உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!
தன் ஆசை மனைவிமீது வைத்திருக்கும் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய இளைஞர் ஒருவர், உலகின் அதிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றான, லம்போர்கினி ஹூராகேன் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தன் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக, காதல் மனைவி மும்தாஜிக்காக தாஜ்மஹால் எனும் மாளிகையை கட்டினான் ஷாஜகான். ஆனால், தற்போதைய இளைஞர்களோ தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பிடித்தமான பரிசுகளை, சர்ப்ரைஸாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய இளைஞர் ஒருவர் உலகின் அதிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை, அவரது மனைவிக்கு ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவினை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இந்த பாசமிகு தருணம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

முன்னதாக, இதுபோன்று மனைவிக்கு காரை பரிசாக வழங்கும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிக நடைபெற்று வருகின்றன. அதுகுறித்த பல்வேறு தகவலைகூட நாம் படித்திருப்போம். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் இந்த சூப்பர் கார், விலையுயர்ந்தது மட்டுமின்றி, இந்தியாவிலேயே மிக குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு ஓர் செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், லம்போர்கினி நிறுவனத்தின், ஹூராகேன் வரிசையில் விற்பனையாகும் எல்பி 580-2 மாடலை கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியடப்பட்டது (இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்).

இதில் சிறப்பானது என்னவென்றால், இந்த மாடல் காரை, இந்தியாவிலேயே வாங்கிய இரண்டாவது அவர் என்பதுதான். இவ்வாறு, பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிறப்புகளைப் பெற்றதாக லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் மாடல் இருக்கின்றது. இதன்காரணமாகவே, தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் கார், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

கர்நாடாக மாநிலம் பெங்களூருவில்தான், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலுஃபர் ஷெரீஃப் என்ற இளைஞர்தான் அவரது மனைவிக்கு விலையுயர்ந்த, லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 சூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார். இவர், புகழ்வாய்ந்த லா ஃபெம்மே நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.

லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் எல்பி 610-4 மாடல் இந்தியாவில் ரூ. 3.7 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், இது பெங்களூரு ஆன்-ரோட்டில் ரூ. 4.8 கோடிக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ஹூராகேன் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 3 கோடியாக இருக்கின்றது. தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் ஹூராகேன் மாடல், டாப் வேரியண்ட்களில் ஒன்றாக இருக்கின்றது. லம்போர்கினி ஹூராகேன் மாடலின் எடைக் குறைப்பிற்காக கார்பன் ஃபைப்பர் மற்றும் அலுமினியத்தால் அதன் பாடி உருவாக்கப்பட்டுள்ளது. இது காருக்கு மிக லேசான எடையைக் கொடுப்பதுடன், மிக உறுதியானதாக இருக்கின்றது.

அதேசமயம், இந்தியாவின் சாலைகளில் கணிசமான அளவில் லம்போர்கினி ஹூராகேன் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், இந்தியாவின் கரடு முரடான சாலைக்கு ஏதுவானதாக இருக்க 45மிமீ அளவிலான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. இது, சற்று உயரமான வேகத்தடை மற்றும் பள்ளம் மேடுகளில் பயணிக்க உதவுகின்றது.

லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 மாடலில் 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி10 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 602 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3 விநாடிகளிலேயே தொட்டுவிடும். மேலும், இந்த எஞ்ஜினில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, அதன் பெயருக்கேற்ப பயண அனுபவத்தை வழங்கும். காதலின் வெளிப்பாடாக நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முக்கியமாக இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகின்றது. இதனை நீங்கள் கீழே காணலாம்.
இதற்கு முன்னதாகவும் இதேபோன்றதொரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், அரபு நாட்டில் பணி புரிந்துவரும் சோகன் ராய் என்பவர், அவரது மனைவிக்கு ரோல்ஸ் ராய்ஸின் கல்லினன் காரை பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த காரை அவர்களது 25வது திருமண நாளை முன்னிட்டு அவர் வழங்கியிருந்தார். இதன்மூலம், உலகிலேயே, ரோல்ஸ் ராய்ஸின் கல்லினன் காரை சொந்தமாக வைத்திருக்கும் முதல் பெண்ணாக அவர் மாறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








