டோல் கேட்ல நிற்கனும்ற அவசியம்கூட இல்ல.. இந்த காரை வச்சிருந்தா ஒத்த பைசா கட்டாம அப்படியே போயிடலாம்!

இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே சூப்பர் கார் ஒன்று டோல்கேட்டில் கேட் போட்ட பின்னரும் நிற்காமல் செல்லும் வீடியோக் காட்சிகள் வெளியாகி உள்ளன. கட்டணமே செலுத்தாமலேயே அந்த கார் தப்பி சென்று இருக்கின்றது. வாகனம் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக கேட் போட்ட பின்னரும் இவ்வாறு தப்பிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. காரின் உயரம் மிகவும் குறைவானது என்பதால் அந்த காரால் இதை செய்ய முடிந்திருக்கின்றது.

ஆகையால், வரும் நாட்களில் டோல்கேட்டுகளில் கேட்டுகள் இன்னும் தாழ்வாக இனி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக வேகத்தில் செல்வதற்கு ஏற்ற கார்களாக சூப்பர் கார்கள் அறியப்படுகின்றன. இந்த நிலையிலேயே டோல்கேட்டில் இருந்து பணம் செலுத்தாமல் தப்பி செல்ல ஏற்ற கார்கள் இவை என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

Lamborghini huracan skips toll payment

இப்போது நாடு முழுக்க ஃபாஸ்டாக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த காரில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருக்கின்றதா என்பது தெரியவில்லை. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் எனில் தானாகவே அந்த காருக்கான டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இந்த காரில் பாஸ்டேக் ஒட்டப்பட்டதாக தெரியவில்லை.

இதேபோல், நம்பர் பிளேட்டும் இந்த காரில் இடம் பெற்றிருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே அவர்கள் டோலுக்கு காசு கட்டாமல் தைரியமாக தப்பிச் சென்றிருக்கின்றனர். மிகவும் காஸ்ட்லியான காரில் வந்துவிட்டு 500 ரூபாய்கூட இல்லாத கட்டணத்தை இவர்களால் செலுத்த முடியாதா என்பதே பலரின் கேள்வியாக அமைந்திருக்கின்றது.

லம்போர்கினி ஹூராகேன், இந்த கார் மாடலே டோல் கேட்டில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற சூப்பர் கார் மாடல் ஆகும். இதன் கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 4 கோடி தொடங்கி ரூ. 4.99 கோடி ஆக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இவ்வளவு விலை கொடுத்து காரை வாங்கவிட்டா டோலுக்கு காசு கொடுக்காம அவங்க போயிருக்காங்க என்பத பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது. மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட கார் மாடலே லம்போர்கினி ஹூராகேன் ஆகும். இதன் அதீத வேக திறனுக்காக 5.2 லிட்டர் வி10 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Take a Poll

இது அதிகபட்சமாக 640 பிஎச்பி மற்றும் 565 என்எம் டார்க் வரை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட ல் வெறும் 3.2 செகண்டுகளே போதுமானது என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய வேகத்தையே நொடிப் பொழுதில் எட்டி டோல் கேட்டில் கட்டணம் செலுத்தாமல் தப்பி சென்றிருக்கின்றனர். 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் மற்றும் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் உள்ளிட்டவை லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடு முழுக்க டோல்கேட்டில் வரி வசூலிப்பதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சூப்பர் கார் உரிமையாளர்களுக்கு லம்போர்கினி கார் உரிமையாளர் டோல் கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பது எப்படி என்கிற வித்தையை கற்றுத் தந்திருக்கின்றார்.

ஆகையால், வரும் நாட்களில் இந்த லம்போர்கினி கார் உரிமையாளரை போலவே இன்னும் பல உயரம் குறைவான கார்களைக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் இப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே வரும் நாட்களில் டோல் ஊழியர்கள் அதிக ஜாக்கிரதையுடன் செயல்பாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டோல்கேட்டுகளின் கேட்டுகளின் உயரத்தை அவர்கள் குறைத்தும் அல்லது வேறு ஏதேனும் தடையை வைத்தும் அவர்கள் வாகனங்களை தடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

FAQs
சுங்கச் சாவடி கட்டணம் யாரெல்லாம் செலுத்த தேவையில்லை?

கோர்ட் நீதிபதிகள், தலைமைச் செயலகம், பாராளுமன்றத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், அவசர உதவி வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவையும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை.

தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் எத்தனை செயல்படுகின்றன?

72க்கும் அதிகமான சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுங்க கட்டணம் ஏன் வசூலிக்கப்படுகின்றது?

நெடுஞ்சாலை அமைக்க ஏற்கனவே செலவிட்ட தொகையை மீட்கவும், நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவும், அதை பராமரிப்பதற்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2025, 18:26 [IST]
English summary
Lamborghini huracan bypasses toll barrier leaving collectors in shock
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+