகிற்கு காட்டும் விதமாக லம்போர்கினி கார் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் இந்த பேரணி நடத்தப்படுகிறது. தற்போது முசூரியில் நடத்தப்பட்டுள்ள பேரணியில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களின் நம்பர் பிளேட்களை கொண்ட லம்போர்கினி கார்கள் பங்கேற்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் தமிழ்நாட்டில் லம்போர்கினி கார்களை வைத்திருப்பவர்களும் இவ்வாறான பேரணிகளில் கலந்துக் கொள்கின்றனர் என்பதை இவ்வாறான வீடியோக்களை பார்க்கும்போது தான் தெரிய வருகிறது. இவ்வாறான பேரணிகளினால் லம்போர்கினி கார் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமின்றி, லம்போர்கினி கார்களுக்கும் நல்ல விளம்பரமாக அமைகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 8:00 [IST]
English summary
Lamborghini giro 2024 totally 71 cars passed through mussoorie uttarakhand
மேலும்... #lamborghini #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X