டாடா இண்டிகாவுடன் மோதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்!

Written By:

சூப்பர் பைக்குகள், சூப்பர் கார்கள் விற்பனை இந்தியாவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மறுபுறத்தில் இதுபோன்ற சக்திவாய்ந்த கார்களும், பைக்குகளும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் சாலை பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றன.

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

பெங்களூரில் கவாஸாகி நின்ஜா சூப்பர் பைக் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து நேற்று நாம் பதிவிட்டிருந்த நிலையில், அடுத்து லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் ஒன்றும் அங்கு விபத்தில் சிக்கியது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Picture Credit: Team BHP

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் டாடா இண்டிகா காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் லம்போர்கினி சூப்பர் காரின் முன்புற பம்பர் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

Picture Credit: Team BHP

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

அலாய் வீல்களும் உடைந்துவிட்டன. முன்புற மோதல் காரணமாக ஓட்டுனர் பக்கத்திற்கான உயிர் காக்கும் காற்றுப் பை விரிவடைந்துள்ளது. இந்த விபத்துக்கு டாடா இண்டிகா டிரைவர் காரணமா அல்லது ஹூராகென் காரை ஓட்டியவர் காரணமா என்பது தெரியவில்லை.

Picture Credit: Team BHP

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

விபத்து நடந்த பின் அவ்வழியாக சென்ற நிதின் சுர்விக் என்பவர் இந்த படங்களை எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார். எனவே, இந்த விபத்துக்கான காரணம், காரில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

அதேநேரத்தில், பெரிய அளவில் காயமடைந்திருக்க வாய்ப்பில்லை என்று கருத முடியும். இதுபோன்ற விபத்துக்கள் சக்திவாய்ந்த சூப்பர் கார் மற்றும் சூப்பர் பைக்குகள் விற்பனையில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வருவது கட்டாயமாக தெரிகிறது.

டாடா இண்டிகாவும், லம்போர்கினி சூப்பர் காரும் மோதி விபத்து!

தவிரவும், சூப்பர் கார் மற்றும் சூப்பர் பைக்குகளை விற்பதற்கு முன்னர் அவர்களுக்கு, விசேஷ ஓட்டுனர் பயிற்சியை வழங்கிய பின்னரே விற்பனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lamborghini Huracan crashes into a Tata Indica In Bangalore.
Story first published: Thursday, June 8, 2017, 15:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark